பட விளக்கம்( பழைய படம் ):- சென்ற வருடம் ஆகஸ்ட் 30ந் தேதி கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி.கலாவதி தலைமையில் போலீசார் சோதனை நடத்திய போது எடுத்த படம்
கீழக்கரையில் மாதம் 5 நாட்கள் மட்டும் பணிக்கு வரும் நகராட்சி கமிஷனர்!
கீழக்கரை.பிப்.26 கீழக்கரை நகராட்சி அலுவலகத்திற்கு ,கடந்த சில மாதங்களுக்கு முன் ராமேஸ்வரத்தில் பணிபுரிந்த போஸ் கீழக்கரை நகராட்சி ஆணையாளராக மாறுதலாகி வந்தார்.இவர் மாதத்தில் 5 நாட்கள் மட்டும்தான் பணிக்கு வருகிறார். மீதி நாட்கள் சொந்த ஊரிலேயே தங்கி விடுகிறார்.இதனால் நகராட்சி பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு கீழக்கரை நகராட்சியில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் அலுவலர்களில் ஒரு சிலர் சரி வர பணிபுரிவதில்லை மேலும் ஏழைகளில் வறுமையை பயன்படுத்தி வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து கந்து வட்டி தொழிலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. கந்து வட்டியில் கொழிக்கும் இந்த அலுவலர்கள் அரசின் முழு சம்பளத்தை பெறுகிறார்கள் ஆனால் இவர்கள் பகுதி நேரமாகத்தான் நகராட்சியில் பணியாற்றுகிறார்கள்.
அது மட்டுமின்றி கட்டிட வரைபடம் அனுமதி பெறுவதற்கும்,வரி மாற்றுவதற்கும்,பணிகளை விரைவாக முடிப்பதற்க்கு பொதுமக்களிடம் குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக கேட்பதாக கூறப்படுகிறது.பணம் கொடுக்க மறுப்பவர்களுக்கு பணிகள் தாமதப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.இவர்களை போன்ற ஒரு சிலர் செய்யும் தவறால் நேர்மையாக பணி புரியும் மற்ற அலுவலர்களுக்கும்தொந்தரவு ஏற்படுகிறது.லஞ்சம் வாங்குவதும் ,கொடுப்பதும் குற்றம் என்று கொட்டை எழுத்தில் பலகையில் எழுதி நகராட்சி அலுவகத்தி நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ளது.இது இவர்களுக்கு பொருந்தாது போலும்.
இது குறித்து கீழக்கரையை சேர்ந்த மூதாட்டி செய்யதலி பாத்திமா கூறியதாவது, வரி மாற்றம் செய்வதற்கு பல முறை நகராட்சி வந்து விட்டேன். ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை ,நாளை,நாளை என்று நாட்களை கடத்துகிறார்கள்.பணம் கொடுத்தால்தால் வேலை சீக்கிரம் நடக்கும் என்று பக்கத்து வீட்டுக்காரர்கள் சொல்கிறார்கள் ஆனால் என்னிடம் வசதி இல்லை. என்கிறார் வருத்ததோடு...
இது குறித்து மாவட்ட நிர்வாகம் ரகசியமாக கண்காணித்து சட்டத்திற்க்கு விரோதமாக செயல்படும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த வருடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கீழக்கரை நகராட்சியி அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தி 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து சம்பந்தபட்டவர்களை பணி இடை நீக்கம் செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.