Monday, February 21, 2011

டீக்கடைகளில் 'சரக்கு' சப்ளை ! தேவை நடவடிக்கை


பார்களுகளுக்கு சென்று உற்சாகம் ஏற்ற பயப்படும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து,கீழக்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் டீ கடைகள் மினிபார்களாக மாறும் விபரீதம் நிலவுகிறது. கீழக்கரை மற்றும் சுற்றுப்புற பகுதுகளில் ஏராளமான பள்ளி ,கல்லூரி மாணவர்களை தவறான வழிக்கு திருப்பும் வகையில் இந்த பகுதிகளில் உள்ள ஒரு சில டீக்கடைகளில் காபி ,டீ தவிர "மதிப்புகூடுதல் சேவையாக" சரக்கு விற்பனையும் நடக்கிறது

டாஸ்மாக் கடைகளில் இருந்து மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி இந்த கடைகளில் ஸ்டாக் வைத்து கொள்கிறார்கள். கடைக்கு வரும் 'ரெகுலர் கஸ்டமர்களுக்கு'அதற்கென உள்ள தனி டேபிளில் சகல வசதிகளுடன் 'கவனிப்பு' நடக்கும்.ஒரு வாய் உள்ளே சென்றதும் கடிக்க ,கொறிக்க சகலமும் டேபிளுக்கு வந்து சேர்வதால் 'குடிமகன்கள்' எந்த கவலையுமின்றி பரிபூரண 'மிதப்பு நிலையை எட்டுகின்றனர்' குடிமகன்கள் தவிர வெளியூரில் இருந்து இங்கு தங்கி கல்லூரிகளில் படிக்கும் சில மாணவர்களும் இங்கு வருகின்றனர்.வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு படித்து களைத்த மாணவர்கள் பாவம்... தேநீர் குடிக்கிறார்கள் என்கிற தோற்றம் தான் தெரியும்.

இப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில் ,டீ கடைகள் என்ற போர்வையில் நடக்கும் இந்த செயல்களை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் ஒரு சில கடைகளில் நடக்கும் இந்த செயல்களால் ஊரில் உள்ள அத்தனை டீக்கடைகளுக்கும் கெட்ட பெயர் வந்து சேரும்.அப்பாவி மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள். மதுக்கடைக்கு சென்றால் ,மற்றவர்களுக்கு தெரிந்து விடும் என்று ஒதுங்கி இருக்கும் ஒரு சில பெரிய மனிதர்களும் இங்கு வந்து குடிக்கிறார்கள் .உடனடி நடவடிக்கை அவசியம் என்றார்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.