Sunday, February 20, 2011

ரூ300 கோடியில் திட்டம் ! கீழக்கரைக்கும் வாய்ப்பு தாருங்கள்

கீழக்கரை.பிப்.21இந்தியாவில் உள்ள 13 கலங்கரை விளக்கங்களை மேம்படுத்தி சுற்றுலாதலமாக்கும் திட்டத்தைமத்திய அரசு சமீபத்தில் துவக்கியது.தமிழகத்தின் மாமல்லபுரம்,ராமேஸ்வரம்,கன்னியாக்குமரி,முட்டம்

சென்னை மெரினா ஆகிய பகுதிகளிலுள்ள கலங்கரை விளக்கங்கள் இத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.ரூ 300 கோடி மதீப்பீட்டிலான மத்திய கபபல் துறை அமைச்சர் வாசன் கடந்த 12ம் தேதி துவக்கி வைத்தார்.மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்தில் பாரம்பரிய அருங்காட்சியகம் அமைத்தல்,சென்னை மெரினாவில் கலங்கரை விளக்க அருங்காட்சியகம் அமைத்தல் என பணிகள் நடைபெற உள்ளன. சுற்றுலாதொழிலை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு அறிவித்துள்ள இந்த திட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள கலங்கரை விளக்கமும் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

சென்னை கலங்கரை விளக்க மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் ,கீழக்கரை கலங்கரை விளக்கம் 1979ம் ஆண்டு அமைக்கப்பட்டது.இது 35 மீட்டர் உயரம் கொண்டது பரந்து விரிந்த நீலக்கடலோரத்தில் மைந்துள்ள கீழக்கரையையோட்டி ,அப்பாத்தீவு உள்பட ஏராளமான குட்டி தீவுகள் உள்ளன.கடற்கரையை ஓரம் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன.வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் இப்பகுதிக்கு சுற்றுலா வநது செல்கினறனர்.

கீழக்கரையை சுற்றுலாத்தலமாக அறிவித்து அருகே அமைந்துள்ள குட்டி தீவுகளுக்கு சென்று வர கண்ணாடி இழை படகுகள் விட வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதோடு மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள கலங்கரை விளக்கங்களை மேம்படுத்தி சுற்றுலா தலமாக்கும் திட்டத்தில் கீழக்கரையையும் இணைக்க வேண்டும் என கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

இது குறித்து கீழக்கரையை சேர்ந்த ஹாஜா கூறியதாவது, இது வரை அரசு சார்பில் தொழில் வாய்பை ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டமும் கீழக்கரையில் செயல்படுத்தபடவில்லை .இந்த திட்டத்திலாவது கீழக்கரை இணைக்கப்பட்டு இப்பகுதியில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.இந்த திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு சுற்றுலாதலமாக்கும் பட்சத்தில் இப்பகுதியில் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் .மேலும் கடல் பகுதி சுத்தாமவதற்கும் இது ஒரு வாய்ப்பாகும். இது தொடர்பாக ராமநாதபுரம் எம்.எல். அசன் அலி, ரித்தீஸ் .எம்பி,அமைச்சர் சுப.தங்கவேலன் போன்றோர் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.