Sunday, February 27, 2011

துபாயில் 40 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த கீழக்கரை சகோதரர்கள்



பட விளக்கம்:- துபாயில் 40ஆண்டுக்கு பிறகு சந்தித்த சகோதரர்கள் முஜம்மில் மற்றும் கொழும்பு ஜம் ஜமி

கீழக்கரை.பி.27.துபாயில் இணைந்த கீழக்கரை சகோதரர்கள் கீழக்கரையை சேர்ந்தவர் மறைந்த முகைதீன் இப்ராகிம் நெய்னா மகன் முஜம்மில் இவர் சென்னை புரசைவாக்கத்தில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.இவர்கள் குடுமபத்துடன் சென்னையில் வசித்து வருகின்றனர். முஜம்மில் வியாபார நிமித்தமாக ஒரு வார காலத்திற்க்கு துபாய் சென்றிருந்தார்.

இந்நிலையில் அவரது தந்தையின் சகோதாரர் பாரூக் அவர்கள் குடும்பத்துடன் வியாபார நிமித்தமாக கொழும்பு சென்று கொழும்பிலேயே அந்நாட்டின் குடியுரிமை பெற்று தங்கி விட்டனர். இதனால் இரு சகோதார்களின் குடும்பத்தினரும் 40 வருடமாக நேரில் சந்தித்து கொள்ளும் சூழ்நிலை அமையாமல் இருந்து வந்தது.கொழும்பில் வசித்து வரும் பாருக் மகன் ஜம் ஜமி(40) துபாயில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் துபாய் ஹோட்டலில் உணவுக்காக சென்றிருந்த முஜம்மில் யதார்த்தமாக தனது இளைய தந்தையின் மகன் ஜம் ஜமியை சந்திக்க நேர்ந்தது.அப்போது இருவரும் உரையாடிய போது இருவரும் சகோதரர்கள் என்பதை தெரிய வந்த போது இருவரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.சகோத்ரர்கள் இருவரும் தங்கள் குடும்பத்தினருடன் தாங்கள் சந்தித்த மகிழ்ச்சியை பரிமாறி கொண்டனர்.

இது குறித்து முஜம்மில் கூறியதாவது, வியாபார நிமித்தமாக துபாய் வந்த எனக்கு 35 வருடத்திற்கு பிறகு எனது சகோதரரை சந்தித்தது மனதுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்துள்ளது.விரைவில் கொழும்பு சென்று எனது குடும்பத்தாரை சந்திக்கவுள்ளேன் என்றார்

1 comment:

  1. MATHIPIRIKURIA IYYA

    UNGALIN SEVAI NALLAPADIAYAHA THODARA VALTHUM NENCHAM BY KEELAINANBAR

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.