Wednesday, August 17, 2011

கீழக்கரையில் வற்றாத ஜீவ நதியாக சாலைகளில் கழிவு நீர்! பொது மக்கள் அவதி (படங்களுடன்)

கீழக்கரை புது தெருவில்

கவுன்சிலர் ஹமீது கான்
ஓடக்கரை பள்ளியை சேர்ந்த பேங்க்
நிரோஸ்கான்

வடக்கு தெரு சாலையில்


எஸ் .எண் .தெருவில் சாலைகளில் வழிந்தோடும் கழிவு நீர்

கீழக்கரையில் குப்பை கொட்டும் பிரச்சினையால் குப்பைகள் நிறைந்து சுகாதார சீரழிவில் சிக்கி தவிக்கிறது.தற்போது மற்றுமொரு பிரச்சினையாக நகரெங்கும் சாக்கடை தண்ணீர் வழிந்தோடி நகர‌த்தில் பல இடங்கள் அசுத்தமாக காணப்படுகிறது.
கீழக்கரையில் பல இடங்களில் சாக்கடை நீர் வெளியேற்றுவதற்காக கட்டப்பட்டுள்ள கால்வாய்களில் உடைப்பு மற்றும் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவு நீர் தேங்கி நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.நகராட்சியில் புகார் செய்தால் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை என்று கூறப்படுகிறது. உடனடியாக நிர்வாகம் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுகக வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து வள்ள்ல் சீதக்காதி சாலையில் கடை நடத்தும் ஜமீல் கூறியதாவது, இது தெருக்களில் தான் கழிவு நீர் ஓடி கொண்டிருந்தது தற்போது மெயின் ரோடில் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது.உடனடி நடவடிக்கை தேவை என்றார்.

கிழக்கு தெரு முகம்மது காசிம் அப்பா தர்ஹா பகுதியை சேர்ந்த நிரோஸ்கான் கூறியதாவது, எங்கள் பகுதியில் சாக்கடை நீர் தான் முதன்மை அடையாளமாக மாறும் அளவுக்கு கழிவு தேங்கி நிற்கிறது என்றார்.

ஓடக்கரை பள்ளியை சேர்ந்த பேங்க் கூறுகையில் , கழிவு நீர் பிரச்சினை தற்போது பூதாகாரமாக வெடித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட வேண்டும் என்றார்.


2 comments:

  1. இரண்டம் படத்தில் இருப்பவர் ஒரு வார்டு உடைய கவுன்சிலர் ...அவர் தன்னுடைய வார்டு மக்களுக்கு என்ன செய்தார் என்று சற்று சிந்தித்து பார்த்துவிட்டு அடுத்தவர் வார்டில் தவறை கண்டுபிடித்தல் என்ன நியாயம் ???

    கவுன்சிலர் , மற்றும் காங்கிரஸ் நகர தலைவர் அவர்களே !!! தங்கள் என்ன நன்மை செய்தீர் ...படில்யல் இடுங்கள் அது அடுத்த உள்ளாச்சி தேர்தல்லில் உங்களிக்கு நன்மை பயக்கும் !!!!
    மறுமைக்கு அஞ்சிக்கள் ...நிதி செலுதுகள் ....
    இறைவனுடைய சாந்தி உண்டஹடும் !!!!

    குறிப்பு : இவர் இரண்டோ அல்லது முன்று முறை கவுன்சிலர் பதவியை அனுபவித்தவர் !!!

    ReplyDelete
  2. நிரொஸ் கானே ஒரு குப்பை. ......... அந்த குப்பை....... இந்த குப்பையை பத்தி பேசுதோ? !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.