

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்,மனித நேய மக்கள் கட்சி ,மாவட்ட பார்வை தடுப்பு இழப்பு சங்கம்,மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் மருத்துவ முகாம் கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா அரபி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இம்முகாமில் ஏராளமான பொது மக்கள் பங்கு பெற்று பயன் பெற்றனர். ஜவாஹிருல்லாஹ்.எம்.எல்.ஏ கலந்து கொண்டு இம்முகாமை துவங்கி வைத்தார். கீழக்கரை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா உள்பட ஏராளமானோர் இம்முகாமிற்கு வருகை புரிந்தனர்
மருத்துவ முகாம்கள் நடைபெற்றதை வெளியிடுவதை விட நடை பெறுவதற்கு முன் அறிவிப்பு வெளியிட்டால் எல்லோரும் பயன் பெறுவார்கள். இல்லையென்றால் இது வெறும் விளம்பரமாக தான் கருத முடியும்!
ReplyDelete