Tuesday, January 10, 2012

கீழக்கரைக்கு விரைவில் பெண் மருத்துவர் !அமைச்சர் பேட்டி !




கீழக்கரைக்கு வருகை புரிந்த தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் சுந்தர்ராஜன் கீழக்கரை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.மருத்துவர் ஜவாஹிர் ஹுசைன் அமைச்சருக்கு மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறினார் பின்னர் உள் நோயாளிகளிடம் குறை கேட்டார்.
அவருடன் நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா,துணை தலைவர் ஹாஜா முகைதீன்,கமிஷனர் முஜிபு ரஹ்மான் மற்றும் கீழக்கரை அதிமுக நிர்வாகிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.
அமைச்சர் அளித்த பேட்டியில் ,
கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு ஜெனரேட்ட தேவை என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆகையால் இன்னும் ஒரு மாதத்தில் ஜெனரெட்டர் வைக்கப்படும்.
அரசு மருத்துவமனையை சுற்றி சுற்றியும் செடி கொடிகள் நிறைந்துள்ளது இதை உடனடியாக அகற்றவதற்கு நகராட்சி கமிஷனரிடம் உத்தரவிட்டுள்ளேன்.
கீழக்கரைக்கு விரைவில் பெண் மருத்துவர் நியமிக்கப்படுவர் என்றார் .

மேலும் அமைச்சரிடம் சர்க்கரை நோய் மருந்து தட்டுப்பாடு இங்குள்ள மருத்துவமனையில் நிலவி வருவது குறித்து கேட்ட போது ,தற்போது போதிய அளவு இருப்பு உள்ளது இனி தட்டுப்பாடு இருக்காது என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.