Saturday, October 12, 2013

(காலமானார்கள்) வபாத் அறிவிப்பு !


கீழக்கரை நடுத் தெரு ஜும்மாப் பள்ளி ஜமாத்தை சேர்ந்த சின்னக்கடைத் தெரு மர்ஹூம். ஜனாப். A.S அபுதாஹிர் (தாஹிர் ஹார்டுவேர்ஸ்) அவர்களின் மகனாரும், அப்பாஸ் கான், நவாஸ் கான், சலீம் கான், பைரோஸ் கான் ஆகியோர்களின் சகோதரரும், மர்ஹூம். களஞ்சியம் காதர் முகைதீன் அவர்களின் மருமகனும், ஜாவித் களஞ்சியம் அவர்களின் மாமனாரும், தாஹிர் இபுறாஹீம் அவர்களின் தகப்பனாருமாகிய 'A.S முஸ்தபா கான்' அவர்கள் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சென்னையில் வபாத்தாகி விட்டார்கள்.

(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்).

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை சென்னை புரசைவாக்கத்தில் நடை பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மர்ஹூம். A.S முஸ்தபா கான் அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு : பைரோஸ் கான் 98409 50555

தகவல் : கீழை இளையவன்

1 comment:

  1. கீழக்கரை அலி பாட்சாOctober 12, 2013 at 7:00 PM

    12/10/2013 சனிக்கிழமை

    அஸ்ஸலாமு அலைக்கும். வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹூ

    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

    வார்த்தை எதுவுமே இல்லை கண்ணீரைத் தவிர.

    அன்னாரின் மஃபிரத்துக்கும், ரஹ்மானின் கருணையினால் ஜன்னத் பிர்தவுஸில் நற்பதவி கிடைக்கவும்,கண்மணி செய்யதினா ரசூலே கரீம் ஸல்லாஹு அலைஹி வ ஸல்லத்தின் ஷபாத் கிடைக்கவும் நீராடும் கண்களோடும் விம்மும் நெஞ்சத்தோடும் இரு கரம் ஏந்தி ஏக இறைவனிடத்தில் இறைஞ்சுகின்றோம், மன்றாடுகிறோம்.ஆமீன்

    இந்த அன்பு சகோதரரை இழந்து ஆறா துயர் உற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் அனைத்து தரபினக்கும் ஸப்ரன் ஜமீலா என்னும் அழகிய பொறுமையை வல்ல அல்லாஹு சுபுஹானவுத்தாலா அள்ளி அள்ளி வழங்க உள்ளம் உருக பிரார்த்திகின்றோம் ..மன்றாடுகிறோம்.ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.