பணத்தை பறிகொடுத்த கடல் தொழிலாளி முனியசாமி
தபால் நிலையத்தில் பணம் கையாடல் செய்யப்பட்டதாக புகார் கூறியும் 5 மாதமாக நடவடிக்கை இல்லை என பாதிக்கப்பட்டவர் பரிதவித்து வருகிறார்.
கீழக்கரை ஸ்ரீநகரை சேர்ந்த கடல் தொழிலாளி கிழவன் மகன் முனியசாமி. இவர் 1995ம் ஆண்டு முதல் கீழக்கரை தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்து வரவு செலவு செய்துள்ளார். கடந்த ஆக.18ல் தனது சொந்த தேவைக்காக தபால்நிலையத்தில் தனது கணக்கில் இருந்த ரூ50 ஆயிரத்து 809ல் ரூ45 ஆயிரத்தை எடுக்க சென்றார். ஆனால், சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.45 ஆயிரம் ஜூன் மாதமே எடுக்கப்பட்டுள்ளது. கணக்கில் பணம் இல்லை என தபால்நிலையத்தில் கூறினர்.
முனியசாமி திடுக்கிட்டார். நான் பணம் எடுக்கவில்லை. எப்படி எனது கணக்கில் பணம் குறைந்தது என போஸ்ட் மாஸ்டரிடம் கேட்டார். அவரிடம் பாஸ்புத்தகத்தை பெற்ற போஸ்ட்மாஸ்டர் ரூ.50 ஆயிரத்து 809.60 வரவு வைக்கப்பட்டதாக எழுதி கொடுத்தார். ஆனால், பணத்தை எடுக்க முடியவில்லை.
ராமநாதபுரம் தபால் அலுவலக கண்காணிப்பாளர் சோமனிடம் முனியசாமி புகார் செய்தார். 5 மாதங்களாகியும் நடவடிக்கை இல்லை. இதுகுறித்து முனியசாமி கூறுகையில், “எனது சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.45 ஆயிரம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. தபால் நிலைய உயர் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி எனக்கு பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,”என்றார்.
இதுகுறித்து ராமநாதபுரம் தபால் அலுவலக கண்காணிப்பாளர் சோமன் கூறுகையில், “சம்பந்தப்பட்டவரின் பணம் கையாடல் செய்யப்பட்டிருப்பதாக எழுந்த புகாரால் போலீஸ் நடவடிக்கை எடுக்க துறை அலுவலர்களுக்கு பரிந்துரை செய்துள்ளேன், என்றார்.
கீழக்கரை தபால்நிலைய அலுவலர்கள் சிலர் கூறுகையில்,
“கீழக்கரை தபால் நிலையத்தில் ஊழியர் ஒருவர் பலரின் பணத்தை கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர்தான் முனியசாமி பணத்தையும் கையாடல் செய்திருப்பார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தினால் தெரியவரும்,”என கூறினர்.