Tuesday, January 8, 2013

20 ஆண்டுக‌ள் விப‌த்தில்லாம‌ல் ஓட்டிய‌ அர‌சு டிரைவ‌ர்க‌ளுக்கு கேட‌ய‌ம்!


அரசு போக்குவரத்துத் துறையில் 20 ஆண்டுகளாக விபத்து இல்லாமல் வாகனங்களை இயக்கிய 8 ஓட்டுநர்களுக்கு கேடயங்களையும், பாராட்டுச் சான்றிதழையும் ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் வழங்கினார்.

   தமிழக அரசு மற்றும் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து 24-வது தேசிய சாலை பாதுகாப்பு வார நிறைவு விழாவை திங்கள்கிழமை நடத்தின. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் அபுல்ஹசன் சாதலி தலைமை வகித்தார்.
  கல்லூரி இயக்குநர் ஹபீப்முஹம்மது சதக்கத்துல்லா, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வணிகவியல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கார்த்தலிங்கன் சாலை பாதுகாப்பு பற்றி விளக்கினார்.

  ராமநாதபுரம் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் பேசுகையில், வாகன ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி இறப்பு ஏற்பட்டால்  கொலை வழக்காகப் பதிவு செய்யப்படும். மேலும் மாணவர்களுக்கு கல்லூரியிலேயே பயிற்சியுடன் கூடிய ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என்றார்.

  முன்னதாக தமிழக அரசு போக்குவரத்துத் துறையில் 20 ஆண்டுகளாக விபத்து இல்லாமல் வாகனங்களை இயக்கிய 8 ஓட்டுநர்களுக்கு கேடயங்களையும், பாராட்டுச் சான்றிதழையும் அவர் வழங்கினார்.

  இதில் ராமநாதபுரம் மாவட்டக் காவல் துணை கண்காணிப்பாளர் முரளிதரன், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் இளங்கோவன், அரசு அதிகாரிகள் உள்பட ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
  என்எஸ்எஸ் அலுவலர் ஆனந்த் நன்றி கூறினார்.

 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.