Friday, January 11, 2013

கீழ‌க்க‌ரை க‌ல்லூரியில் மாண‌வ‌ர்க‌ள் ம‌ற்றும் பேராசிரிய‌ர்க‌ளுக்கு சிற‌ப்பு ப‌ரிசு!

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முஹம்மது ஜஹாபர் தலைமை வகித்தார். இயந்திரத் துறைத் தலைவர் கனகசுந்தரம் வரவேற்றார். கல்லூரி இயக்குநர் ஹபீப் முஹம்மது சதக்கத்துல்லா சிறப்புரையாற்றினார்.
இதில் அண்ணா பல்கலைக் கழகத் தேர்வுகளில் நூறு சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தேர்ச்சி பெறச்செய்த 106 பேராசிரியர்களுக்கு கல்லூரி இயக்குநரும், அனைத்துப் பொறியியல் பாடப்பிரிவுகளிலும் அதிக மதிப்பெண் பெற்ற 75 மாணவர்களுக்கு கல்லூரி முதல்வரும் சிறப்புப் பரிசுகள் வழங்கினர்.
அப்போது கல்லூரி இயக்குநர் பேசுகையில், பேராசிரியர்கள் படிப்பில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்குப் புரியும் வகையில் கற்றுத்தந்து அதை தெளிவு செய்த பின்னரே பாடத்தின் அடுத்த கட்டத்திற்குச் சென்று புரியும் படியாக விளக்கங்களுடன் கற்றுத்தர வேண்டும் என்றார்.
இறுதியில் மரைன் துறை பேராசிரியர் ராமராஜ் நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் மீனாட்சி சுந்தரம், மக்கள் தொடர்பு அதிகாரி நஜிமுதீன் ஆகியோர் செய்திருந்தனர்.

1 comment:

  1. Kilakarail pengal padithum athan mulamaga entha payanum illamal irukirarkal, paditha pengal thanathu kalvin mulamaga thanathu arivai valrthu kollavo , allathu athan mulamaka thanathu kudumbam ealmaiya pokkuvatharkana oru sariyana velai vaippu iruthum namathu ooru sila periya manusangal athanai marukindrarkal (maraikindrarkal)namathu ooril neeraiya (jamath – school)arasankam palli(gov.school)iruthum atil velai vaippu kodukka marukirarkal , ethu antha antha jamathai serntha makkalukku avarkal seium throkam,panathirkaka madra oor asiriyarkalai neeyamikkirarkal ,(ethu panathirkkaka peeya thinpathu pol ullathu)entha nilamai mara vendum antha antha jamathai serntha makkal namathu urimaiye keddu pedru kollavenum,ithu namathu jamath makkalin panathal pedra school ethil nam makkalukku velai vaippu koduka vendum,

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.