தமிழக உள்ளாட்சிகளில் "மாஸ் கிளினிங் ஒர்க்" என்ற முறையில் குப்பைகள் அகற்றப்படும் முறை பின்பற்றபடுகிறது. மாஸ் கிளினிங் எனபது ஒரே இடத்தில் அனைத்து நகராட்சி பணியாளர்களையும் வரவழைத்து மிகப்பெரிய அளவில் குவிந்துள்ள குப்பைகள் அப்பகுதியில் அகற்றப்பட்டு சுத்தமாக்கப்படும்.
இந்நிலையில் கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியாவின் முடிவின் பேரில் கமிஷனர் முகம்மது முகைதீன் உத்தரவையடுத்து சுகாதார ஆய்வாளர் தின்ணயிரமூர்த்தி தலைமையில் துப்புரவு பணியாளர்கள் அனைவரும் ஒன்றினைந்து அண்ணா நகர் முத்துசாமிபுரம் பகுதியில் பல வருடங்களாக அகற்றப்படாமல் கிடந்த குப்பைகளை "மாஸ் கிளினிங் ஒர்க்" என்ற பெயரில் நகராட்சி தலைவர் முன்னிலையில் அகற்றினர். இப்பணியின் போது அப்பகுதி இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இணைந்து துப்புரவு பணிகளை செய்தனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.