Saturday, January 5, 2013

துபாயில் ஈமான் அமைப்பு சார்பில் மீலாத் வினாடி வினா போட்டி!கீழ‌க்க‌ரை உள்ளிட்ட‌ த‌மிழ‌க‌த்தின் ப‌ல்வேறு ப‌குதிக‌ளின் சிறுவ‌ர்,சிறுமிய‌ர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.!



துபாய் ஈமான் அமைப்பு சார்பில் 7 முத‌ல் 12 வ‌ய‌து வ‌ரை சிறுவ‌ர் சிறுமிய‌ருக்கான‌  மீலாத்  இஸ்லாமிய‌ வினாடி வினா ம‌ற்றும் கிராஅத் போட்டி  04.01.2013 வெள்ளிக்கிழமை மாலை ஸ்டார் இண்டர்னேஷனல் ஸ்கூலில் வெகு சிறப்புற நடைபெற்றது.
நிக‌ழ்ச்சியில் ஈமான் அமைப்பின் தலைவர் செய்ய‌து எம்  ஸலாஹுத்தீன்  தலைமை வகித்தார்.ஈமான் அமைப்பின் அலுவ‌ல‌க‌ மேலாள‌ர் ஜ‌மால் கிராஅத் ஓதினார். பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி முன்னிலை வகித்தார். விழாக்குழு செய‌லாள‌ர் ஹ‌மீது யாசின் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தின‌ர். .ச‌ங்க‌த்தின் துணை பொது செயலாள‌ர் தாஹா நிக‌ழ்ச்சிக‌ளை தொகுத்து வ‌ழ‌ங்கினார்.
உணர்வாய் உன்னை பயிற்சியாளர் தஞ்சை ஜலாலுதீன், துபாய் கிரஸெண்ட் ஆங்கிலப் பள்ளி முதல்வர் முஹம்மது கலீஃபுல்லாஹ் நடுவர்களாக இருந்து சிறுவ‌ர் சிறுமிய‌ரை தேர்வு செய்த‌ன‌ர்.
ஜெயா தொலைக்காட்சியின் முன்னால் செய்தி வாசிப்பாளர் ரஃபீக் சுலைமான் குழந்தைகளின் திறன்களை ஊக்கப்படுத்துவது குறித்து விளக்கவுரை வழங்கினார்.

கீழ‌க்க‌ரை உள்ளிட்ட‌ த‌மிழ‌க‌த்தின் ப‌ல்வேறு ப‌குதிக‌ளை சேர்ந்த‌ சிறுவ‌ர்,சிறுமிய‌ர் ஏராள‌மானோர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.
வெற்றி பெற்றவர்களுக்கு சிற‌ப்பு பரிசு வழங்கப்பட்டன.போட்டியில் ப‌ங்கேற்ற அனைவ‌ருக்கும் ப‌ரிசுக‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌ன‌.
 விழாக்குழு துணை செயலாள‌ர் முஹைதீன் ,வெல்பேர் ஒருங்கினைப்பாள‌ர் ஃபைஜுர் ரஹ்மான்,கல்விக்குழு செய‌லாள‌ர் மதுக்கூர் ஹிதாய த்துல்லா,ஆகியோ ர் போட்டியில் ப‌ங்குபெற்ற‌ குழ‌ந்தைக‌ளுக்கு ந‌டுவ‌ர் குழு அளித்த‌ ம‌திப்பெண்க‌ளை இறுதி வ‌ரைவ ு செய்த‌ன‌ர்.

ஊடகத்துறை மற் றும் மக்கள் தொடர்பு செயலாளர் முதுவை ஹிதாயத் நன்றியுரை நிகழ்த்தினார்.

ஊடக‌த்துறை ஒருங்கிணைப்பாள‌ர் சாதிக் பாட்சா,க‌ல்விக்குழு துணை செய‌லாள‌ர் ஜாபர் சித்திக்,   காதர், முபாரக் அலி, முஸ்தபா, சலாஹுதீன் , ஹபீபுல்லாஹ்,மணல்மேல்குடி அம்ஜத் கான் உள்ளிட்ட நிர்வாக்குழு உறுப்பினர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை  செய்திருந்தனர்.
 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.