Thursday, January 10, 2013

சீலா மீன் சீச‌ன்!கீழ‌க்க‌ரை,வாலிநோக்க‌ம் க‌ட‌ல்ப‌குதியில் பிடிப‌டும் ருசி மிகுந்த‌ மீன்க‌ள்!


பட‌ம்: ந‌சீருதீன்

நெய்மீன்,வஞ்சிர‌ம் என ப‌குதிவாரியாக‌ வெவ்வேறு பெய‌ர்க‌ளில் அழைக்க‌ப்ப‌டும்  சீலா மீன்க‌ள் ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம் வாலிநோக்க‌ம் ம‌ற்றும் கீழ‌க்க‌ரை க‌ட‌ல் ப‌குதிக‌ளில் அதிக‌ள‌வில் பிடிப‌டும்.இவ்வ‌கை மீன்க‌ள் அதிக‌ ருசி உடைய‌தாக‌ இருக்கும். ஆழ்க‌டலில் வ‌சிக்கும் இவ்வ‌கை மீன்க‌ள் காற்று அதிகம் வீசும் டிச‌ம்ப‌ர்,ஜ‌ன‌வ‌ரி,பிப்ர‌வ‌ரி மாத‌ங்க‌ளில் ஆழ‌ம் குறைந்த‌ க‌ரையோர‌ க‌ட‌ல் ப‌குதிக்கு வ‌ருகின்ற‌ன‌.
சீலா மீன் சீச‌ன் துவ‌ங்கிய‌ நிலையில் ப‌ருவ‌ நிலை மாற்ற‌ம் கார‌ண‌மாக‌ க‌ட‌ந்த‌ ஒரு வாரமாக‌ குளிர் காற்று வீசி வ‌ருவ‌தால் அதிக‌ள‌வில் சீலா மீன்க‌ள் கிடைக்கும் என‌ எதிர்பார்க்க‌ப்ப‌டுகிற‌து.கீழ‌க்க‌ரை முத‌ல் வாலிநோக்க‌ம் வ‌ரை சீலா மீன் பிடிப்ப‌த‌ற்கு மீன‌வ‌ர்க‌ள் ஆர்வ‌த்துட‌ன் உள்ள‌ன‌ர்.நாட்டு ப‌ட‌குக‌ளில் சென்று ஆழ்க‌ட‌லில் வ‌லையை வீசி விட்டு வ‌ந்து பின்ன‌ர் க‌ரையிலிருந்து 50 முத‌ல் 100 பேர் சேர்ந்து வ‌லையை இழுத்து சீலா மீன்க‌ளை பிடிக்கின்ற‌ன‌ர்.

த‌ற்போது 3 அடி முத‌ல் 6 அடிவ‌ரை உள்ள‌ சீலா மீன்க‌ள் பிடிப‌டுகின்ற‌ன‌.இவை 20 கிலோ முத‌ல் 50கிலோவுக்கும் மேல் எடை கொண்ட‌தாக‌ இருக்கின்ற‌ன‌.த‌ற்போது சில்ல‌ரை விற்ப‌னையில் கிலோ ரூ450 முத‌ல் ரூ600 வ‌ரை விற்க‌ப்ப‌டுகிற‌து.
ஏர்வாடியை சேர்ந்த‌ மீன‌வ‌ர் ஜெய‌ராஜ் கூறுகையில், க‌ரைவ‌லையில் ஏராள‌மான‌ மீனவ‌ர்க‌ள் ஒன்று சேர்ந்து ரூ 45 ஆயிர‌ம் வ‌ரை செல‌வு செய்து சீலா மீன் பிடிப்பில் ஈடுப‌டுவோம்.மீன்கள் அதிகம் பிடிப‌ட்டால் ந‌ல்ல‌ லாப‌ம் கிடைக்கும்.சில‌ நேர‌ம் கிடைக்காம‌லும் போகும் என்றார்.

 

1 comment:

  1. sak mujeeb to supply for 100 rs per KG my order is pending for long time

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.