கடலில் வழி தவறும் கப்பல்கள் மற்றும் இரவில் வழி தவறு மீனவர்களுக்கு என கடல் வழி பயணத்துக்கு பேருதவியாக இருப்பது கலங்கரை விளக்கங்களாகும்.தற்போது பல்வேறு கலங்கரை விளக்கங்களின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ள ராடார் கருவியுடன், பகல் மற்றும் இரவு நேரத்தில் தெளிவாக கண்காணிக்கும் கேமரா, தொலை நோக்கு கேமரா, தானியங்கி அடையாளம் காணும் கருவி, சென்ஸ்சார் கருவி உட்பட பல கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த கருவிகள் கடலோரங்களை கண்காணிக்கும், அதன் மூலம் பெறப்படும் தகவல்களை கடலோர காவல் படைக்கு அனுப்பப்படும் இதன் மூலம் கடலோர பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது.
கப்பல் போக்குவரத்து அமைச்சக துறையின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை மண்டலத்தின் 21கலங்கரை விளக்கங்களில் ஒன்றான கீழக்கரை கலங்கரை விளக்கம் 1979ல் செயல்பட தொடங்கியது.35 மீட்டர் உயரமும் 15 நொடிக்கு ஒரு முறை வெளிச்சத்தை உமிழும் சக்தி வாய்ந்த விளக்கையும் கொண்டது
இந்த (லைட் ஹவுஸ்) கலங்கரை விளக்கம் பல ஆண்டு காலம் முன்பு கீழக்கரை கலங்கரை விளக்கத்தை காண்பதற்கு கட்டணம் பெற்று கொண்டு அனுமதித்து வந்தார்கள் பின்னர் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இன்று வரை அனுமதி இல்லை.
இந்நிலையில் இப்பகுதி பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு கலங்கரை விளக்கத்தை காண்பதற்கு அனுமதிக்க வேண்டும் நீண்ட காலம் கோரிக்கை இருந்து வருகிறது.
படம்: அஸ்பர்
இப்பகுதி மாணவர்களுக்கு இயற்கை வளங்களை நேரில் சென்று காணபதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.எனவே கலங்கரை விளக்கத்தின் உயரத்திலிருந்து பார்வையிட மாணவர்களுக்கு அனுமதித்தால் வளைகுடாவின் ஒரு பகுதியான கீழக்கரை பகுதி கடலின் வனப்பை காண்பதற்கும்,பவள பாறைகள் உள்ளிட்ட அரிய கடல் வாழ் உயிரனங்கள் பற்றி அறிந்து கொள்வதற்கும் அருகிலிருக்கும் தீவுகளை தெரிந்து கொள்வதற்கு மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். தினமும் இல்லாவிட்டால் வாரத்தில் ஒரு முறையாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர்களை அனுமதிக்கலாம்.
எனவே மத்திய அரசு இதற்கு அனுமதி அளிக்க வேண்டுமானால் தமிழக அரசு மத்திய அரசை அனுமதிக்க கேட்டு கொள்ள வேண்டும்.இதற்காக இப்பகுதி மக்கள் பிரதிநிதிகள் முயற்சிக்க வேண்டும்.
கலங்கரை விளக்கத்திலுள்ள விளக்கு நேராக ஒளியைப் பாய்ச்சாமல், கடலை நோக்கி ஒளியைப் பாய்ச்சியவாறு அரை வட்டத்தில் சுழலும். இரவில் நேரில் சென்றால் இதைத் தெளிவாகப் பார்க்கலாம். சில விளக்குகள் ஒளியை விட்டு விட்டு அனுப்புவதாகவும் இருக்கும். விளக்குச் சுழற்சி வேகமும், ஒளிகளுக்கு இடையிலான கால இடைவெளியும் ஒவ்வொரு கலங்கரை விளக்கத்திற்கும் மாறுபட்டிருக்கும். மாலுமிகள், இந்த மாறுபாடுகளை வைத்து ஒவ்வொரு கலங்கரை விளக்கத்தையும் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.
வானிலை மோசமாக உள்ள நேரங்களிலும் செயல்படும் வகையில் நவீன கால கலங்கரை விளக்கங்கள் அமைக்கப்படுகின்றன. இத்தகைய நவீன கலங்கரை விளக்கங்களில் ரேடியோ அலை பரப்பிகளைக்கொண்டு மாலுமிகளுக்கு எச்சரிக்கைத் தகவல்கள் அனுப்பப்படுகின்றன. இது தவிர திசை அறிய மாலுமிகளுக்கு, ஜி. பி. எஸ். திசை காட்டியும், கடல் வரை படங்களும், வான் நட்சத்திர வரைபடங்களும் உதவுகின்றன.
லைட்ஹவுஸ் கண்காணிப்பாளர் பவுலிக்கர் கூறுகையில், “முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை சம்பவத்திற்கு பின் தமிழகத்தில் உள்ள அனைத்து லைட்ஹவுஸ்களிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், சில இடங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கலாம் என அரசு கருதியது. இதன்விளைவாக மகாபலிபுரம், முட்டம், கன்னியாகுமரி போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். கீழக்கரையில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க உத்தரவு எதுவும் வரவில்லை. சென்னையில் உள்ள எங்களது தலைமை அலுவலகத்தில் நகராட்சி சார்பில் அனுமதி கேட்டால் பார்வையாளர்களுக்கான அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது,”என்றார்.
thanks keelakarai times
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ் விரைவில் இந்த முயற்சியை எடுக்க விரும்புகிறேன் ...
ReplyDelete