Saturday, January 5, 2013

ச‌த‌க் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் துவ‌க்க‌ விழா

பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்

கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான சிறப்பு பயிற்சி வகுப்பு முகாம் துவக்க விழா நடந்தது.
முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல்காதர் தலைமை வகித்தார். கல்லூரி இயக்குநர் ஹபீப் முகமது சதக்கத்துல்லா, முதல்வர் முகமது ஜகாபர் முன்னிலை வகித்தனர். எல்சியம் டெக்னாலஜி மற்றும் மெட்டாமார்ஃபோசிஸ் நிறுவனத்தின் மேலாளர்கள் 10 நாட்கள் நடைபெறும் இந்த முகாமை துவக்கி வைத்தனர்.
விழாவில் கல்லூரி முதல்வர் முகமது ஜகாபர் பேசுகையில்,

பொறியியல் இறுதி ஆண்டு படிக்கும் அனைத்து பொறியியல் பிரிவு மாணவர்களுக்கும் இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு மாணவர்களின் ஆளுமைத்திறனை மேம்படுத்தவும், நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவதற்கான நுணுக்கங்களை கற்று கொள்ளவும், அதன் மூலம் தொழில் நுட்பத்துறையில் மட்டுமின்றி எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கவும் பயிற்சி அளிக்கப்படும். இந்த நிறுவனத்தின் மூலம் முன்னிலை வகிக்கும் சிறந்த கம்பெனிகள் கல்லூரிக்குவரவழைக்கப்பட்டு முகம்மது சதக்


பொறியியல் கல் லூரியில் வேலைவாய்ப்பிற்கான வளாகத்தேர்வு நடைபெறும் என்றார்.
ஏற்பாடுகளை பணி அமர்வு அதிகாரி ஷேக் யூசுப் மற்றும் மக்கள் தொடர்பாளர் நஜிமுதீன் செய்தனர்.

2 comments:

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.