Wednesday, January 9, 2013

சாலை அமைத்து மூன்று மாதம்!விரைவாக‌ உடைந்து சேத‌ம்!


பட‌ விள‌க்க‌ம்:‍‍‍தெற்குதெரு இஸ்லாமியா ப‌ள்ளி செல்லும் வ‌ழியில் சாலைக‌ள் சேத‌ம‌டைந்துள்ள‌தால் ப‌ள்ளி குழ‌ந்தைக‌ள் மிகுந்த‌ சிர‌ம‌த்துட‌ன் ந‌ட‌ந்து செல்கின்ற‌ன‌ர்.

கீழ‌க்க‌ரையில் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் மூன்று மாத‌ங்க‌ளுக்கு முன் அமைத்த‌ சாலைக‌ள்  புதிய‌ குடிநீர் பைப்க‌ள் புதைப்ப‌த‌ற்கு அப்ப‌குதிக‌ளில் தோண்ட‌ப்ப‌ட்ட‌தால் பெரும்பாலான‌ ரோடுக‌ள் சேத‌ம‌டைந்த‌து.கூடுத‌லாக‌ த‌ற்போது ம‌ழை பெய்து கொண்டிருப்ப‌தால் ரோட்டில் உள்ள‌ ப‌ள்ள‌ங்களில் ம‌ழை நீர் தேங்கி கொசுக்க‌ள் உற்ப‌த்தியாகி நோய் ப‌ர‌வும் அபாய‌ம் நில‌வுகிற‌து.உட‌ன‌டியாக‌ ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டுமென‌ பொதும‌க்க‌ள் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.

கீழ‌க்க‌ரையில் க‌ட‌ந்த‌ மூன்று மாத‌ங்களுக்கு முன் வ‌ட‌க்குத்தெரு,தெற்குதெரு,சின்ன‌க்க‌டைத்தெரு,கிழ‌க்குத்தெரு,க‌ஸ்ட‌ம்ஸ் ரோடு, உள்ளிட்ட‌ ப‌ல‌ ப‌குதிக‌ளில் சாலைக‌ள் அமைத்த‌ன‌ர்.த‌ற்போது அந்த‌ ப‌குதிக‌ளில் புதிய‌தாக‌ குடிநீர் பைப்பு அமைப்ப‌த‌ற்கு ரோடுக‌ள் அமைந்த‌ ப‌குதிக‌ளில் ப‌ள்ள‌ம் தோண்டிய‌தால் சாலைக‌ள் சேத‌ம‌டைந்தாக‌ பொதும‌க்க‌ள் குற்ற‌ஞ்சாட்டுகின்ற‌ன‌ர்.

குறிப்பாக‌ தெற்குதெரு இஸ்லாமியா ப‌ள்ளிக‌ளுக்கு செல்லும் வ‌ழியில் ரோடு மிக‌வும் மோச‌மான‌ நிலையில் உள்ள‌தால் ம‌ழை நீருட‌ன் சாக்க‌டை நீரும் தேங்கி நிற்ப‌தால‌ ப‌ள்ளி செல்லும் சின்ன‌சிறு குழ‌ந்தைக‌ள் உள்ளிட்ட‌ மாண‌வ‌,மாண‌விய‌ர்க‌ள் ந‌ட‌ந்து செல்வ‌த‌ற்குள் பெரும் சிர‌ம‌த்துக்குள்ளாகிறார்க‌ள்.தேங்கி கிட‌க்கும் க‌ழிவுநீரால் தொற்று நோய் ப‌ர‌வும் வாய்ப்பும் உள்ள‌து.

இதுகுறித்து முன்னாள் க‌வுன்சில‌ர் முக‌ம்ம‌து காசிம் செல்வ‌ராஜா கூறிய‌தாவ‌து,
 சென்ற‌ ந‌க‌ராட்சி நிர்வாக‌த்தில் நாங்க‌ள் க‌வுன்சில‌ராக‌ இருந்த‌போது சாலை அமைப்ப‌த‌ற்கு தீர்மான‌ம் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌து. ஆனால் க‌வுன்சில‌ர் எம்.எம்.கே.ஜ‌மால் இப்ராகிம் பைப்புக‌ள் புதைத்து விட்டுதான் சாலை அமைக்க‌ வேண்டும் இல்லையென்றால் பைப்புக‌ள் புதைக்கும் போது ஏற்கென‌வே அமைத்த‌ சாலைக‌ள் உடைக்க‌ப்ப‌ட்டு ம‌க்க‌ள் ப‌ண‌ம் விரைய‌மாகி த‌ற்போது ஏற்ப‌ட்டுள்ள‌ நிலைமை(சாலைக‌ள் சேத‌ம்) ஏற்ப‌டும் என்று கூறி நீதிம‌ன்ற‌த்தில் த‌டை உத்த‌ர‌வு பெற்றார்.

ஆனால் த‌ற்போதைய‌ ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் 3 மாத‌த்திற்கு முன் புதிய‌ சாலைக‌ள் அமைத்து விட்டு த‌ற்போது பைப் புதைக்க‌ வேண்டுமென்று சாலைக‌ளை சேத‌ப்ப‌டுத்தி ம‌க்க‌ள் ப‌ண‌த்தை விரைய‌ம் செய்து விட்டார்க‌ள்.
த‌ற்போது மாண‌வ‌,மாண‌விய‌ர் ந‌ட‌ந்து செல்ல‌ முடியாத‌ அள‌விற்கு சாலைக‌ள் மோச‌மாக‌ உள்ள‌து.இதை உட‌ன‌டியாக‌ ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் ச‌ரி செய்ய‌ வேண்டும் இவ்வாறு அவ‌ர் கூறினார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.