Monday, February 28, 2011

கீழக்கரையில் கவுன்சிலர் தொடர்ந்த வழக்கில் சாலை பணிகளை தொடர தடை!






கீழக்கரை.பி28.சிறப்புச்சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீ்ழ் 2010- 2011ம்ஆண்டுக்கு அரசு ரூபாய் 2கோடியே 10லட்சம் நிதி வழங்கியது.இந்த நிதியில் 14 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது.இந்நிலையில் கீழக்கரை 18வது வார்டு கவுன்சிலர் எம்.எம்.கே.முகம்மது ஜமால் இப்ராகிம் குடிநீர் குழாய்கள் பதிக்காமல் சாலை பணிகள் நடைபெறுவதால் சாலை பணிக்கு தடை விதிக்க கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.இதனை ஏற்று அவ்வழக்கில் பால் வசந்த குமார் மற்று சுப்பையா ஆகி்யோர்
அடங்கிய நீதிபதிகள் சாலை பணிகளை தொடர்வதற்க்கு தடை விதித்தனர்.இதை தொடர்ந்து கவுன்சிலர்எம்.எம்.கே.ஜமால் சாலை பணிகள் நடைபெறுமிடங்களில் நீதிமன்ற உத்தரவை காண்பித்து சாலை அமைக்கும் பணிகளை நிறுத்தும்படி தெரிவித்துள்ளார்.ஆனால் நகராட்சி அலுவலகத்திலிருந்து எவ்வித தகவல்களும் வரவில்லை என்று கூறி பணியை தொடர்ந்து செய்தனர்.இதை தொடர்ந்து 18வது வார்டு கவுன்சிலர் ஜமால் கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சாலை அமைக்கும் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சாலைகளை அமைப்பதற்கு பழைய சாலைகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதால் கருங்கற்கள் சாலைகளில் குவிந்து நடந்து செல்வதற்கே முடியாத சூழநிலை உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அன்புநகர் முன்னேற்ற சங்க தலைவர் தங்கம் ராதாகிருஸ்ணன் கூறியதாவது,
கீழக்கரையி்ல் அன்பு நகரி்ல் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடந்து வந்தது.தற்போது பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாள் குழந்தைகளு்ம்,முதியோர்களும் நடந்து செல்ல முடியாத அளவிற்கு ரோடுகளில் கற்கள் சிதறி கிடக்கின்றன.
விரைவி்ல் இப்பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டு்ம் என்றார்.

இதுகுறித்து நகராட்சி செயல் அலுவலர் கூறும் போது, 18வது வார்டு கவுன்சிலர் இடைக்கால தடை பெற்றுள்ளார்.அதை சட்டப்படி நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவை நீக்கி வி்ரைவில் சாலை அமைக்கும் பணிக்கான ஏற்பாடுகளை செய்வோம் என்றார்.


4 comments:

  1. 18வது வார்டு கவுன்சிலர் எதற்காக தடை உத்தரவு வாங்கினார் என்ற செய்தியை இருட்டடிப்பு செய்து, அவரால் பொது மக்களுக்கு சிரமம் போல் கூறப்படுவது சமுதாய சிந்தனை அற்ற செயல். கீழக்கரை மக்களுக்கு குடி தண்ணீர் கிடைப்பதற்கு 1.60 கோடி செலவில் போடப்பட்ட திட்டம் 2 வருடமாக கிடப்பில் போடப்பட்டு அவசர அவசரமாக ரோடு போட்டுவிட்டு, பின்பு பைப் பதிப்பதற்கு மறுபடியும் ரோட்டை தோண்டினால் மக்கள் பணம் வீணாகும் என்ற நல்ல எண்ணத்தில் போடப்பட்ட வழக்கில் உயர்நீதி மன்றமும் மக்கள் பணத்தை வீணடித்து சம்பாதிப்பதையே நோக்கமாக கொண்டவர்களின் செயலையும் கண்டித்து இருக்கிறது

    ReplyDelete
  2. கிழக்கு தெருவில் பொது மக்களுக்கு இடையூறாக கல்லும் மண்ணும் கிடப்பதை செய்தியாக வெளியிடும் இவர், தெற்கு தெருவில் இரண்டு மாதமாக கல்லும் மண்ணும் சேறும் சகதியாக இருந்தபோது என்ன செய்து கொண்டு இருந்தார் !

    ReplyDelete
  3. அன்புடையீர்,
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    கீழக்கரையில் உள்ள அனைத்து வீதிகளிலும் காவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக சாலைகள் அனைத்தையும் தோண்டி பைப்லைன் பதிக்கும் பணி இன்னும் சில தினங்களில் நடக்க உள்ளது.
    இதை நன்கு அறிந்திருந்தும் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் சிறிதும் கூட பொறுப்பில்லாமல் தமிழக சட்டசபை தேர்தல் மற்றும் அடுத்ததாக வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பொதுமக்களின் பணத்தை வீணடிக்கும் செயலாக அவசர கதியில் போர்க்கள அடிப்படையில் கீழக்கரையில் பல இடங்களில் புதிய சாலைகளை மிகவும் தரமற்ற முறையில் போட்டு வருகின்றனர்.
    குடிநீர் திட்ட பைப்லைன் பதிப்பதற்காக இன்னும் சில தினங்களில் கீழக்கரையில் உள்ள அனைத்து வீதிகளும் சாலைகளும் மிக மோசமாக தோண்டப்படப்போகும் நிலையில் அவசர கதியில் சாலை பணி மேற்கொள்வதை கீழக்கரை மக்கள் நலன் கருதி பரிசீலனை செய்யுமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் பல முறை எடுத்துக் கோரியும் எந்த பயனும் இல்லாததால் நமது ஊரின் நலன் கருதி மக்கள் பணம் பல கோடிகள் வீண்போய்விடாமல் இருக்க மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது 24-02-2011ஆம் தேதி இவ்வழக்கை விசாரித்த மரியாதைக்குரிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் “பொதுமக்களின் நலன் கருதி செயல்படாத கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர்க்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். குடிநீருக்கான பைப்லைன் பதித்த பின்னரே சாலை பணி மேற்கொள்ளப்படும் என்று கீழக்கரை நகராட்சி நிர்வாகம் தீர்மானம் ஏற்றிவிட்டு குடிநீர் திட்டத்திற்கான பைப்லைன் பதிக்காமல் அவசர கதியில் சாலை பணி மேற்கொள்வதை உடனே நிறுத்துமாறு” உத்தரவிட்டனர்.
    தங்கள் பகுதியில் பைப்லைன் பதிக்காமல் சாலைப் பணி ஏதும் நடந்தால் உடனே சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு தந்தி மற்றும் கடிதங்களை அனுப்பி உங்கள் புகாரை பதிவு செய்து விடுங்கள், துறை ரீதியான நடவடிக்கை இல்லாத பட்சத்தில் நீதிமன்றங்கள் மூலமாக நாம் ஒரு நிறந்தர தீர்வைக் காண முடியும் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.
    இதைப்போன்று மக்களின் பணத்தை வீணடித்து மக்களுக்கு மிகுந்த சிரமத்தை தரும் செயல்கள் நடந்தேறும் பொழுது நமது வரிப்பணம் நமது நகரின் அத்தியாவசிய அவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கு பயன் படாமல் வீணடிக்கப்படுவதை உரிய முறையில் தடுப்பது நமது ஜனநாயகக் கடமையாகும்.
    நன்றி

    ReplyDelete
  4. நபியவர்கள் கூறினார்கள்
    ”எந்த ஒரு சமூகத்தில் பகிரங்கமாக பாவம் நடக்கிறதோ, அங்கு அதிக (அழிவுகள்) மரணங்கள் நிகழும்” என்று கூறினார்கள்.(தப்றானி)

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.