Thursday, April 12, 2012

கீழக்கரை பகுதி கடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு கோரிக்கை!(ப‌ட‌ங்க‌ள்)


நேற்றைய தினம் எடுக்கப்பட்ட படம் !

கடல் பகுதியில் பல்வேறு மாற்றங்கள் குறித்து 2008,2009ல் எடுக்கப்பட்ட‌ ப‌ட‌ங்கள் கீழே தரப்பட்டுள்ளது.


2008ம் ஆண்டு மற்றும் 2009ம் ஆண்டுகளில் க‌ட‌ல் உள் வாங்கிய‌போது..


ப‌ழைய‌ ப‌ட‌ம் (சில‌ ஆண்டுக‌ளுக்கு முன்) சீறி பாயும் கடல் அலைக‌ள்..


ப‌ழைய‌ ப‌ட‌ம் (சில‌ ஆண்டுக‌ளுக்கு முன்)கடலின் நிற‌ம் மாற்ற‌மாக‌...

கீழக்கரை பகுதி கடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்த சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழகத்தில் சுனாமிக்கு பிறகு கீழக்கரை கடலில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.நிறம் மாறுதல் ,கடல் சீற்றம்,கடல் உள்வாங்குதல் போன்றவை ஏற்படுகிறது.கடந்த சென்ற ஆண்டு ஜப்பானில் சுனாமி சுழன்றடித்த அதே நாளில் கீழக்கரை பகுதி கடல் சிறிது தூரம் உள்வாங்கியது.மேலும் அதற்கு முன்பு சுனாமி ஏற்பட்ட போது இதே போல் நிகழ்ந்தது.நேற்று கடல் மட்டம் சிறிது உயர்ந்தாக கூறப்பட்டது.இது ஒரு புறமிக்க மன்னார் வளைகுடாவை சேர்ந்த இப்பகுதியில் மீன் வளம் குறைந்து வருவதாகவும் ,பவள பாறைகள் அழிக்கப்பட்டு வருவதையும் கடல் ஆராய்ச்சியாளர்கள் கவலையுடன் சுட்டி காட்டுகின்றனர்.

இந்நிலையில் சென்ற ஆண்டு மத்திய அரசின் இந்திய நிலஅளவை அமைப்பு நிறுவனம் கடல் சீற்றத்தை தடுக்கவும், பாதுகாப்பிற்காகவும் மேற்கு வங்காளத்திலிருந்து குஜராத் வரை கடல் மட்டம் குறித்த ஆய்வில் மன்னார் வளைகுடா பக்குதியிலும் ஆய்வு நடைபெற்றது. இந்த அமைப்பின் உறுப்பினர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து, கடல் நிலை குறித்து ஆய்வு செய்தனர். கடல் மட்டம், கடலோர பகுதி அரிப்பு, கடல் சீற்றம், கடல் மட்டத்தின் உயரம் என பல்வேறு விதமாக ஆய்வு செய்தனர்.

இது குறித்து சுற்று சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது, உலகின் பல பகுதிகளி்ல் பாதிப்பை ஏற்படுத்திய சுனாமி இப்பகுதியை தாக்காமல் பாதுகா்ப்பதில் இப்பகுதியில் அமைந்திருக்கும் குட்டி தீவுகள் மற்றும் பவள பாறைகள் பெரும் பங்கு வகிக்கிறது.மேலு்ம் இப்பகு்தி கடலி்ல் ஏற்படும் மாற்றங்கள் குறிததும் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Wednesday, April 11, 2012

பேங்க் மேனேஜரின் அலட்சிய போக்கை கண்டித்து முற்றுகை போராட்டம் !






பெரிய பட்டிணம் இந்தியன் வங்கியின் கிளை மேலாளரின் அலட்சிய போக்கு மற்றும் ஆணவபோக்கு ஆகியவற்றை கண்டித்து நகர் சோஷியல் டெமாக்ரடிக் கட்சியின் சார்பில் இந்தியன் வங்கி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

அரசு நிதி உதவு பெறுவதற்காக வங்கியில் கணக்கு துவங்க செல்லும் மாணவ,மாணவிகளின் ஏழை கர்ப்பிணி பெண்கல்,மீனவ குடும்பத்தினர் ஆகியோர்களுக்கு வங்கியில் கணக்கு துவங்காமல் இழுத்தடிப்பது,

மாணவ மாணவியரின் மேற்படிப்புக்கு கல்வி கடன் கொடுக்காமல் அலை கழிப்பது,
மாற்று திறனாளிகள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு கடன் கொடுக்காமல் புறக்கணிப்பது

வ‌ங்கி வாடிக்கையாள‌ர்க‌ளை தொட‌ர்ந்து அவ‌ம‌ரியாதை செய்வ‌துட‌ன் த‌ர‌க்குறைவான‌ வார்த்தைக‌ளில் பேசி அவ‌மான‌ப்படுத்துவ‌து போன்ற‌ செய்கைக‌ளை க‌ண்டித்து இப்போராட்ட‌ம் ந‌ட‌த்த‌ப்பட்ட‌தாக‌ தெரிவிக்க‌ப்ப‌ட்டது.


இந்த‌ போராட்டியில் எஸ்டிபிஐ ராம‌நாத‌புர‌ம் ச‌ட்ட‌ம‌ன்ற‌ தொகுதி த‌லைவ‌ர் பைரோஸ்கான் த‌லைமை வ‌கித்தார்,மாவ‌ட்ட‌ துனை த‌லைவ‌ர் அப்துல் வ‌ஹாப், மாவ‌ட்ட‌ பொருளாள‌ர் சோமு,மாவ‌ட்ட‌ பொதுசெய‌லாள‌ர் முக‌ம்ம‌து இஸ்ஹாக், மாவ‌ட்ட‌ செய‌லாள‌ர் முக‌ம்ம‌து செரீப் சேட், முன்னாள் மாவட்ட செயலாளர் சேகு ஜலாலுதீன்,பதிர் ஒசாலி,பெரியபட்டினம் நகர் தலைவர் சீனி செய்யது அபுதாஹிர் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட தலைவர் நூர் ஜியவுதீன்,மாவட்ட செயலாளர் செய்யது இப்ராகிம்,மாவட்ட தொழிற்சஙக ஒருங்கினைப்பாளர் கார்மேகம்,ராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற தொகுதி துணை தலைவர் அப்பாஸ் ஆலிம்,ராமநாதபுரம் சட்டமன்ற செயலாளர் அப்துல் ஜமீல் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.


போராட்டத்தின் கோரிக்கையாக பாங்க் மேலாளர் லிதியா தேவகிருபையை உடனே பணிமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.இப்போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சுனாமி பீதி எதிரொலி!கீழ‌க்க‌ரை க‌ட‌ற்கரையில் போலீஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கை !



கீழ‌க்க‌ரையில் மாலை4.30 நேரப்படி க‌ட‌ல் எவ்வித‌ மாற்ற‌மும் இல்லாமல் அலைக‌ள் குறைவாக‌வே காண‌ப்ப‌ட்ட‌து.


பட விளக்கம் :சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து கீழக்கரை கடற்கரையோரம் உள்ளவர்களை போலீசார் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேறுமாறு கூறினார்.

இந்தோனேசியாவில் பூக‌ம்ப‌த்தை தொட‌ர்ந்து உல‌கின் ப‌ல்வேறு இட‌ங்க‌ளுக்கு த‌மிழ‌க‌ம் உள்ப‌ட‌ ப‌ல்வேறு இட‌ங்க‌ளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்க‌ப்ப‌ட்ட‌து. குறிப்பாக‌ த‌மிழ‌க்த்தின் க‌ட‌லோர‌ மாவட்ட‌ங்க‌ளில் க‌ட‌ற்கையோர‌மாக‌ குடியிருப்ப‌வ‌ர்க‌ள் பாதுகாப்பான‌ இட‌ங்க‌ளுக்கு செல்லுமாறு அறிவுறுத்த‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

இந்நிலையில் கீழக்கரை பகுதியிலும் சுனாமி பீதி நிலவியது.பெரும்பாலான‌ ப‌ள்ளிக‌ளுக்கு விடுமுறை அளிக்க‌ப்ப‌ட்ட‌து.

கீழக்கரை கடற்கடையோரம் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக‌ போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்ட கடற்கரை பகுதியில் கரையோரம் உள்ளோரை போலீசார் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேறுமாறு கூறினார்.

பார்வையிடும் ஆர்வத்தில் ஏராளாமானோர் கடற்கரை நோக்கி வந்த வண்ணம் இருந்தனர் அவர்களை போலீசார் பாதுகாப்பு கருதி கடற்கரைக்கு செல்ல அனுமதி தர மறுத்தனர்.

கீழ‌க்க‌ரையில் மாலை4.30 நேரப்படி க‌ட‌ல் எவ்வித‌ மாற்ற‌மும் இல்லாமல் அலைக‌ள் குறைவாக‌வே காண‌ப்ப‌ட்ட‌து.

இந்நிலையில், இன்று மாலை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிட்டுள்ள இறுதி
அறிக்கையில், கடல் அலைகளில் மாற்றமின்மை மற்றும் சுனாமி ஏற்படுவதற்கான குறைந்த பட்ச வாய்ப்பு ஆகியவற்றின் காரணமாக, சுனாமி எச்சரிக்கை முற்றிலும் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து சுனாமி ஆபத்து முற்றிலும் நீங்கியுள்ளது.

Sunday, April 8, 2012

கீழக்கரையில் 50க்கு மேற்பட்டோர் பயன்பெற்ற இலவச மருத்துவ முகாம் !




கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிழக்கு தெரு கிளையும் ,ஆயிஷா கிளினிக்கும் இணைந்து நடத்திய‌ "ஆஸ்துமா விழிப்புணர்வு' மருத்துவ முகாம் இஸ்லாமியா பள்ளி எதிரில் உள்ள ஆயிஷா கிளினிக்கில் நடைபெற்றது.

த‌மிழ்நாடு த‌வ்ஹீத் ஜ‌மாத் மாநில‌ செய‌லாளர் அப்துல் ஹ‌மீது த‌லைமை வ‌கித்தார்.மாவ‌ட்ட‌ த‌லைவ‌ர் அனீஸ் ர‌ஹ்மான் முன்னிலை வ‌கித்தார்.க‌லீல் வ‌ர‌வேற்று முகாமை துவ‌க்கி வைத்தார்.

முன்னாள் நகராட்சி தலைவர் டாக்ட‌ர் ந‌ஸீரா ப‌ர்வீன் ம‌ற்றும் ஆயிஷா ப‌ர்வீன் ஆகியோர் பொதும‌க்க‌ளுக்கு ப‌ரிசோத‌னை செய்த‌ன‌ர். இதில் 50க்கும் மேற்ப‌ட்ட‌ சிகிச்சை அளிக்க‌ப்ப‌ட்ட‌து.ஏற்பாடுக‌ளை த‌மிழ்நாடு த‌வ்ஹீத் ஜ‌மாத் கிழ‌க்குத்தெரு கிளை நிர்வாகிக‌ள் செய்திருந்த‌ன‌ர்.

ராமநாதபுரத்தில் பாஸ்போர்ட் விண்ணப்ப மையம் மூடல்! மீண்டும் செயல்படுத்த கோரிக்கை



ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த பாஸ்போர்ட் விண்ணப்பம் பெறும் மையத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் வசதிக்காக பாஸ்போர்ட் விண்ணப்பம் அளிக்கும் மையம் ராமநாதபுரம்கலெக்டர் அலுவலகத்தில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்தது. இங்கு கடந்த ஏப்.1 முதல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் பெறுவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடி தொழில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளில் வேலை பார்க்க செல்லுவோர் அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர். கீழக்கரை, பனைக்குளம், பெருங்குளம், அழகன்குளம், உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெரும்பாலானோர் அயல் நாட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் பாஸ்போர்ட் எடுப்பதற்கு விண்ணப்பங்களை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் இதற்காக தொடங்கப்பட்ட சிறப்பு அலுவலக பிரிவில் அளித்து வந்தனர்.

நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 30 முதல் 50 விண்ணப்பங்கள் வரை பெறப்பட்டது. இதனை பதிவு செய்வதற்கு வருவாய்துறையை சேர்ந்த முதுநிலை உதவியாளர் இருவர் மற்றும் கணினி ஆப்ரேட்டர் ஒருவர் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தனர். இங்கு வரும் விண்ணப்பங்கள் முறையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதனை சரிபார்த்து மதுரையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அனுப்பட்டும் அங்கிருந்து விண்ணப்பதாரர்கள் குறித்த விபரங்களை சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் மூலம் சான்றிதழ் பெறப்பட்டு பாஸ்போர்ட் கிடைத்து வந்தது.

ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி, நெல்லை, புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்கள் மதுரை பாஸ்போர்ட் மண்டலத்தின் கீழ் செயல்பட்டு வந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பாஸ்போர்ட் விண்ணப்பங்களை பெறுவதற்காக கலெக்டர் அலுவலகங்களில் செயல்பட்டு வந்த பாஸ்போர்ட் விண்ணப்ப அலுவலகங்கள் படிப்படியாக நிறுத்த மண்டல அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்திலும் கடந்த ஏப்.1 முதல் இந்தப்பிரிவு செயல்படுவது நிறுத்தப்பட்டது.

இதனால் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் அளிக்க வந்த பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கடந்த ஜனவரி முதல் மார்ச் 31 வரை 850க்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

அபுல் ஹசன் என்பவர் கூறுகையில்,
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பம் பெற்றதால் மதுரைக்கு செல்லும் சிரமம் இல்லாமல் இருந்தது.தற்போது விண்ணப்ப மையத்தை மூடியது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.குறிப்பாக பெண்கள் பெரும் அவதிக்குள்ளாவார்கள்.செலவும் அதிகரிக்கும் உடனடியாக மறு பரிசீலனை செய்து மீண்டும் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

சமூக நல அமைப்புகளும் இதற்கான முயற்சியில் இறங்க வேண்டும்

Saturday, April 7, 2012

கீழக்கரையில்(08-04-12) நாளை மருத்துவ‌ முகாம்!இலவச நுரையீரல் செயல்திறன் பரிசோதனை!




கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிழக்கு தெரு கிளையும் ,ஆயிஷா கிளினிக்கும் இணைந்து நடத்தும் "ஆஸ்துமா விழிப்புணர்வு' மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாம் நாளை 08-04-2012 காலை பத்து மணி முதல் மதியம் 3 மணி வரை இஸ்லாமியா பள்ளி எதிரில் உள்ள. ஆயிஷா கிளினிக்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

த‌த‌ஜ‌ மாநில‌ செய‌லாள‌ர் அப்துல் ஹ‌மீது த‌லைமையில் ந‌டைபெறும் என்றும் டாக்ட‌ர் ந‌சீரா ப‌ர்வீன் ம‌ற்றும் டாக்ட‌ர் ஆயிஷா ப‌ர்வீன் ஆகியோர் சிகிச்சை அளிப்பார்க‌ள் என்று அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் தேர்வு மற்றும் முற்றுகை போராட்ட அறிவிப்பு !


கிழக்கரை அருகே உள்ள பெரியபட்டிணத்தில் சோஷியல் டெமாக்ரடி ஆப் இந்தியா நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.புதிய நிர்வாகிக தேர்வு செய்யப்பட்டனர்.

எஸ்.டி.பி.ஐ ராமநாதபுரம் தொகுதி தலைவர் பைரோஸ்கான் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் அப்துல் வஹாப்,தொகுதி செயலாளர் அப்துல் ஜமீல், முன்னிலை வகித்தன‌ர்.அதில் ராமநாதபுரம் தொகுதி தலைவராக பைரோஸ்கான் துணை தலைவர்களாக,கார்மேகம்,அஸார்,அப்பாஸ் ஆலிம்,செயலாளராக அப்துல் ஜமீல்,இணைசெயலாளராக அப்துல் ஹக், அஜ்மல் சரீப்,பொருளாளராக சேகு பகுரூதீன் ,செயற்குழு உறுப்பினர்களாக அப்துல் ரஹ்மான்,ஒஸாமா அஸ்கர் ,பொருளாளராக சேகு பகுருதீன்,செயற்குழு உறுப்பினர்களாக அப்துல் ரஹ்மான்,அ.மு.சுல்தான்,ஹபீப் ஆலிம் அகியோர் ஆகியோர் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் , சமீபத்தில் தமிழக அரசால் உயர்த்தப்பட்ட பால்விலை,பஸ் கட்டணம்,பத்திர பதிவு கட்டணம், போன்றவற்றை திரும்ப பெற வேண்டும். புது மடத்தில் மக்கள் அதிகம் வசித்து வரும் தெருவின் நடுவில் உள்ள மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்றகோரி கையெழுத்து வேட்டை நடத்துவதென்றும்,பெரியபட்டிணம் இந்திய வங்கியின் மேலாளரின் மக்கள் விரோத போக்கை கண்டித்து வரும் ஏப் 11ல் வங்கியின் முன் முற்றுகை போராட்டம் நடத்துவதென்றும் உள்ளிட்ட பல்வேறு தீர்மான‌ங்கள் நிறைவேற்றப்பட்டது.

ராமநாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ தொகுதி த‌லைவ‌ர் பைரோஸ்கான் மொபைல் எண் :-9442039756,துணை த‌லைவ‌ர் கார்மேக‌ம் கைபேசி எண் - 9655307617

துணை த‌லைவ‌ர் அஸார் 9677551698

துணை த‌லைவ‌ர் அப்பாஸ் ஆலிம் 9942055372

செய‌லாள‌ர் அப்துல் ஜ‌மீல் எண் 9994597001

இணை செய‌லாள‌ர்க‌ள்

அப்துல் கைபேசி எண் 9842462704

அஜ்ம‌ல் ச‌ரீப் 9629371108

பொருளாள‌ர் சேகு ப‌குருதீன் கைபேசி எண் 9865424004

செய‌ற்குழு உறுப்பின‌ர்க‌ள்
அப்துல் ர‌ஹ்மான் 9443509020ஒஸாமா அஸ்க‌ர் 9940668679அ.மு.சுல்தான் 9865569595

Thursday, April 5, 2012

விலையில்லா மிக்சி ,கிரைண்டர்,மின்விசிறி வழங்கும் நிகழ்ச்சி !



கீழக்கரை அருகே தில்லையேந்த பஞ்சாயத்திற்குட்பட்ட கும்பிடுமதுரையில் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் கைத்தரி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் சுந்தராஜன் பயனாளிகளுக்கு இலவச மிக்சி,கிரைண்டர்,மின் விசிறி வழங்கினார். நிகழ்ச்சிக்கு தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் முனியம்மாள் செல்வகுமார் தலைமை வகித்தார்.

அமைச்சர் சுந்தர்ராஜன் கூறியதாவது, ராமநாதபுரம் மாவட்டத்தில் 50 ஆயிரம் பேருக்கு இந்த விலையில்ல பொருட்கள் முடிவு செய்யப்பட்டு தற்போது 30 ஆயிரத்து 320 நபர்களுக்கு வழங்கப்பட்டுளளது.மேலும் இலவச லேப்டாப் 3 ஆயிரத்து 205 மாணவர்களுக்கு வழங்கவதற்கு கணக்கெடுக்கப்பட்டு 2 ஆயிரத்து 982 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என்றார்.

கீழக்கரையில் தண்ணீர் பந்தல் திறப்பு !





கோடை வெயில் சுட்டெறிக்க தொடங்கியுள்ளதை தொடர்ந்து தமிழகமெங்கும் தண்ணீர் பந்தல்கள் திறப்பு நடைபெற்று வருகிறது.கீழக்கரையில் வள்ளல் சீதக்காதி சாலையில் அ.தி.மு.க. சார்பில் குடிநீர் பந்தல் திறப்பு விழா நடந்தது. மாவட்ட செயலாளர் ஆணிமுத்து துவக்கி வைத்தார்.

கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா, துணை தலைவர் ஹாஜா முகைதீன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது பொதுமக்களுக்கு இளநீர், தர்ப்பூசணி, நீர்மோர் வழங்கப்பட்டது.

பெண்களை ஆபாசமாக திட்டிய‌ கண்டக்டர் ! கீழக்கரை இளைஞ‌ர்கள் நடவடிக்கை!


வ‌ழ‌க்கு பதிவு செய்யப்பட்டு காவல் நிலையத்தில் கண்டக்டர் ஜெயகாந்தன்

கீழக்கரையிலிருந்து ராமநாதபுரம் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சில் கீழக்கரை ஜின்னா தெருவை சேர்ந்த மரியம் பீவி(55)மற்றும் இவ‌ர‌து ம‌ரும‌க‌ள் ஆகியோர் ப‌ய‌ண‌ம் செய்த‌ன‌ர்.

இவர்கள் க‌ண்ட‌க்டர் ஜெயகாந்தனிடம்(37) டிக்கெட் கேட்ட‌போது சில்லரை இல்லை என எரிச்சலடைந்து வாய்க்கு வ‌ந்த‌ப‌டி ஆபாசமாக‌ பேசினாராம்.உட‌ன‌டியாக‌ அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் குடும்பாத்தாரிட‌ம் மொபைல் மூல‌ம் த‌க‌வ‌ல் கொடுத்த‌ன‌ராம்.அப்போது கண்டக்டர் ஜெயகாந்தன் "எங்கே வேண்டுமானலும் புகார் செய்து கொள்ளுங்கள்' என்று திமிராக பதில் சொன்னாராம்.குடும்பத்தாரின் அறிவுரையின் பேரில் மீண்டும் அதே ப‌ஸ்சில் ப‌ய‌ண‌ம் செய்து கீழ‌க்க‌ரை நோக்கி திரும்பி வந்த‌ன‌ர்.

கீழ‌க்க‌ரை நுழைவு வாயிலில் பஸ்சை நிறுத்திய கீழக்கரையை சேர்ந்த இளைஞர்கள் ஆபாச‌மாக‌ பேசிய‌ க‌ண்ட‌க்ட‌ர் ஜெய‌காந்த‌னை போலீஸ் நிலைய‌த்தில் ஒப்ப‌டைத்த‌ன‌ர்.

புகாரின் பேரில் க‌ண்ட‌க்ட‌ர் மீது வ‌ழ‌க்கு ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டு கைது செய்ய‌ப்பட்டார் .விசார‌ணை நடைபெற்று வ‌ருகிற‌து.

Wednesday, April 4, 2012

மாநில அளவிலான கால்பந்து போட்டியில் கீழக்கரை கல்லூரி மூன்றாம் இடம்!



மாநில‌ அள‌வில் கல்லூரிக‌ளுக்கு இடையிலான‌ மாலா நினைவு சுழ‌ற்கோப்பை கால்ப‌ந்தாட்ட‌ போட்டி திருச்சி ஜே.ஜே க‌ல்லூரி மைதான‌த்தில் ந‌டைபெற்ற‌து.இதில் கீழ‌க்க‌ரை முக‌ம்ம‌து ச‌த‌க் பொறியிய‌ல் க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ள் மூன்றாம் இட‌த்தை பெற்ற‌ன‌ர்.

இப்போட்டியில் த‌மிழ‌க‌த்தில் த‌லைசிற‌ந்த‌ 18கால்ப‌ந்தாட்ட‌ அணியின‌ர் க‌லந்து கொண்ட‌தில் கீழ‌க்க‌ரை முக‌ம்ம‌து ச‌த‌க் பொறியிய‌ல் க‌ல்லூரி வீர‌ர்க‌ள் மூன்றாம் இட‌த்திற்கான‌ கோப்பையை கைப்ப‌ற்றின‌ர்.
மூன்றாம் இட‌த்தை பெற்று க‌ல்லூரிக்கு பெருமை சேர்த்த‌ மாண‌வ‌ர்க‌ளை க‌ல்லூரி சேர்ம‌ன் ஹ‌மீது அப்துல் காத‌ர் ,செய‌லாள‌ர் யூசுப் சாகிப்,இய‌க்குந‌ர் ஹ‌பீப் முக‌ம்ம‌து ,க‌ல்லூரி முத‌ல்வ‌ர் முக‌ம்ம‌து ஜ‌காப‌ர் ,உடற்கல்வி இயக்குநர் சுரேஷ்குமார் ம‌ற்றும் ப‌ல‌ர் பாராட்டின‌ர்.


மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் பங்கேற்ற‌ கீழக்கரை இளைஞ‌ர்க‌ள்!


ஈரோட்டில் மாநில அளவில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் ப‌ங்கேற்ற‌ கீழ‌க்க‌ரை இளைஞ‌ர்க‌ள் !
மூர் கிளப் சார்பில் கீழக்கரையை சேர்ந்த இளைஞர்கள் ஈரோட்டில் மாநில அளவில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் பங்கேற்றனர்.
இது குறித்து மூர் விளையாட்டு அணியின் நிர்வாகி ஹசனுதீன் கூறுகையில் ,ராமநாதபுரம் மாவட்ட அளவில் நமது அணியினர் தொடர்ந்து நான்கு வருடங்களாக கோப்பையை கைப்பற்றி வருகின்றனர்.ஈரோடு போட்டியில் கோப்பையை கைப்பற்ற முடியாவிட்டாலும் அடுத்த முறை இன்ஷா அல்லா நம் அணி கோப்பை கைப்பற்றும் என்றார்.

கீழக்கரையிலிருந்து வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதியாகும் கடல் பாசி !


படகிலிருந்து எடுத்து செல்லப்படும் கடல்பாசி (பைல் படம்)


கடற்கரையோர தோட்டத்தில் உலர வைக்கப்பட்டுள்ள கடல் பாசி (பைல் படம்)

மன்னார் வளைகுடாவை சேர்ந்த‌ கீழக்கரை கடல் பகுதியில் மீனவர்கள் "கட்ட கோரை" என்றழைக்கப்படும் ஒரு வகை கடல் பாசி பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வகை பாசிகள் தீவுகளை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

6க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஒரு குழுவாக நாட்டு படகில் சென்று இத்தொழிலில் ஈடுபடுகின்றனர்.ஒருமுறை கடலுக்கு சென்று திரும்பும் போது 1 டன்னுக்கு குறையாமல் பாசிகள் எடுத்து வந்தால் தான் கட்டுப்படியாகும் என்று கூறப்படுகிறது .

கடலிலிருந்து கரை இறக்கப்பட்ட பாசிகள் ஒரு நாள் முழுவதும் வெயிலில் காய வைக்கப்பட்டு கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது .இவ்வகை பாசிகள் ஆடைகளுக்கான வண்ண கலவைகளுக்கு மூல பொருளாக பயன்படுத்தப்படுகிறது .

இது குறித்து மீனவர் இப்ராகிம் என்பவர் கூறியதாவது, இப்பகுதியில் மீன்பாடு குறைந்து வருகிறது. தற்போது கடல் பாசி எடுப்பதிலும் ஈடுபடுகிறோம் ஆனாலும் நாங்கள் குறைந்த விலைக்குதான் விற்க வேண்டியுள்ளது. ஆனால் வெளிமார்கெட்டில் ஒரு டன் ரூ8500க்கும் அதிகமாக விற்கிறார்கள்.அரசு சார்பில் இப்பகுதியில் விற்பனை நிலையம் தொடங்கினால் எங்களுக்கு நியாயமான விலை கிடைக்க வாய்ப்புள்ளது

Tuesday, April 3, 2012

கீழக்கரையில் கிறிஸ்தவர்களின் குருத்தோலை தின ஊர்வலம்!


பட விளக்கம் :-குருத்தோலையுடன் ஊர்வலமாக சென்றனர்.

கிறிஸ்தவர்களின் குருத்தோலை தினத்தை முன்னிட்டு கீழக்கரை சி.எஸ்.ஐ தூய பேதுரு ஆலயத்தில் இருபெரும் விழா நடைபெற்றது.

சபைகுரு தேவதாஸ்ராஜன் பாபு தலைமை தாங்கினார்.சி.எஸ்.ஐ.ஆலயத்திலிருந்து கிறிஸ்தவர்கல் கையில் குருத்தோலை ஏந்தி "ஹொசனா" பாடியபடி ஊர்வலமாக கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை வழியாக ஆலயத்தை சென்றடைந்தனர்.

ஆலய ஆராதனை முடிந்தவுடன் புதிய குருமனை நிலைநாட்டும் விழா நடைபெற்றது.இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Monday, April 2, 2012

கீழக்கரையில் ராணுவ பாதுகாப்பு கழகம் இணைந்து தேசிய அளவிளான‌ கருத்தரங்கம்!


பட விளக்கம்:-மதுரை ரகசிய தகவல் பரிமாற்று துறை வல்லுனர் டாக்டர் இந்திரா தேவி ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட கல்லூரி இயக்குநர் ஹபீப் பெற்றுகொண்டார்

கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி கணிதத்துறை மற்றும் இந்திய ராணுவ பாதுகாப்பு கழகம் நடத்திய ஆராய்ச்சி கழகம் இணைந்து நடத்திய தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் கல்லூர் வளாகத்தில் நடைபெற்றது.


கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர் தலைமை தாங்கினார்.கல்லூரி இயக்குநர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா,முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

துறை தலைவர் கார்த்திக்கேயன் வரவேற்றார்.
இதில் மதுரை ரகசிய தகவல் பரிமாற்று துறை வல்லுனர் டாக்டர் இந்திரா தேவி கலந்து கொண்டு கணிணியில் தகவல்களை பாதுகாப்பாக அனுப்புவது குறித்து பேசினார்.

பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 100க்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள் மற்றும் முதுகலை பொறியியல் பட்ட மாணவர்கள் தங்களது ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்பித்தனர்.சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பபட்டது.பேராசிரியர் சேக் யூசுப் நன்றி கூறினார்.ஏற்பாடுகளை மக்கள் தொடர்பாளர் நஜிமுதீன் மற்றும் பல் செய்திருந்தனர்.

Sunday, April 1, 2012

கீழக்கரை வெல்பேர் டிரஸ்ட் பொறுப்பாளர் லியாகத் அலி (வபாத்)காலமானார்கள்!



கீழக்கரை வெல்பேர் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகியான ஏ.கே.எஸ் லியாகத் அலி அவர்கள் உடல் நலக்குறைவால் ம‌துரை த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னையில்
சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று(01-04-12) காலமாகி(வபாத்) விட்டார்கள்.

துபாய் ஈடிஏ விடுதியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி!(படங்கள்)




தகவல் :யாசர் அரபாத்

புவி வெப்பமாதல் குறித்து விழிப்புணர்வுக்காக ஒரு மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டு நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட நிகழ்ச்சி துபாய் ஈடிஏ எம் அன்ட் ஈ தொழிலாளர்கள் தங்கும் விடுதியில் நடைபெற்றது.

பூமியின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதையே புவி வெப்பமயமாதல் என்கிறோம். கடந்த நூறு ஆண்டுகளில் புவியின் வெப்பம் 1.5 பாரன்ஹீட் அளவிற்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

மாசில்லா உலகத்தை உருவாக்க சூரிய சக்தியால் இயங்கும் வாகனங்களை உருவாக்க வேண்டும். காடுகளை அழிவில் இருந்து காக்க வேண்டும். மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பதாக இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக துபாய் ETAMNE HRM கேம்ப் ல் ஒரு மணி நேரத்துக்கு (இரவு 8.30 - 9.30 ) மின் துண்டிப்பு ஏற்படுத்த பட்டது அந்நேரம் வெறும் மெழுகுவர்த்தி கொண்டு ETAHRM CAMPS 60 EARTH HOUR - 2012 என்று உருவாக்கப்பட்டது .அங்கு தங்கி இருக்கும் நிறுவனத்தில் பணி புரியும் ஏராளமானோர் இதில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

தாசிம் பீவி கல்லூரியில் கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கம்!


கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் தரமான கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கம் வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் சுமையா தலைமை தாங்கினார். ஆசிரியர் ஹபீப் நிஷா கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். தேர்வு கட்டுப்பாட்டாளர் ரஜனி வரவேற்றார்.

திருச்சி ஜோச‌ப் க‌ல்லூரி ர‌சாய‌விய‌ல் இணை பேராசிரியர் அலெக்ஸ் ரமணி,சீதக்காதி அறக்கட்டளை துணை மேலாளர் சேக்தாவுத் துணை முதல்வர் நாதிரா பானு கமால் முன்னிலை வகித்தனர்.

இதில் கேரளாவை சேர்ந்த‌ விஞ்ஞான‌ம் ம‌ற்றும் தொழில்நுட்ப‌ துறை த‌லைமை செய‌லாளர் ராஜ‌சேக‌ர‌ன் பிள்ளை பேசியதில் ஒரு பகுதி,
தான் என்ற‌ அகாம்ப‌வ‌த்தை வெளியில் தூக்கி எறிந்தால் வாழ்கையில் வெற்றி பெறலாம்.குறைந்த‌ ம‌திப்பெண்க‌ள் பெறும் மாண‌விக‌ள் மீது ஆசிரிய‌ர்க‌ள் த‌னி க‌வ‌ன‌ம் செலுத்தி தோற்று விடுவோம் என்ற‌ எண்ண‌த்தை போக்கி வெற்றி பெறுவோம் என்ற‌ என்ற‌ நிணைப்பை மாண‌விய‌ரின் ம‌ன‌தில் விதைத்தால் க‌ண்டிப்பாக‌ அவ‌ர்க‌ள் வெற்றி பெறுவார்கள்.

இவ்வாறு அவ‌ர் பேசினார். பேராசிரிய‌ர் பாத்திமா ந‌ன்றி கூறினார்.

கீழக்கரை கல்லூரி வளாக‌ தேர்வில் 28பேருக்கு பணி நியமனம்!



கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு பிரிவு சார்பாக டிப்ளமா இயந்திரவியல் மற்றும் மின்னியல் மற்றும் மின்னணுவியல்துறை மாணவர்களுக்கு வளாக‌ தேர்வு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமை தாங்கினார்.வேலைவாய்ப்பு ஒருங்கினைப்பாளர் சேக் தாவூத் வரவேற்றார்.இதில் செங்கல்பட்டில் உள்ள நிறுவனமான சுந்தரம் நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் முத்துக்குமரன் மற்றும் முதுநிலை நிறுவனர் ஜான்பால் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை தேர்வு செய்தனர்.

இதில் 60க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டதில் 28 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.ஆசிரியர் மரியதாஸ் நன்றி கூறினார்.

Saturday, March 31, 2012

புதிய மதிப்பீட்டினால் ஏப்ரல் 1முதல் பத்திர செலவு பலமடங்கு உயரும்!கீழக்கரையிலும் எதிரொலிக்கும்!



பட விளக்கம் : ஏப்ரல் 1 முதல் புதிய மதிப்பீடு அமலுக்கு வந்தால் பத்திர செலவு அதிகரிக்கும் என கருதி பொதுமக்கள் கீழக்கரை பத்திர பதிவுக்காக சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று இரவு 7 மணிவரை குவிந்தனர்.கூட்டம் அதிகமாக இருந்ததால் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது ஒரே நாளில் 100க்கும் அதிகமான பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் நிலத்தின் தற்போதைய மதிப்பீட்டுக்கு ஏற்ப வழிகாட்டும் மதிப்பீட்டை மாற்றி அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக பத்திரப்பதிவு அதிகாரிகள் அவர்களுக்கு உரிய பகுதிகளுக்கு சென்று வழிகாட்டும் மதிப்பீட்டை அறிந்து இடம் மற்றும் மனைகளுக்கான அரசின் வழிகாட்டுதல் மதிப்புக்கான
(Guideline Draft) வரைவை தயாரித்து அரசிற்கு அளித்தனர்.

தமிழக அரசின் பட்ஜெட்டில் “நிலத்தின் வழிகாட்டி மதிப்பு” வருகின்ற ஏப்ரல் 1– ந் தேதி முதல் திருத்தி அமைக்கப்பட்ட புதிய வழிகாட்டி மதிப்பீட்டை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இதனால் அரசிற்கு கூடுதலாக ரூ 600 கோடி வருவாய் கிடைக்கும்.இதனால் பத்திர பதிவின் செலவு அதிகரிக்கும்தமிழகம் முழுவதும் இது எதிரொலிக்கும் என கூறப்படுகிறது.

கீழக்கரையில் உள்ள ஒவ்வொரு தெருவின் மதிப்பீடுகளும் பல மடங்குகளாக உயர்த்தி நிலத்தின் ஒரு சதுர அடியின் விலை நிர்ணயம் செய்துள்ளார்கள்.முழு விபரத்தை இத்தளத்தில் காணலாம் Madurai Zone -> ramanathapuram Taluk

http://www.tnreginet.net/DraftGuideline2011/gvaluemainpage2011.asp

கீழக்க‌ரையில் ஏற்கெனவே இருந்த வழிகாட்டுதல் மதிப்பை விட நான்கு மடங்குக்கு மேல் கூடுதலாக இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

உதாரணத்திற்கு அரசின் பழைய வழிகாட்டுதல் படி சதுர அடி ரூ200 என்று வைத்து கொள்வோம் இதன் மூலம்1000 சதுர அடிக்கு ரூ200000 ஆகிறது. இதற்கு பத்திரபதிவுக்கான செலவு ரூ 18000ம்தான் ஆகும் ஆனால் அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலின் படி ஒரு இடத்தின் மதிப்பு சதுர அடிக்கு 400 என்றால் 1000 சதுர அடிக்கு ரூபாய்400000 விலையாகிறது.இதில் 9% பத்திர செலவு மட்டும் ரூ36000 ஆகிறது. என‌வே புதிய‌ வ‌ழிகாட்டுத‌லின் ப‌டி ப‌த்திர‌ப‌திவுக்கான செல‌வு ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ரிக்கும் என்று கூற‌ப்படுகிற‌து.

இது குறித்து ரிய‌ல் எஸ்டே தொழில் செய்து வ‌ரும் ஜ‌குப‌ர் கூறிய‌தாவ‌து,
கீழக்கரையில் த‌ற்போதுள்ள‌ வ‌ரைவு மிக‌ அதிக‌ விலையில் நிர்ண‌ய‌ம் செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.இத‌னால் ப‌த்திர‌ப‌திவு செல‌வு எக்க‌ச்ச‌க்க‌மாக இருக்கும் இத‌னால் இட‌த்தை வாங்குப‌வ‌ர்க‌ள் அதிக‌ ஆர்வ‌ம் காட்ட‌ மாட்டார்க‌ள்.குறிப்பாக‌ கீழ‌க்க‌ரை ப‌குதியில் அதிக அளவில் இடங்களை விற்பது,வாங்குவது நடைபெற்று வருகிறது இந்த வரைவு நடைமுறைபடுத்தப்பட்டால் இந்த வியாபாரம் குறைந்து விடும் அரசு இந்த விலை நிர்ணயத்தை மறுபரீசலனை செய்ய வேண்டும் என்றார்.
சில மாதங்களுக்கு முன் கலெக்டரிடம் மனு கொடுத்தபோது எடுத்த படம்.

புதிய வழிகாட்டுதல் மதிப்பீடு வெளியான போது கீழக்கரை சேர்ந்த ஏராளமானோர் ராமநாதபுரம் கலெக்டரை சந்தித்து மறு பரிசீலனை செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர். இக்கோரிக்கை என்னவாயிற்று என்று தெரியவில்லை