Wednesday, April 11, 2012
சுனாமி பீதி எதிரொலி!கீழக்கரை கடற்கரையில் போலீஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கை !
கீழக்கரையில் மாலை4.30 நேரப்படி கடல் எவ்வித மாற்றமும் இல்லாமல் அலைகள் குறைவாகவே காணப்பட்டது.
பட விளக்கம் :சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து கீழக்கரை கடற்கரையோரம் உள்ளவர்களை போலீசார் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேறுமாறு கூறினார்.
இந்தோனேசியாவில் பூகம்பத்தை தொடர்ந்து உலகின் பல்வேறு இடங்களுக்கு தமிழகம் உள்பட பல்வேறு இடங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. குறிப்பாக தமிழக்த்தின் கடலோர மாவட்டங்களில் கடற்கையோரமாக குடியிருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
இந்நிலையில் கீழக்கரை பகுதியிலும் சுனாமி பீதி நிலவியது.பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
கீழக்கரை கடற்கடையோரம் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்ட கடற்கரை பகுதியில் கரையோரம் உள்ளோரை போலீசார் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேறுமாறு கூறினார்.
பார்வையிடும் ஆர்வத்தில் ஏராளாமானோர் கடற்கரை நோக்கி வந்த வண்ணம் இருந்தனர் அவர்களை போலீசார் பாதுகாப்பு கருதி கடற்கரைக்கு செல்ல அனுமதி தர மறுத்தனர்.
கீழக்கரையில் மாலை4.30 நேரப்படி கடல் எவ்வித மாற்றமும் இல்லாமல் அலைகள் குறைவாகவே காணப்பட்டது.
இந்நிலையில், இன்று மாலை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிட்டுள்ள இறுதி
அறிக்கையில், கடல் அலைகளில் மாற்றமின்மை மற்றும் சுனாமி ஏற்படுவதற்கான குறைந்த பட்ச வாய்ப்பு ஆகியவற்றின் காரணமாக, சுனாமி எச்சரிக்கை முற்றிலும் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து சுனாமி ஆபத்து முற்றிலும் நீங்கியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.