Wednesday, April 4, 2012
கீழக்கரையிலிருந்து வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதியாகும் கடல் பாசி !
படகிலிருந்து எடுத்து செல்லப்படும் கடல்பாசி (பைல் படம்)
கடற்கரையோர தோட்டத்தில் உலர வைக்கப்பட்டுள்ள கடல் பாசி (பைல் படம்)
மன்னார் வளைகுடாவை சேர்ந்த கீழக்கரை கடல் பகுதியில் மீனவர்கள் "கட்ட கோரை" என்றழைக்கப்படும் ஒரு வகை கடல் பாசி பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வகை பாசிகள் தீவுகளை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
6க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஒரு குழுவாக நாட்டு படகில் சென்று இத்தொழிலில் ஈடுபடுகின்றனர்.ஒருமுறை கடலுக்கு சென்று திரும்பும் போது 1 டன்னுக்கு குறையாமல் பாசிகள் எடுத்து வந்தால் தான் கட்டுப்படியாகும் என்று கூறப்படுகிறது .
கடலிலிருந்து கரை இறக்கப்பட்ட பாசிகள் ஒரு நாள் முழுவதும் வெயிலில் காய வைக்கப்பட்டு கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது .இவ்வகை பாசிகள் ஆடைகளுக்கான வண்ண கலவைகளுக்கு மூல பொருளாக பயன்படுத்தப்படுகிறது .
இது குறித்து மீனவர் இப்ராகிம் என்பவர் கூறியதாவது, இப்பகுதியில் மீன்பாடு குறைந்து வருகிறது. தற்போது கடல் பாசி எடுப்பதிலும் ஈடுபடுகிறோம் ஆனாலும் நாங்கள் குறைந்த விலைக்குதான் விற்க வேண்டியுள்ளது. ஆனால் வெளிமார்கெட்டில் ஒரு டன் ரூ8500க்கும் அதிகமாக விற்கிறார்கள்.அரசு சார்பில் இப்பகுதியில் விற்பனை நிலையம் தொடங்கினால் எங்களுக்கு நியாயமான விலை கிடைக்க வாய்ப்புள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.