Thursday, April 12, 2012
கீழக்கரை பகுதி கடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு கோரிக்கை!(படங்கள்)
நேற்றைய தினம் எடுக்கப்பட்ட படம் !
கடல் பகுதியில் பல்வேறு மாற்றங்கள் குறித்து 2008,2009ல் எடுக்கப்பட்ட படங்கள் கீழே தரப்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு மற்றும் 2009ம் ஆண்டுகளில் கடல் உள் வாங்கியபோது..
பழைய படம் (சில ஆண்டுகளுக்கு முன்) சீறி பாயும் கடல் அலைகள்..
பழைய படம் (சில ஆண்டுகளுக்கு முன்)கடலின் நிறம் மாற்றமாக...
கீழக்கரை பகுதி கடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்த சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் சுனாமிக்கு பிறகு கீழக்கரை கடலில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.நிறம் மாறுதல் ,கடல் சீற்றம்,கடல் உள்வாங்குதல் போன்றவை ஏற்படுகிறது.கடந்த சென்ற ஆண்டு ஜப்பானில் சுனாமி சுழன்றடித்த அதே நாளில் கீழக்கரை பகுதி கடல் சிறிது தூரம் உள்வாங்கியது.மேலும் அதற்கு முன்பு சுனாமி ஏற்பட்ட போது இதே போல் நிகழ்ந்தது.நேற்று கடல் மட்டம் சிறிது உயர்ந்தாக கூறப்பட்டது.இது ஒரு புறமிக்க மன்னார் வளைகுடாவை சேர்ந்த இப்பகுதியில் மீன் வளம் குறைந்து வருவதாகவும் ,பவள பாறைகள் அழிக்கப்பட்டு வருவதையும் கடல் ஆராய்ச்சியாளர்கள் கவலையுடன் சுட்டி காட்டுகின்றனர்.
இந்நிலையில் சென்ற ஆண்டு மத்திய அரசின் இந்திய நிலஅளவை அமைப்பு நிறுவனம் கடல் சீற்றத்தை தடுக்கவும், பாதுகாப்பிற்காகவும் மேற்கு வங்காளத்திலிருந்து குஜராத் வரை கடல் மட்டம் குறித்த ஆய்வில் மன்னார் வளைகுடா பக்குதியிலும் ஆய்வு நடைபெற்றது. இந்த அமைப்பின் உறுப்பினர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து, கடல் நிலை குறித்து ஆய்வு செய்தனர். கடல் மட்டம், கடலோர பகுதி அரிப்பு, கடல் சீற்றம், கடல் மட்டத்தின் உயரம் என பல்வேறு விதமாக ஆய்வு செய்தனர்.
இது குறித்து சுற்று சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது, உலகின் பல பகுதிகளி்ல் பாதிப்பை ஏற்படுத்திய சுனாமி இப்பகுதியை தாக்காமல் பாதுகா்ப்பதில் இப்பகுதியில் அமைந்திருக்கும் குட்டி தீவுகள் மற்றும் பவள பாறைகள் பெரும் பங்கு வகிக்கிறது.மேலு்ம் இப்பகு்தி கடலி்ல் ஏற்படும் மாற்றங்கள் குறிததும் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.