Wednesday, April 11, 2012
பேங்க் மேனேஜரின் அலட்சிய போக்கை கண்டித்து முற்றுகை போராட்டம் !
பெரிய பட்டிணம் இந்தியன் வங்கியின் கிளை மேலாளரின் அலட்சிய போக்கு மற்றும் ஆணவபோக்கு ஆகியவற்றை கண்டித்து நகர் சோஷியல் டெமாக்ரடிக் கட்சியின் சார்பில் இந்தியன் வங்கி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
அரசு நிதி உதவு பெறுவதற்காக வங்கியில் கணக்கு துவங்க செல்லும் மாணவ,மாணவிகளின் ஏழை கர்ப்பிணி பெண்கல்,மீனவ குடும்பத்தினர் ஆகியோர்களுக்கு வங்கியில் கணக்கு துவங்காமல் இழுத்தடிப்பது,
மாணவ மாணவியரின் மேற்படிப்புக்கு கல்வி கடன் கொடுக்காமல் அலை கழிப்பது,
மாற்று திறனாளிகள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு கடன் கொடுக்காமல் புறக்கணிப்பது
வங்கி வாடிக்கையாளர்களை தொடர்ந்து அவமரியாதை செய்வதுடன் தரக்குறைவான வார்த்தைகளில் பேசி அவமானப்படுத்துவது போன்ற செய்கைகளை கண்டித்து இப்போராட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த போராட்டியில் எஸ்டிபிஐ ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் பைரோஸ்கான் தலைமை வகித்தார்,மாவட்ட துனை தலைவர் அப்துல் வஹாப், மாவட்ட பொருளாளர் சோமு,மாவட்ட பொதுசெயலாளர் முகம்மது இஸ்ஹாக், மாவட்ட செயலாளர் முகம்மது செரீப் சேட், முன்னாள் மாவட்ட செயலாளர் சேகு ஜலாலுதீன்,பதிர் ஒசாலி,பெரியபட்டினம் நகர் தலைவர் சீனி செய்யது அபுதாஹிர் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் நூர் ஜியவுதீன்,மாவட்ட செயலாளர் செய்யது இப்ராகிம்,மாவட்ட தொழிற்சஙக ஒருங்கினைப்பாளர் கார்மேகம்,ராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற தொகுதி துணை தலைவர் அப்பாஸ் ஆலிம்,ராமநாதபுரம் சட்டமன்ற செயலாளர் அப்துல் ஜமீல் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
போராட்டத்தின் கோரிக்கையாக பாங்க் மேலாளர் லிதியா தேவகிருபையை உடனே பணிமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.இப்போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.