கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு பிரிவு சார்பாக டிப்ளமா இயந்திரவியல் மற்றும் மின்னியல் மற்றும் மின்னணுவியல்துறை மாணவர்களுக்கு வளாக தேர்வு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமை தாங்கினார்.வேலைவாய்ப்பு ஒருங்கினைப்பாளர் சேக் தாவூத் வரவேற்றார்.இதில் செங்கல்பட்டில் உள்ள நிறுவனமான சுந்தரம் நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் முத்துக்குமரன் மற்றும் முதுநிலை நிறுவனர் ஜான்பால் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை தேர்வு செய்தனர்.
இதில் 60க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டதில் 28 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.ஆசிரியர் மரியதாஸ் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.