
கீழக்கரை : ஏர்வாடி அருகே அடஞ்சேரி கடற்கரையில் மான் இறந்து கிடப்பதாக, வனத்துறையினருக்கு, மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். அங்கு சென்று பார்த்த போது இரண்டு வயது மதிக்கத்தக்க புள்ளி மான் இறந்த நிலையில் கரையில் ஒதுங்கி கிடந்தது. கீழக்கரை வன அலுவலர் ராஜேந்திரன் கூறியதாவது: கீழக்கரை, ஏர்வாடியில் மான்கள் நடமாட்டம் கிடையாது. இலங்கை திரிகோண மலையில் மான்கள் அதிகம் வசிப்பதால் விலங்களுக்கு பயந்து தப்பி வரும் போது கடலில் விழுந்து அலையில் சிக்கி இறந்திருக்க வாய்ப்பு உள்ளது. சிவகங்கை மாவட்டத்திலும் அதிகமான மான்கள் இருப்பதால் கால்நடைகளுக்கு பயந்து செல்வனூர் வனப்பகுதிக்கு தப்பி வரும்போது கடலில் விழுந்து இருப்பதற்கான வாய்ப்பும் உள்ளது, என்றார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.