Wednesday, June 29, 2011

கீழக்கரையில் தொடரும் சிலிண்டர் தட்டுப்பாடு

கீழக்கரை, ஜூன் 29:
கீழக்கரையில் சமையல் காஸ் சிலிண்டர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பதிந்து மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
கீழக்கரை காஸ் ஏஜென்சி மூலம் 15ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிலிண்டர் பெற்று வருகின்றனர்.
ஆனால் சமீப காலமாக காஸ் சிலிண்டர்கள் முறையாக கிடைப்பதில்லை. பதிவு செய்து மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் ஓட்டல் மற்றும் டீக்கடைகளுக்கு கூடுதல் விலைக்கு தங்கு தடையின்றி சிலிண்டர்கள் சப்ளை செய்யப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வாகனங்களுக்கு காஸ் நிரப்பும் நிலையம் இல்லை. மதுரை சென்று தான் வாகனங்களுக்கு காஸ் நிரப்ப வேண்டும். ஆனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 697வாகனங்கள் காஸ் மூலம் இயங்கி வருகின்றன. கீழக்கரையில் மட்டும் 73வாகனங்கள் காஸ் மூலம் இயங்கி வருகின்றன.
இவர்களில் பெரும்பாலானோர் மதுரை சென்று காஸ் நிரப்புவதில்லை. மாறாக சமையல் காஸ் சிலிண்டர்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக காஸ் ஏஜென்சி ஊழியர்களை சரிகட்டி வைத்துள்ளனர். இதுபோன்ற முறைகேடுகளால் பொதுமக்களுக்கு காஸ் சிலிண்டர்கள் தடையின்றி கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.