Thursday, June 23, 2011

கீழக்கரை குப்பை பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு !

கீழக்கரை : கீழக்கரையில் குப்பைகளை கொட்டுவதில் ஏற்பட்ட பிரச்னைக்கு கலெக்டர் தலையிட்டு தற்காலிக தீர்வு கண்டார். கீழக்கரையில் குப்பைகளை கும்பிடா மதுரை கிராமத்தில் கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த ஐந்து நாட்களாக குப்பைகளை அகற்ற முடியாமல், தேங்கி துர்நாற்றம் வீச்சத்துடன் சுகாதாரகேடு ஏற்பட்டது. இந்நிலை குறித்து கீழக்கரை அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் அமைப்பு நிர்வாகிகள் நேற்று காலை கலெக்டர் அருண்ராயை சந்தித்து முறையிட்டனர். கலெக்டர் , ராமநாதபுரம் எஸ்.பி., அனில்குமாருடன் தொடர்பு கொண்டு போதிய பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுகொண்டார். எஸ்.பி., உத்தரவின்படி, ராமநாதபுரம் டி.எஸ்.பி., முரளிதரன் தலைமையிலான போலீஸ் பாதுகாப்புடன், நேற்று பகல் ஒரு மணிக்கு நகராட்சி பணியாளர்கள் குப்பைகளை டிராக்டர்களில் எடுத்து சென்று கொட்டினர். "குப்பைகளால் நோய்கள் பரவுவதால் மாற்று இடத்தில் குப்பைகளை கொட்ட வேண்டும்' என கூச்சலிட்ட பெண்களை டி.எஸ்.பி.,சமாதானம் செய்தார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.