கீழக்கரை, ஜூன் 30:
உத்திரகோசமங்கையில் நடந்த வேளாண் தொழில்நுட்ப பயிற்சி முகாமில், விவசாயிகளுக்கு விதை சேகரிப்பு கொள்கலன்கள் வழங்கப்பட்டன.
உத்திரகோசமங்கையில், வேளாண்துறை மற்றும் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் வேளாண் தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடந்தது. நடமாடும் மண் ஆய்வகம் மூலம் மண் ஆய்வு, ஊட்ட மேற்றிய தொழு உரம் தயார் செய்தல், வேளாண் தொழில் நுட்ப முறைகள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.
கலெக்டர் அருண்ராய் பங்கேற்று, வேளாண் தொழில்நுட்ப கண்காட்சி மற்றும் செயல்முறை பயிற்சியை பார்வையிட்டார். களரி கிராமத்தை சேர்ந்த ஐந்து விவசாயிகளுக்கு, விதை கிராம திட்டத்தில் விதை சேகரிப்பு கொள்கலனை 25சதவீத மானியத்தில் வழங்கினார்.
வேளாண் இணை இயக்குநர் ராஜேந்திரன், துணை இயக்குநர் சக்திமோகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சவுந்திரராஜன் மற்றும் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன், ஊராட்சி தலைவர் உத்தண்டவேலு கலந்து கொண்டனர்.
உத்திரகோசமங்கை, மேலசீத்தை, வடக்கு மல்லல், புக்குளம், களரி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் பயோனியர் மருத்துவமனை சார்பில், விவசாயிகளுக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது.
ஏற்பாடுகளை திருப்புல்லாணி வட்டார வேளாண் உதவி இயக்குநர் கமாலுதீன் மற்றும் முகம்மது சதக் பாலிடெக்னிக் ஒருங்கிணைப்பாளர் ஜோசூவா செய்திருந்தனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.