அபுதாபி: மறைந்த சமுதாயப் புரவலர்கள் மெஜஸ்டிக் கறீம் காக்கா மற்றும் டாக்டர் செம்பி சேகு நூர்தீன் காக்கா ஆகிய இருபெரும் புரவலர்களின் மறைவையொட்டி இரங்கல் கூட்டமொன்றை அபுதாபி அய்மான் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. நஜ்தா சாலை ஈடீஏ சமுதாயக் கூடத்தில் நடந்த இந்நிகழ்சிக்கு அய்மான் கல்லூரி தலைவர் கனிமொழிக் கவிஞர் களமருதூர் ஜெ.ஷம்சுதீன் ஹாஜியார் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் செய்யது ஜாபர் முன்னிலை வகித்து, ஏழை எளியோர்களின் நம்பிக்கை நட்சத்திரங்களாக வாரி வழங்கிய மெஜஸ்டிக் கறீம் காக்கா, சேகு நூர்தீன் காக்கா ஆகியோரின் சேவைகளை நினைவு கூர்ந்து பேசினார்கள்.அய்மான் சங்க பொதுச்செயலாளர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீது,அய்மான் கல்லூரி பொருளாளர் ஹபீபுல்லாஹ்,காயிதெமில்லத் பேரவை அபுதாபி மண்டலச் செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,உள்ளிட்டவர்கள் மறைந்த பெரியவர்களின் நற்காரியங்களை நினைவு கூர்ந்து உரையாற்றினர்.பேராசிரியர் குளச்சல் ஷாஹுல் ஹமீத் அவர்களின் இரங்கல் செய்தியை அவரின் புதல்வர் அன்ஸர் முகைதீன் வாசித்தார்.மறைந்தவர்களின் மறுமை வாழ்வு சிறக்க திருமறை குர்ஆன்(யாஸீன்) ஓதி துஆ செய்யப்பட்டது. இறுதியாக மெளலவி ஷரஃபுத்தீன் மன்பஈ காயிப் ஜனாஸா தொழுகை நடத்தினார். நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை அய்மான் சங்க பொருளாளர் முஹம்மது ஜமாலுத்தீன்,மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
தகவல்:ஹமீது யூசுப்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.