Monday, June 6, 2011

காயமடைந்த வெளிநாட்டு புறாவுக்கு சிகிச்சை





கீழக்கரை, ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை சுற்றித்திரிந்த வெளிநாட்டுப் புறாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கீழக்கரை அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை சித்த மருத்துவர்கள் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது வெள்ளை மற்றும் கறுப்பு நிற புள்ளிகளுடன் கண்கள் சிவப்பு நிறத்தில் தலையில் கொண்டையுடன் ஒரு புறா மருத்துவமனையில் சுற்றித் திரிந்தது.

அதை மருத்துவமனை ஊழியர்கள் பிடித்தனர். அப்போது புறாவின் கழுத்தின் இடதுபுறத்தில் பலத்த காயம் இருப்பதைக் கண்டனர். அவர்கள் புறாவை மருத்துவர் ஜவாகிர் உசைனிடம் காண்பித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

இதுபற்றி ஜவாகிர் உசைன் கூறியதாவது: புறா பறக்கும் போது ஏதோ பெரிய பறவைகள் கொத்தி காயம் ஏற்பட்டுள்ளது. கண்கள் சிவந்தும், காலில் செப்புத் தகடில் ஒரு வளையமும் உள்ளது. அவ்வளையத்தில் எல்.கே.யூ.எஸ்.ஏ.9773 என அச்சிடப்பட்டுள்ளது. எனவே இது வெளிநாட்டுப் புறாவா அல்லது புறா கிளப்களில் உள்ளதா என்பது தெரியவில்லை. இதை தனியாக விட்டால் இறந்து போய்விடும்.


இதுகுறித்து வனசரக அதிகாரி கூறியதாவது, கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.குணமடைந்தவுடன் பறக்க விடப்படும் என்றார்









No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.