கீழக்கரை கிழக்கு தெரு பகுதியில் பாத்திமா காலனியை சேர்ந்தவர் ஜகுபர் ஹுசைன் சென்னையில் தொழில் செய்து வருகிறார் இவரது மகன் உபைதுர் ரஹ்மான் இவர் தனியார் பள்ளியில் +1 மாணவராவார்.
இந்நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் மாணவர் உபைதுர் ரஹ்மான் வீட்டிலிருந்து தனது நண்பருடன் வெளியே சென்றதாக கூறப்படுகிறது.வெளியில் சென்ற ஒரு மணி நேரத்திற்கு பிறகு நண்பரின் வீட்டிலேயே மாணவர் ஜகுபர் தற்கொலை செய்து கொண்டார் என்று அவரது வீட்டிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சிக்குள்ளாகிய அவரது குடும்பத்தினர் துயரத்தில் ஆழ்ந்தனர் .உடனடியாக சென்னையிலிருந்த அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கீழக்கரை வந்த அவரது தந்தை இறந்த தன் மகனின் உடலில் கீறல்கள் இருந்ததால் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஜகுபர் ஹுசைன் போலீசில் புகார் செய்ததின் பேரில் கீழக்கரை போலீசார் கொலையா? தற்கொலையா என்று விசாரித்து வருகின்றனர்.மாணவனின் மரணத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.