அசுத்தமாக காணப்படும் பழைய கழிப்பறை பகுதி
கீழக்கரை, ஜூன் 4&
கீழக்கரை நகராட்சி சார்பில் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன் 10லட்சம் செலவில் புதிய பஸ் ஸ்டாண்டில் கட்டண கழிப் பறை கட்டப்பட்டது. பணிகள் முடிந்து 2 ஆண்டுகளாகியும் இன்றுவரை திறக்கப்படவில்லை.
இந்நிலையில், ஏற்கெனவே இடிந்து விழும் நிலையில் உள்ள கழிப்பறையைத்தான் பொதுமக்கள் தற்போது உபயோகப்படுத்தி வருகின்றனர். இந்தக் கழிப்பறை இருக்கும் இடத்தைச் சுற்றி கழிவுநீர் தேங்கியும், குப்பைகளைக் குவிந்தும் சுகாதாரமற்ற நிலை காணப்படுகிறது. நோய் பரவாமல் இருப்பதற்காகவே கழிப்பறை கட்டப்படுகிறது. ஆனால், இந்தக் கழிப்பறைக்குச் சென்று வந்தாலே நோய் பரவும் சூழல் உள்ளது. இதன் அருகில் மீன் மார்க்கெட், நியாய விலைக் கடை, பஸ் நிலையம் ஆகியவை உள்ளன. மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இப்பகுதியில் துர்நாற்றத்தால் மக்கள் முககவசம் அணிந்து செல்லும் நிலை உள்ளது. உடனடியாக நகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் நலன் கருதி புதிய கட்டண கழிப்பறையைப் பயன்பாட்டிற்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.