Saturday, December 22, 2012

கீழ‌க்க‌ரையில லாரி உள்ளிட்ட‌ க‌ன‌ர‌க‌ வாக‌ன‌ங்க‌ள் நுழைவ‌த‌ற்கு நேர‌ம் நிர்ண‌ய‌ம்!

 பைல்(ப‌ழைய‌) ப‌ட‌ம்
http://keelakaraitimes.blogspot.com/2012/09/blog-post_11.html

கீழ‌க்க‌ரைக்கு ச‌ர‌க்கு ஏற்றி வ‌ரும் க‌ன‌ர‌க‌ வாக‌ன‌ங்க‌ளுக்கு ந‌க‌ருக்கு நுழைய‌ நேர‌ம் நிர்ண‌யிப்ப‌தின் மூல‌ம் ந‌க‌ரின் போக்குவ‌ர‌த்து நெரிச‌லை ஓர‌ள‌வுக்கு க‌ட்டுபாட்டுக்கு கொண்டு வ‌ர‌ முடியும் என‌ பல் வேறு த‌ர‌ப்பின‌ரும் கோரிக்கை விடுத்து வ‌ந்த‌ன‌ர்.

இந்நிலையில் கீழ‌க்க‌ரை ந‌க‌ரில் போக்குவரத்து சீரமைப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம், போலீசார் மற்றும் வர்த்தக சங்கம் சார்பில், கீழக்கரை டி.எஸ்.பி., சோமசேகர் தலைமையில் நடந்தது.

வர்த்தக சங்க தலைவர் சகாபுதீன் முன்னிலை வகித்தார். செயலாளர் சுப்பிரமணி வரவேற்றார்.

ஜன.1ம் தேதி முதல், காலை 8 முதல் 11 மணி வரை, மாலை 4 முதல் இரவு 7 மணி வரை, லாரி மற்றும் கனரக வாகனங்கள் நகருக்குள் வரக்கூடாது. வி.ஏ.ஓ., அலுவலகம் எதிரில், தனியார் பங்களிப்புடன் நிழற்குடையுடன் கூடிய சிக்னல் அமைத்தல், போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் கட்டட தொழிலாளர்களின் கூட்டத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுதல், நான்கு சக்கர வாகனங்கள் மாற்று வழியில் நகருக்குள் நுழைய ஒரு வழிப்பாதை ஏற்படுத்துவது குறித்து ஆய்வு செய்வது உள்ளிட்ட‌ ப‌ல்வேறு முடிவுக‌ள் மேற்கொள்ள‌ப்ப‌ட்டது.இன்ஸ்பெக்டர் கணேசன், வர்த்தக சங்க உதவி தலைவர்கள் தியாகராஜன், ஜகுபர் பொருளாளர் சந்தானம் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.
க‌ன‌ர‌க‌ வாக‌ன‌ங்க‌ளுக்கு நேர‌ம் நிர்ண‌யித்த‌தின் மூல‌ம் குறிப்பாக‌ காலை ம‌ற்றும் மாலையில் ப‌ள்ளி,கல்லூரி வாகன‌ங்க‌ள் அதிக‌ம் வ‌ரும் வேளையில் சாலையில்  லாரிக‌ளை நிறுத்தி ச‌ர‌க்கு ஏற்றி ,இற‌க்குவ‌தினால்  ஏற்ப‌டும் போக்குவ‌ர‌த்து நெரிச‌ல்க‌ள் ஓர‌ள‌வுக்கு குறையும் என‌ ச‌மூக‌ ந‌ல‌ ஆர்வ‌ல‌ர்க‌ள் தெரிவித்த‌ன‌ர்.
 

Friday, December 21, 2012

கீழ‌க்க‌ரையில் க‌த்தியை காட்டி 5ப‌வுன் செயின் ப‌றித்த‌தாக‌ 3பேர் கைது !

கீழக்க‌ரை ப‌ர‌த‌ர் தெருவில் வசிக்கும் கோம‌ஸ்(80) என்ற‌ மூதாட்டியிட‌ம் க‌த்தியை காட்டி 5 ப‌வுன் ந‌கையை ப‌றித்ததாக‌ மூன்று பேரை கீழ‌க்க‌ரை போலீசார் கைது செய்துள்ள‌ன‌ர்.

இது குறித்து ப‌ர‌த‌ர்தெரு பீட்ட‌ர் என்பவ‌ரின் ம‌னைவி ஸ்டெய்லி கீழ‌க்க‌ரை காவ‌ல் நிலைய‌த்தில் கொடுத்த‌ புகாரில் கூறியிருப்ப‌தாவ‌து,
என‌து க‌ண‌வ‌ர் பீட்ட‌ரின் ம‌ருத்துவ‌ சிகிச்சைக்காக‌ ராமநாத‌புர‌ம் சென்றிருந்த‌ நேர‌ம் என‌து மாமியார் ஜாந்தார்க்மேரி கோம‌ஸ்(80) ம‌ட்டும் வீட்டில் த‌னியாக‌ இருந்தார்.

அப்போது அங்கு வ‌ந்த‌ மூன்று பேர் என‌து மாமியாரிட‌ம் குடிக்க‌ த‌ண்ணீர் கேட்டு பின்னாடியே சென்று க‌த்தியை காட்டி மிர‌ட்டி க‌ழுத்தில் கிட‌ந்த‌ 5 ப‌வுன் செயினை ப‌றித்து கொண்டு ஓடி விட்ட‌ன‌ர்.என‌ புகார் ம‌னு கொடுத்திருந்தார்.

இது குறித்து டி.எஸ்.பி சோம‌சேகர் உத்த‌ர‌வின் பேரில் இன்ஸ்பெக்ட‌ர் க‌னேச‌ன் த‌லைமையில் எஸ்.ஐ செல்ல‌ம‌ணி உள்ப‌ட‌ தனிப்ப‌டை அமைத்து வ‌ழ‌க்கு ப‌திவு செய்து குற்ற‌வாளிக‌ளை தேடி வ‌ந்த‌ன‌ர்.

இந்நிலையில் இக்குற்ற‌ச்செய‌லில் ஈடுப‌ட்ட‌தாக‌‌ கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌  ஸ்டாலின் ராஜா (18), முஹம்மதுகான் (18), அர்சத்நெய்னா (19) ஆகிய‌ மூன்று பேரை போலீசார் கைது செய்த‌ன‌ர்.

ஏர்வாடியில் ம‌ன‌ ந‌ல‌ ம‌ருத்துவ‌ம‌னை!முத‌ல்வ‌ர் ஜெய‌ல‌லிதா அறிவிப்பு!

ப‌ட‌ விள‌க்க‌ம் (ப‌ழைய‌(பைல்)ப‌ட‌ம் :இப்ப‌குதிக‌ளில் சில‌ர் ம‌ன‌ நோயாளிக‌ளை வாக‌ன‌ங்க‌ளில் இருந்து இற‌க்கி விட்டு சென்று விடுகின்ற‌ன‌ர். ராம‌நாத‌புர‌ம்- கீழக்க‌ரை சாலையில் கிட‌க்கும் பெண் ம‌ன‌ நோயாளி
த‌மிழ‌க‌த்தின் ப‌ல்வேறு மாவ‌ட்ட‌ங்க‌ளுக்கு ந‌ல திட்ட‌ங்க‌ளை முத‌ல்வ‌ர் ஜெய‌ல‌லிதா வெளியிட்டார்.அதில் ஏர்வாடியில் ம‌ன‌ ந‌ல‌ ம‌ருத்துவ‌மனை அமைக்கப்ப‌டும் என‌ அறிவித்துள்ளார்.

ஏர்வாடி தர்ஹாவில் கடந்த 2002 ஆக.,6ல் மன நலகாப்பகத்தில் தீவிபத்து நடந்தது. இதில் 28 மனநோயாளிகள் தீயில் கருகி உயிரழந்தனர். மனநோயாளிகள் சங்கிலியால் கட்டப்ப‌ட்டு இருந்ததால் தப்பிக்க முடியாமல் உயிரழப்பு அதிகமாக இருந்தது பின்னர் வ‌ழ‌க்க‌ம் போல் அசம்பாவிதம் ந‌டைபெற்ற‌ பிற‌கு தான் அர‌சாங்க‌ அனும‌தியில்லாம‌ல் ஏர்வாடி தர்ஹாவில் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ அனைத்து ம‌ன‌ந‌ல காப்ப‌க‌ங்க‌ளும் அர‌சின் ந‌ட‌வ‌டிக்கையால் மூட‌ப்ப‌ட்ட‌து.

இச்சம்பவத்திற்கு பிறகும் ம‌ன‌ நோயால் பாதிப்ப‌டைந்த‌வ‌ர்க‌ளை ஏர்வாடி த‌ர்ஹாவிற்கு அழைத்து வ‌ந்தால் குண‌மாகும் என்று ப‌ல‌ர் அவ‌ர்களின் ந‌ம்பிக்கையின் அடிப்ப‌டையில் இப்ப‌குதிக்கு அழைத்து வருகிறார்க‌ள்.

மேலும் வெளியூரை சேர்ந்த‌ க‌ல் நெஞ்ச‌க்காரார்க‌ள் சில‌ர் மன நோயாளிகளை வாகனங்களில் அழைத்து வந்து ஏர்வாடி தர்ஹா - கீழக்கரை சாலைகளில் இறக்கி விட்டு செல்லும் அவலம் நீண்ட காலமாக இப்பகுதியில் நிகழ்ந்து வருகிறது. இவ்வாறு இறக்கி விடப்பட்ட மனநோயாளிகள் அருகிலுள்ள ஏர்வாடி தர்காவிற்கும்,எஞ்சியவர்கள் கீழக்கரை மற்றும் அருகிலுள்ள ஊர்களில் பரிதாபமாக சுற்றி திரிகிறார்கள்.

 இது போன்று சுற்றி திரிபவ‌ர்க‌ளை அர‌சு துறையின‌ர் வேனில் ஏற்றி சென்னை ம‌ன‌ ந‌ல‌ ம‌ருத்துவ‌ம‌னைக்கு அனுப்பி வ‌ந்த‌ன‌ர்.இந்த‌ ந‌டைமுறை அவ்வ‌ப்போது ந‌டைபெற்று வ‌ந்த‌து.

இந்நிலையில் ஏர்வாடி ப‌குதியில் ம‌ன‌ ந‌ல‌ ம‌ருத்துவ‌மனை அமைக்க‌ வேண்டும் என‌ இப்ப‌குதி ம‌க்க‌ள் கோரிக்கை எழுப்பி வ‌ந்த‌ன‌ர் இக்கோரிக்கையை வ‌லியுறுத்தி செய்திக‌ளும் வெளியாகி வ‌ந்த‌ன‌.

நீண்ட‌ கால‌ கோரிக்கையின் ப‌ல‌னாக‌ த‌ற்போது த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர் ஜெய‌ல‌லிதா ஏர்வாடியில் ம‌ன‌ ந‌ல‌ ம‌ருத்துவ‌ம‌னை அமைக்க‌ப்ப‌டும் என‌ அறிவித்துள்ளார்.இந்த‌ அறிவிப்பை விரைந்து செய‌ல்ப‌டுத்தி ம‌ன‌ ந‌ல‌ ம‌ருத்துவ‌ம‌னை விரைவாக‌ அமைய‌ வேண்டும் என‌ப‌து கோரிக்கை விடுத்த‌ ம‌க்க‌ளின் எதிர்பார்ப்பாக‌ உள்ள‌து.

இது தொட‌ர்பான‌ முந்தைய‌ செய்தி..
http://keelakaraitimes.blogspot.com/2012/10/blog-post_14.html


 

Thursday, December 20, 2012

ராம‌நாத‌புர‌ம் ர‌யில்வே கேட் ப‌குதி‍யில் மேம்பால‌ம்!முத‌ல்வருக்கு ஜ‌வாஹிருல்லாஹ்.எம்.எல்.ஏ ந‌ன்றி!

இருப்புப்பாதை  குறுக்கிடும் சாலைகளில் 322.37 கோடி ரூபாய் செலவில், புதிய ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் கீழ்பாலங்கள் பணிகள் 8 மாவட்டங்களில் மேற்கொள்ள முத‌ல்வ‌ர் ஜெய‌ல‌லிதா அனுமதி  அளித்துள்ளார்.

இந்த‌ அறிவிப்பில் ஒன்றாக‌  ராமநாதபுரம்-உச்சுப்புளி ரயில் நிலையங்களுக்கிடையே ராமநாதபுரம்-கீழக்கரை ர‌யில்வே கேட் ப‌குதியில் மேம்பாலம் அமைக்க‌ த‌மிழ‌க‌ அர‌சு அனும‌தி அளித்துள்ள‌து.

நீண்ட கால‌மாக‌ இப்ப‌குதி ம‌க்க‌ள் ராம‌நாத‌புர‌ம்‍ கீழ‌க்க‌ரை  ர‌யில்வே கிராசிங்கில்  மேம்பால‌ம் அமைக்க‌  கீழ‌க்க‌ரை சேர்ம‌ன் உள்ளிட்ட‌ ப‌ல் வேறு த‌ர‌ப்பின‌ரும் கோரிக்கை விடுத்து வ‌ந்த‌ன‌ர்.ச‌ட்ட‌ம‌ன்ற‌ ப‌ட்ஜெட் கூட்ட‌த்தொடரின் போது ராம‌நாத‌புர‌ம் ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் ஜ‌வாஹிருல்லாஹ்வும் மேம்பால‌ம் க‌ட்ட‌ கோரிக்கை விடுத்திருந்தார்.

இது குறித்து ராம‌நாத‌புர‌ம் ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் ஜ‌வாஹிருல்லாஹ் வெளிட்டுள்ள‌ செய்தி குறிப்பில்,

கோரிக்கையை ஏற்று த‌ற்போது மேம்பால‌ம் க‌ட்ட‌ அனும‌தியும் நிதியும் வ‌ழ‌ங்கி உத்த‌ர‌விட்ட மாண்புமிகு த‌மிழ‌க முத‌ல‌மைச்ச‌ருக்கு ந‌ன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவ‌ர் தெரிவித்துள்ளார்.

த‌க‌வ‌ல் : கீழை இர்பான்,க‌த்தார்.
 

கீழ‌க்க‌ரையில் மின்வெட்டை க‌ண்டித்து திமுக‌ சார்பில் ஆர்ப்பாட்ட‌ம்!


த‌மிழ்நாடு முழுவ‌தும் க‌டும் மின்வெட்டை கண்டித்து திமுக‌ சார்பில் ஆர்ப்பாட்ட‌ம் ந‌டைபெற்ற‌து.இந்நிலையில் கீழ‌க்க‌ரையில் ந‌க‌ர் திமுக‌ சார்பில் புதிய‌ பேருந்து நிலைய‌ம் அருகில் செய‌லாள‌ர் ப‌சீர் த‌லைமையில் ஆர்பாட்ட‌ம் ந‌டைபெற்ற‌து.

துணை செயலாள‌ர் நைனார்,ஜமால் பாரூக்,இளைஞ‌ர் அணி செய‌லாள‌ர் த‌வ்பீக் ராஜா முன்னிலை வ‌கித்தன‌ர்.மேலும் க‌வுன்சில‌ர்க‌ள் ஹாஜா ந‌ஜிமுதீன் ,சாகுல் ஹ‌மீது ம‌ற்றும் எஸ்.டி.பி.ஐ அப்துல் ஹாதி,ந‌க‌ர் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் ஹ‌மீது கான்,திமுக‌ மாவ‌ட்ட‌ பிர‌திநிதி கென்ன‌டி ம‌ற்றும் நிர்வாகிக‌ள் சுல்த‌ன் செய்ய‌து இப்ராகிம் ராஜா, சுகைபு,அமீர்,முன்னாள் செய‌லாள‌ர் ஏ.வி.டி அப்துல் ர‌ஹ்மான் ம‌ற்றும் ம‌க‌ளிர் உள்ப‌ட‌ 200க்கும் அதிக‌மான‌ தொண்ட‌ர்க‌ள் உள்ளிட்ட‌ ஏராள‌மானோர் க‌ல‌ந்து கொண்டன‌ர்.லாபிர் ந‌ன்றி கூறினார்.

கீழ‌க்க‌ரையில் ந‌ட‌மாடும் இல‌வ‌ச‌ ம‌ருத்துவ‌ முகாம் !


































துபாய் இ.டி.ஏ நிறுவ‌ன‌த்தில் ப‌ணிபுரிபவ‌ர்க‌ளால் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு வ‌ரும் ச‌முதாய‌ ந‌ல‌ அற‌க்க‌ட்ட‌ளையின் வாக‌ன‌த்தில் செய‌ல்ப‌டும் ம‌ருத்துவ‌ குழுவின் இல‌வ‌ச‌ ம‌ருத்துவ‌ முகாம் தெற்குதெரு பைத்துல்மால் க‌ட்டிட‌த்தில் ந‌டைபெற்ற‌து.

இதில் ஏராள‌மான‌ ஆண்க‌ளும்,பெண்க‌ளும் க‌ல‌ந்து கொண்டு ப‌ய‌ன‌டைந்த‌ன‌ர். இம்முகாமில் ர‌த்த‌ அழுத்த‌ம்,நீர‌ழிவு ப‌ரிசோத‌னை உள்ளிட்ட‌ ப‌ரிசோத‌னைக‌ள் செய்ய‌ப்ப‌ட்ட‌து. மருத்துவ‌ர் சித்ரா ஜோதி,செவிலிய‌ர்க‌ள் கவிதா,ஊழிய‌ர் அல்தாப் ஹுசைன் இப்ப‌ணியில் ஈடுப‌ட்ட‌ன‌ர்.

செய்தி : சேகு ச‌த‌க் இப்ராகிம்

Wednesday, December 19, 2012

ராமநாதபுரம் ‌ நகராட்சி தலைவர் எஸ்.கே.ஜி. சேகர் ம‌ர‌ண‌ம்!





ராமநாதபுரம் நகர மன்றத் தலைவர் எஸ்.கே.ஜி. சேகர் (62) உடல் நலக் குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார்.

உடல் நலக் குறைவு காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் கடந்த  ஒரு மாதமாக காலமாக சிகிச்சை பெற்று வந்த சேகர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 அதிமுக‌வில் பல்வேறு பதவிகளையும், பொறுப்புகளையும் சேகர் வகித்துள்ளார். அவருக்கு சந்தானலட்சுமி என்ற மனைவியும், சர்மிளா தேவி என்ற மகளும், அமிர்தசஞ்சீவி என்ற மகனும் உள்ளனர்

கீழ‌க்க‌ரை க‌ல்லூரியில் வ‌க்ப் வாரிய‌‌ த‌லைவ‌ர் தமிழ்ம‌க‌னுக்கு வ‌ர‌வேற்பு!


கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரிக்கு வருகை தந்த தமிழக வக்பு வாரிய தலை வர் தமிழ்மகன் உசேனுக்கு கல்லூரி வளாகத்தில் வரவேற்பு நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முகம் மது ஜகாபர் தலைமை வகித்தார், கல்லூரி இயக்குநர் ஹபீப்முகம்மது சதக்கத்துல் லா முன்னிலை வகித்தார், கணினித்துறை பேராசிரியர் சேக் யூசுப் வரவேற்றார்,

இதில் வக்புவாரிய தலைவர் தமிழ்மகன் உசேன் பேசுகையில், ‘தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஒரு சில கல்லூரிகளில் மட்டுமே மரைன், கட்டிடக்கலை, வேதி யியல், ஏரோனாடிக்கல் போ ன்ற பாடபிரிவுகள் உள்ளன. பின்தங்கிய ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அமைந்துள்ள முகம்மது சதக் பொறியியல் கல்லூரி யில் இந்த பிரிவுகள் உள்ளது பெருமைப்பட வே ண்டிய விஷயம்’ என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் ஆனி முத்து, முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல்கதரியா, அம்மா பேரவை செயலாளர் சரவணாபாலா ஜி, இளைஞரணி செ யலா ளர் இம்பாலா சுல்தான், மாணவரணி சுரேஷ், கீழக்கரை துணை செயலா ளர் குமரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடு களை மக்கள் தொடர்பாளர் நஜீமுதீன் மற்றும் துறைத்தலைவர் கார்த்திகேயன் செய்திருந்தனர்.

 

Tuesday, December 18, 2012

ராமாநாத‌புர‌ம்-கீழ‌க்க‌ரை ர‌யில்வே கேட்டில் புதிய‌மேம்பால‌ம்!த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ருக்கு சேர்ம‌ன் ந‌ன்றி

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் பல இடங்களில், ரயில்வே இருப்புப்பாதைகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது. சாலை மேம்பாலங்கள் மற்றும் கீழ்பாலங்கள் இல்லாத இடங்களில், வாகனங்கள் ரயில்வே கேட்க‌ளில் அதிக நேரம் காத்திருந்து பயணங்களை தொடர வேண்டியுள்ளதால், பயண நேரம் அதிகமாதல், காலவிரயம் ஏற்படுதல், எரிபொருள் விரயம் மற்றும் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இருப்புப்பாதை  குறுக்கிடும் சாலைகளில் 322.37 கோடி ரூபாய் செலவில், புதிய ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் கீழ்பாலங்கள் பணிகள் 8 மாவட்டங்களில் மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளார்

இத்திட்ட‌த்தில் ஒன்றாக‌  ராமநாதபுரம்-உச்சுப்புளி ரயில் நிலையங்களுக்கிடையே ராமநாதபுரம்-கீழக்கரை ர‌யில்வே கேட் ப‌குதியில் மேம்பாலம் அமைக்க‌ த‌மிழ‌க‌ அர‌சு அனும‌தி அளித்துள்ள‌து.
நீண்ட கால‌மாக‌ இப்ப‌குதி ம‌க்க‌ள் ராம‌நாத‌புர‌ம்‍ கீழ‌க்க‌ரை  ர‌யில்வே கிராசிங்கில்  மேம்பால‌ம் அமைக்க‌  கோரிக்கை விடுத்து வ‌ந்த‌ன‌ர்.மேம்பால‌த்திற்கு த‌ற்போது அனும‌தி அளிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.என‌வே நீண்ட‌ நாள் பிர‌ச்ச‌னை முடிவுக்கு வ‌ருகிற‌து.

இது குறித்து ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காத‌ரியா கூறிய‌தாவ‌து,


இராமநாதபுரம் – கீழக்கரை சாலையில், இராமநாதபுரம் நுழைவாயிலில் இருக்கும் ரயில்வே க்ராஸிங் ப‌குதியில் வாகனங்கள் ரயில்வே கேட்க‌ளில் அதிக நேரம் காத்திருந்து பயணங்களை தொடர வேண்டியுள்ளது.
கீழக்கரை பகுதியில் இருந்து இராமனாதபுரத்துக்கு சென்றடைய முடியாமலும், அவசர காரியங்களுக்கு தக்க நேரத்தில் செல்ல முடியாமலும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டும் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.  மேலும் ஈ.சி.ஆர் சாலையின் வழியே திருச்செந்தூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி செல்லும் பயனிகளும் நெடு நேரம் ரயில்வே கேட்டில் காத்திருக்கும் சூழ் நிலையும் ஏற்பட்டு வந்தது.
என‌வே இப்பிர‌ச்ச‌னையை தீர்க்க‌ இப்ப‌குதியில் மேம்பால‌ம் அமைக்க‌ வேண்டும் என‌ த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர்  அவ‌ர்க‌ளிட‌ம் கோரிக்கை வைத்திருந்தோம் த‌ற்போது அந்த‌ கோரிக்கையை நிறைவேற்றி உத்த‌ர‌வு பிற‌பித்த‌ முத‌ல்வ‌ர் அவ‌ர்களுக்கு இப்ப‌குதி ம‌க்க‌ள் சார்பாக‌ நெஞ்சார்ந்த‌ ந‌ன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

Monday, December 17, 2012

புதிய‌ ஹைமாஸ் த‌ர‌மில்லை!க‌வுன்சில‌ர் புகார்!விள‌ம்பர‌த்திற்காக‌ குற்ற‌ச்சாட்டு!சேர்ம‌ன் ப‌தில்

18வ‌து வார்டு க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிம் வெளியிட்டுள்ள‌ செய்தியில்,
கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி சார்பாக‌ 2011 2012 ந‌க‌ர்புற‌ வ‌ள‌ர்ச்சி திட்ட‌த்தின் கீழ் 36 ல‌ட்ச‌ம் ம‌திப்பில் தெரு விள‌க்குக‌ள் ஒப்ப‌ந்த‌ரார‌ர்க‌ளால் க‌ட‌ந்த‌ முறை த‌ர‌ம் இல்லாம‌ல் அனுப்ப‌ப்ப‌ட்டு க‌டும் எதிர்ப்புக்கு பின் வாப‌ஸ் பெற‌ப்ப‌ட்ட‌து.

ஆனால் மீண்டும் பிர‌ப‌ல‌ நிறுவ‌ன‌த்தின் பெய‌ரில் போலி லேபிள்க‌ளை ஒட்டி  தெரு விள‌க்குக‌ள் அவ‌ச‌ர‌ க‌தியில் மின்க‌ம்ப‌ங்க‌ளில் பொருத்த‌ப்ப‌ட்டு வ‌ருகிறது. குறிப்பாக‌ ம‌ன்ற‌ ஒப்புத‌லுக்கு விரோத‌மாக‌ 4(நான்கு) இட‌ங்க‌ளில் ஹைமாஸ் விள‌க்குக‌ள் அமைக்க‌ப்ப‌ட்டு இருக்கிற‌து.
(ஒப்ப‌ந்த‌ப்ப‌டி த‌ர‌மான‌ ஒரிஜின‌ல் விள‌க்குக‌ளை பொருத்த‌ நீதிம‌ன்ற‌த்தை நாடி உள்ளோம்)

இது ஒருபுற‌மிருக்க‌ ஏற‌கென‌வே அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ கீழ‌க்க‌ரை ந‌க‌ர் நுழைவு வாயிலான‌ முக்கு ரோட்டில் இருக்கும் உய‌ர் மின் விள‌க்குக‌ள்(ஹைமாஸ்) விள‌க்கு எரிவ‌தே இல்லை.அதுப்போல் ம‌ணீஸ் பேக்க‌ரி அருகே ஹைமாஸ் விள‌க்குக‌ளில் ல் ஒன்று ம‌ட்டும்தான் எரிகிற‌து.க‌ட‌ந்த‌ மூன்று மாத‌ங்க‌ளாக‌ இதே நிலைதான். 
 என‌வெ த‌ர‌மில்லா புதிய‌ ஹைமாஸ் விள‌க்குக‌ளை அமைப்ப‌தில் காட்டும் ஆர்வ‌த்தை ஏற்கென‌வே பழுத‌டைந்து  எரியாம‌ல் இருக்கும் மின் விள‌க்குக‌ளை ச‌ரி செய்வ‌தில் அக்க‌றை செலுத்த‌ வேண்டும்.




இவ்வாறு அவ‌ர் கூறியுள்ளார்


இது குறித்து ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவியத்துல் காத‌ரியாவிடம் கேட்ட‌ போது ,

க‌வுன்சில‌ர் குறிப்பிட்டுள்ள‌ புதிய‌ ஹைமாஸ் விள‌க்குக‌ள் ச‌ப்ளை செய்த‌ நிறுவ‌ன‌ம் , க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராஹிம் உள்ளிட்ட‌ க‌வுன்சில‌ர்க‌ள் அனைவ‌ராலும் ந‌க‌ராட்சி கூட்ட‌த்தில் ஏற்று கொண்ட‌ நிறுவ‌ன‌ம் தான்.

மேலும் இவ‌ர்க‌ள்தான் இந்த‌ நிறுவ‌ன‌த்திற்கு தெரு விள‌க்குடெண்ட‌ர் வ‌ழ‌ங்க‌ வேண்டும் என‌ ந‌க‌ராட்சி கூட்ட‌த்தில் வ‌லிறுத்தினார்க‌ள்.அத‌ன் ப‌டி ந‌கராட்சி கூட்ட‌த்தில் தீர்மான‌ம் நிறைவேற்ற‌ப்ப‌ட்டு முறைப்ப‌டி இந்நிறுவ‌ன‌த்திற்கு தெரு விள‌க்கு டெண்ட‌ர் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.த‌ற்போது இவ‌ரே குறை கூறுகிறார்.

ஏற்‌கென‌வே த‌ர‌ப்ப‌ட்ட‌ விளக்குக‌ள் த‌ர‌மில்லாத‌வை என‌ திருப்பிய‌னுப்ப‌ப‌ட்டு த‌ற்போது அர‌சு வ‌ழிகாட்டுத‌ல்ப‌டி கூற‌ப்ப‌ட்டுள்ள‌ விதிமுறைக‌ள் முறையாக‌ க‌டைபிடிக்க‌ப்ப‌ட்டு த‌ரமான‌ விள‌க்குக‌ள்தான் பொருத்த‌ப்ப‌டுகிற‌து.
இவ‌ர் கூறியுள்ள‌ப‌டி கோட்டுக்கு செல்ல‌ட்டும் ச‌ட்ட‌ப்ப‌டி ச‌ந்திப்போம்.

மேலும் இவ‌ர் விள‌ம்ப‌ர‌த்திற்காக‌ குறை கூறுவ‌து வாடிக்கையாகி விட்ட‌து.எந்த‌ நல‌ திட்ட‌ங்க‌ள் செய‌ல்ப‌டுத்தினாலும் முட்டுக‌ட்டை போடுவ‌து இவ‌ர‌து ந‌ட‌வ‌டிக்கைக‌ளில் ஒன்றாகி விட்ட‌து.இவ‌ரால் கீழ‌க்க‌ரை ந‌க‌ரின் முன்னேற்ற‌த்தை தாங்கி கொள்ள‌ முடிய‌வில்லை.என்ன‌ கார‌ண‌மென்று தெரிய‌வில்லை.என்றுமில்லாத‌ அள‌விற்கு ந‌ம‌து முத‌ல்வ‌ர் ஜெய‌ல‌லிதா அவ‌ர்க‌ளின் அர‌சாங்க‌ம் ப‌ல்வேறு ந‌ல‌ திட்ட‌ங்க‌ளை கீழ‌க்க‌ரைக்கு த‌ந்து செய‌ல்ப‌டுத்தி கொண்டிருக்கிற‌து.

அவ‌ர் கூறியுள்ள‌ப‌டி ப‌ழுதடைந்துள்ள‌ மின் விள‌க்குக‌ளை சீர் செய்ய‌ ஏற்கென‌வே ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.விரைவில் ச‌ரி செய்ய‌ப்ப‌டும்.
ம‌க்க‌ள் அனைத்தையும் க‌வ‌னித்து கொண்டிருக்கிறார்க‌ள் என‌பதை க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிம் நினைவில் வைத்து த‌ன‌து 18வ‌து வார்டுக்கான‌ ந‌ல‌ப்ப‌ணிக‌ளில் க‌வ‌ன‌ம் செலுத்த‌ வேண்டும் இவ்வாறு அவ‌ர் கூறினார்.

கீழக்கரை ப‌ள்ளிக‌ளில் விளையாட்டு போட்டிக‌ள்!மாண‌வ‌ர்க‌ள் ப‌ரிசு பெற்ற‌ன‌ர்!


கீழக்கரை கிழக்குத்தெரு கைரத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடங்கிய கல்வி விளையாட்டு விழா நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

பள்ளி தாளாளர் செய் யது இபுராகிம் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர் பயிற்றுனர் சுந்தரமூர்த்தி, சிறப்பு ஆசிரியர் ஜீவா, கைரத்துல்ஜலாலியா மேல்நிலைப்பள்ளி முன்னாள் தாளாளர் கரீம், மேலாண்மைக்குழு உறுப்பினர் ஹசீனா முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார் வரவேற்றார். ஆசிரியர் இபுராகிம்சா நன்றி கூறினார். ஏற்பாடு களை உதவி தலைமை ஆசிரியர் சசிகலா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

கீழக்கரை தெற்குத் தெரு இஸ்லாமியா துவக்கப்பள்ளியில் அனை வருக்கும் கல்வி இயக்கத்திட்டம் சார்பில் நடை பெற்ற சிறப்பு குழந்தைகளுக்கான உள்ளடங்கிய விளையாட்டு போட்டியில் தாளாளர் முகைதீன் இபுராகிம் தலைமை வகித் தார். தலைமை ஆசிரியர் தனலெட்சுமி வரவேற்றார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலை முதல்வர் மேபல் ஜஸ்டஸ், இஸ்லாமியா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சார்த் தோ நன்றி கூறினார், ஏற்பாடுகளை ஆசிரியர் தாஹா ரசூல் மற்றும் ஆசியர்கள் செய்திருந்தனர்.

பொதும‌க்க‌ளை அச்சுறுத்திய‌ விஷக் குழ‌விக‌ள் அழிப்பு !



ராமாத‌புர‌ம் மாவ‌ட்டம்‌ பெரியப்பட்டினம் பிலால் நகரில் மக்களை அச்சுறுத்திய‌ விஷ‌ குழவிக‌ளை பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மற்றும்SDPIகட்சியின்  முயற்சியில் அர‌சின் ந‌ட‌வ‌டிக்கையின் பேரில் தீயனைப்பு துறை ஆய்வாள‌ர் அண்ணாதுறை தலைமையிலான குழு விஷ‌ குழ‌விக‌ளை அகற்றியது.

இதில் SDPI தொகுதி தலைவர் பைரோஸ் கான் SDPI நகர் செயலாளர் சேகு இபுராகிம் பாப்புலர் ஃபிரண்ட் நகர் தலைவர் ரியாஸ் கான் மற்றும் SDPI முன்னால் மாவட்ட செயல்ளார் சேகு ஜலாலுதீன் ஆகியோர் சம்பவ இடத்திற்க்கு நேரில் சென்று தீய‌ணைப்பு துறையின‌ருக்கு பல வேறு உதவிகளை செய்தனர்.

 

கீழ‌க்க‌ரையில் மூட்டு வ‌லி உள்ளிட்ட‌ நோய்க‌ள் குறித்து இல‌வ‌ச‌ ம‌ருத்துவ‌ விழிப்புண‌ர்வு முகாம்!!

கீழக்க‌ரை பார‌த் பெட்ரோலிய‌ம் சார்பாக‌ ஹீசைனியா திரும‌ண‌ ம‌ஹாலில் தொழுகை ம‌ற்றும் வீட்டு ப‌ணிக‌ளின் போது ஏற்ப‌டும் மூட்டு வ‌லி,இடுப்பு வ‌லி ச‌ம்ப‌ந்த‌மாக‌ இல‌வ‌ச‌ ம‌ருத்துவ‌ ஆலோச‌னை  முகாம் ந‌டைபெற்ற‌து
.
கீழ‌க்க‌ரை பார‌த் பெட்ரோல் ப‌ங்க் உரிமையாள‌ர் எம்.எம்.கே.முக‌ம்ம‌து ஜ‌மால் இப்ராகிம் த‌லைமை வ‌கித்தார்.தெற்கு தெரு ஜ‌மாத் செயலாள‌ர் அப்துல் வாஹித்,செய்ய‌து முக‌ம்ம‌து தம்பி அக்க‌லா மரைக்கா,டாக்ட‌ர் செய்ய‌து அப்துல் காத‌ர் முன்னிலை வ‌கித்தன‌ர்.

இதில் சென்னை ஆர்தோ சிற‌ப்பு ம‌ருத்துவ‌ர் ஆறுமுக‌ம் க‌ல‌ந்து கொண்டு இடுப்பு ம‌ற்றும் மூட்டு வ‌லி,ஏற்ப‌டும் கார‌ண‌ங்க‌ளை கூறி நிவார‌ண‌ம் பெறுவ‌த‌ற்கான‌ வ‌ழிக‌ளையும் எடுத்துரைத்தார்.

ச‌ன் டிவி செய்த் தொகுப்பாள‌ர் சிவ‌குமார் தொகுத்து வ‌ழ‌ங்கி ந‌ன்றி கூறினார்.இதில் 200க்கும் அதிக‌மானோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.
 

Saturday, December 15, 2012

ஓட‌க்க‌ரை ப‌ள்ளி அருகே ம‌க‌ளிர் காவ‌ல் நிலைய‌மா? க‌டும் எதிர்ப்பு!


கீழ‌க்க‌ரை ம‌க்கள் ந‌ல‌ பாதுகாப்பு க‌ழக‌ செய‌லாள‌ர் முகைதீன் இப்ராஹிம் வெளியிட்டுள்ள‌ அறிக்கையில் கூறியிருப்ப‌தாவ‌து,

கீழ‌க்க‌ரை ஓட‌க்க‌ரை  ப‌ள்ளி வ‌ளாக‌த்தில் த‌பால் நிலையமாக‌ செய‌ல்ப‌ட்டு  வந்த‌ இட‌த்தில் த‌ற்போது ம‌க‌ளிர் காவ‌ல் நிலையம் செய‌ல்ப‌ட‌ இருப்பதாக‌ அறிந்தோம். அப்ப‌டி ஒரு திட்ட‌ம் இருந்தால் உரிய‌வ‌ர்க‌ள் ம‌றுப‌ரீசில‌னை செய்ய‌ வேண்டும்.இந்த‌ இட‌த்தை ம‌க‌ளிர் காவ‌ல் நிலைய‌ம் செய‌ல்ப‌டுவ‌த‌ற்கு கொடுக்க‌ கூடாது.

அர‌சுதுறை அலுவ‌ல‌க‌ங்க‌ள் கீழ‌க்க‌ரை ந‌க‌ருக்குள் அமைந்து பொதும‌க்களுக்கு உத‌வியாக‌ இருக்கும் ப‌ட்ச‌த்தில் ம‌கிழ்ச்சிதான் அதே நேர‌த்தில் குடியிருப்புக‌ள் அதிக‌ம் இருக்கும் இட‌ங்க‌ளில் ம‌க‌ளிர் காவ‌ல் நிலைய‌ம் அமைப்ப‌து பிர‌ச்ச‌னைக‌ளை அதிக‌ரிக்கும்.அப்ப‌குதியில் ஏற்ப‌டும் சின்ன‌ ,சின்ன‌ பிர‌ச்ச‌னைக‌ள் பூத‌க‌ர‌மாக்க‌ப்ப‌ட்டு பெண்க‌ள் காவ‌ல் நிலைய‌ம் செல்லும் சூழ்நிலை ஏற்ப‌டும்.ந‌ம‌து ஜ‌மாத்க‌ள் ம‌ற்றும் தெருவாசிகளால் தீர்க்க‌ப்ப‌டும் பிர‌ச்ச‌னைக‌ள் கூட்ட‌ மக‌ளிர் காவ‌ல் நிலைய‌த்துக்கு எடுத்து செல்ல‌க்கூடிய‌ சூழ்நிலை ஏற்ப‌டும்.இத‌னால் ப‌ல்லாண்டு கால‌மாக‌ இருந்து வ‌ரும் ஜமாத் க‌ட்டுப்பாடு,இறையான்மை பாதிப்புக்குள்ளாகும் நிலை  ஏற்ப‌ட‌லாம்.

இத‌ற்கு முன்பாக‌ இந்த‌ இட‌த்தில் அர‌சு ஆர‌ம்ப‌ சுகாதார‌ நிலைய‌ம் ம‌ற்றும் மின் க‌ட்ட‌ண‌ அலுவ‌ல‌க‌ம் அமைக்க‌ அர‌சு த‌ர‌ப்பு கேட்ட‌தாக‌ அறிந்தோம் இது போன்ற‌ அலுவ‌ல‌க‌ங்க‌ள் அமைக்க‌ இந்த‌ இட‌த்தை கொடுக்க‌லாம் என்ப‌து எங்க‌ள‌து தாழ்மையான‌ க‌ருத்து.

என‌வே ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் ம‌க்க‌ள் ந‌ல‌னை க‌ருதி இப்ப‌குதியில் ம‌க‌ளிர் காவ‌ல் நிலைய‌ம் அமைக்க‌ இட‌ம் கொடுக்க‌ கூடாது என‌ ம‌க்க‌ள் ந‌ல‌ பாதுகாப்பு க‌ழ‌க‌ம் சார்பில் கேட்டு கொள்கிறோம் இவ்வாறு அவ‌ர் கூறியுள்ளார்.
 

கீழ‌க்க‌ரை அருகே வீட்டில் திருடிவிட்டு தூங்கிய திருடர்கள் கைது!

ஆளில்லாத வீட்டில் திருடிவிட்டு அசந்து தூங்கிய திருடர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.91 ஆயிரம் மற்றும் டூவீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கீழக்கரை அடுத்த திருப்புல்லாணி பெரியபட்டிணம் தங்கையாநகரைச் சேர்ந்தவர் பதவியா. இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார். நேற்று முன்தினம் இரவு இரண்டு பேர் பதவியா வீட்டிற்குள் புகுந்து திருடினர். அந்த நேரத்தில் வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததை அறிந்த திருடர்கள் சாவகாசமாக திருடிவிட்டு, விடிவதற்குள் எழுந்து சென்றுவிடலாம் என நினைத்து வீட்டிலேயே தூங்கினர்.

தூங்கியவர்கள் அசதியில் விடியும் வரை தூங்கிவிட்டனர்.
வெளியூர் சென்றிருந்த வீட்டுக்காரர்கள் காலையில் வீடு திரும்பியபோது யாரோ தங்கள் வீட்டில் தூங்குவதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். அப்போது விழித்த திருடர்கள் தப்பி ஓட முயற்சிக்கும்போது குடும்பத்தினர் ம‌ற்றும் அப்ப‌குதி இளைஞ‌ர்க‌ள் இருவரையும் மடக்கி பிடித்து திருப்புல்லாணி போலீசில் ஒப்படைத்தனர்.

இவர்களிடம் கீழக்கரை இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் திருப்புல்லாணி எஸ்.ஐ.கோட் டைசாமி விசாரணை நடத்தியதில், கீழக்கரை சிவகாமிபுரத்தைச் சேர்ந்த ராமு(26), தங்கச்சிமடத்தைச் சேர்ந்த தங்கம்(23) என தெரிந்தது. இருவரும் சேர்ந்து பல இடங்களில் திருடியதை ஒப்புக்கொண்டனர்.

கீழக்கரையில் சில தினங்களுக்கு முன்பு ஒரு கடையின் ஓட்டைபிரித்து உள்ளே இறங்கி ரூ.1 லட்சம் திருடியதும் இவர்கள்தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

ஏற்கனவே திருடிய ரூ.1 லட்சத்தில் 90 ஆயிரத்தையும், தற்போது பதவியா வீட்டில் திருடிய ரூ. ஆயிரம் சேர்த்து 91 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் திருடர்கள் பயன்படுத்திய டூவீலர் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


கீழக்கரை மற்றும் பெரியபட்டிணம் உள்பட பல இடங்க ளில் திருடிய வாலிபர்கள் ராமு, தங்கம். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரூ.91 ஆயிரம்.
 

Thursday, December 13, 2012

கீழ‌க்க‌ரை ந‌க‌ர் அதிமுக‌ நிர்வாகிக‌ள் நிய‌மன‌ம்!


ப‌ட‌ விள‌க்க‌ம்:‍ அதிமுக‌வின் கீழ‌க்க‌ரை ந‌க‌ர் இளைஞ‌ர‌ணி செயலாள‌ராக‌ நிய‌ம‌ன‌ம் செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌ இம்பாலா சுல்தான் செய்ய‌து இப்ராகீமுக்கு ந‌க‌ர் பொருளாள‌ர் நாராய‌ண‌ன் உள்ளிட்ட‌ நிர்வாகிக‌ள் வாழ்த்து தெரிவித்த‌ன‌ர்.

கீழ‌க்க‌ரை ந‌க‌ர் செய‌லாள‌ர் பூக்க‌டை ராஜேந்திர‌ன் விப‌த்தில் கால‌மான‌தை தொடர்ந்து புதிய‌ கீழ‌க்க‌ரை ந‌க‌ர் செய‌லாள‌ராக‌ வி.ராஜேந்திர‌ன் நிய‌ம‌ன‌ம் செய்ய‌ப்ப‌ட்டுள்ளார் மேலும் ஜெ பேரவை செய‌லாள‌ராக‌ வி.வி.ச‌ர‌வ‌ண‌ பாலாஜியும்,ந‌க‌ர் இளைஞ‌ரணி செயலாள‌ராக‌ இம்பாலா சுல்தான் செய்ய‌து இப்ராகிம் நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர்.

இவ‌ர்க‌ளுக்கு ந‌க‌ர் அதிமுக‌ நிர்வாகிக‌ள் உள்ப‌ட‌ ப‌ல‌ர் வாழ்த்து தெரிவித்த‌ன‌ர்

Tuesday, December 11, 2012

கிழ‌க்குதெரு ப‌குதியில் உடைந்த‌ க‌ழிவுநீர் கால்வாய்!நோய் ப‌ர‌வும் அபாய‌ம்!!


கீழ‌க்க‌ரை கிழ‌க்குத்தெரு தொழுகை ப‌ள்ளி அருகில் கழிவு நீர் கால்வாய் உடைந்து க‌ழிவுநீர் தேங்கி வ‌ழிந்தோடுகிற‌து.நீண்ட‌ கால‌மாக‌ நீடிக்கும் இப்பிர‌ச்ச‌னையால் நோய் ப‌ர‌வும் வாய்ப்பு உள்ள‌து எனவே உட‌ன‌டி நட‌வடிக்கை எடுக்க‌ வேண்டும் என‌ கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.

இது குறித்து நாச்சியா ந‌வாஸ் என்ப‌வ‌ர் கூறுகையில்,

 புதிய‌ பேருந்து நிலைய‌ம் அருகில் உள்ள‌ க‌ழிவுநீர் ப‌ம்பிங் ஸ்டேச‌னிலிருந்து ப‌ம்ப் செய்ய‌ப்ப‌டும் க‌ழிவு நீரூம் இங்குதான் வ‌ந்து சேருகிற‌து.மேலும் க‌ட‌ந்த‌ சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன் ஒருங்கினைந்த‌ ந‌க‌ர்புற‌ வ‌ள‌ர்ச்சி திட்ட‌த்தில் ஒதுக்க‌ப்ப‌ட்ட‌ நிதியிலிருந்து முக‌ம்ம‌து காசிம் அப்பா த‌ர்கா அருகில் ம‌க்க‌ளுக்கு ப‌ய‌ன்ப‌டாத‌ இட‌த்தில் க‌ழிவுநீர் கால்வாய் க‌ட்ட‌ முய‌ற்சித்த‌ போது பொதும‌க்க‌ளின் எதிர்ப்பால் நிறுத்தினார்க‌ள்.ஆனால் அவசிய‌ம் ச‌ரி செய்ய‌ வேண்டிய‌ கால்வாயை சீர் செய்யாம‌ல் உள்ளார்க‌ள்.

இத‌ன் அருகிலேயே உண‌வுவிடுதி உள்ள‌து.ம‌க்க‌ள் அதிக‌ம் ந‌டமாடும் ப‌குதி இதுவாகும்.இந்த‌ க‌ழிவு நீரால் தொற்று நோய் ப‌ர‌வும் வாய்ப்புக‌ள் அதிக‌ம் உள்ள‌து உட‌ன‌டி ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என்றார்.

அப்ப‌குதியை சேர்ந்த‌ ஹ‌சீனா என்ப‌வ‌ர் கூறுகையில், 
க‌ழிவு நீர் கால்வாய் உடைந்து நீண்ட‌ கால‌மாக‌ க‌ழிவு நீர் தேங்கி நிற்கிற‌து. அருகிலேயே ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காதரியா ம‌ற்றும் துணை த‌லைவ‌ர் ஹாஜா முகைதீன் ஆகியோரின் வீடுக‌ள் உள்ள‌ன‌.இவ்வழியாக‌த்தான் அவ‌ர்க‌ள் செல்கிறார்க‌ள்.மேலும் ப‌ல‌ முறை ந‌க‌ராட்சியில் புகார் தெரிவித்துள்ளோம் ஆனால் எவ்வித‌ ந‌ட‌வ‌டிக்கையும் இல்லை என்றார்.

இது குறித்து ந‌க‌ராட்சி த‌லைவ‌ரிட‌ம் கேட்ட‌ போது,

ந‌ட‌ந்து முடிந்த‌ க‌வுன்சில் கூட்ட‌த்தில் குறிப்பிட்டுள்ள‌ கால்வாயை உய‌ர்த்தி க‌ட்டி மூடி போடுவ‌த‌ற்கு தீர்மான‌‌ம் நிறைவேற்ற‌ப்ப‌ட்டுள்ள‌து.விரைவில் இப்பிர‌ச்ச‌னை தீர்க்க‌ப்ப‌டும் என்றார்.


 

கீழ‌க்க‌ரை ந‌கராட்சி ப‌ணியாள‌ர்க‌ளுக்கு பாதுகாப்பு உபக‌ர‌ண‌ங்க‌ள் !

கீழ‌க்க‌ரை  ந‌க‌ராட்சியில்  ப‌ணிபுரியும் துப்புர‌வு தொழிலாள‌ர்க‌ளுக்கு பாதுகாப்பு பொருள்க‌ளான‌ த‌லைக‌வ‌ச‌ம்,கையுறை,முகவுறை,வ‌ழ‌ங்கும் விழா ந‌க‌ராட்சி அலுவ‌ல‌க‌த்தில் த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காத‌ரியா த‌லைமையில் நடைபெற்ற‌து.

கீழ‌க்க‌ரை நக‌ராட்சியில் பொது சுகாதார‌ ப‌ணியில் ஈடுப‌ட்டுள்ள‌ துப்புர‌வு ப‌ணியாள‌ர்க‌ளுக்கு வ‌ருடாந்திர சீருடை பாதுகாப்பு பொருள்க‌ளுக்கும் உர‌க்கிட‌ங்கில் ப‌ணிபுரியும் த‌ற்காலிக‌ ப‌ணியாள‌ர்க‌ளுக்கு பாதுகாப்பு பொருள்க‌ள் வ‌ழ‌ங்கும் நிக‌ழ்ச்சியில் க‌மிஷ‌ன‌ர் முக‌ம்ம‌து முகைதீன்,சுகாதார‌ ஆய்வாள‌ர் திண்ணாயிர‌மூர்த்தி,துணை த‌லைவ‌ர் ஹாஜா முகைதீன், த‌லைமை எழுத்தாள‌ர் நாக‌நாத‌ன் க‌வுன்சில‌ர் சாகுல் ஹ‌மீது,அதிமுக‌ பேர‌வை செய‌லாள‌ர் ச‌ர‌வ‌ண‌ பாலாஜி,மாண‌வ‌ர‌ணி சுரேஷ்  உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌லந்து கொண்ட‌ன‌ர்.

Monday, December 10, 2012

கீழ‌க்க‌ரை ப‌ள்ளியில் ம‌னித‌ உரிமை நாள் விழா!

உல‌க‌ மனித உரிமைகள் நாள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 1948 டிசம்பர் 10ஆம் நாள் ஒன்றுக்கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இன்று 10.12.12 கீழ‌க்க‌ரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலை ப‌ள்ளி ம‌ற்றும் இஸ்லாமியா மேல்நிலைப்ப‌ள்ளியில் ந‌டைபெற்ற‌ ம‌னித‌ உரிமைக‌ள் ப‌ற்றிய‌ பேச்சுப்போட்டி ம‌ற்றும் க‌ட்டுரை போட்டிக‌ள் ந‌டைபெற்ற‌து.

வெற்றி பெற்ற‌ மாண‌வ‌ மாணவிக‌ளுக்கு ப‌ள்ளி தாளாள‌ர் எம்.எம்.கே முகைதீன் இப்ராகிம்  ப‌ரிசுக‌ள் வ‌ழ‌ங்கினார். மெட்ரிக் ப‌ள்ளி முத‌ல்வ‌ர் மேப‌ல் ஜ‌ஸ்ட‌ஸ் ,த‌லைமை ஆசிரிய‌ர் ஜோச‌ப் சார்த்தோ,இஸ்லாமியா உய‌ர்நிலை ப‌ள்ளி த‌லைமை ஆசிரிய‌ர் இர‌வி ஆகியோர் முன்னிலை வ‌கித்த‌ன‌ர்.
 

Sunday, December 9, 2012

கீழ‌க்க‌ரையில் சாலையில் மாடுக‌ள்!ரூ2000வ‌ரை அப‌ராத‌ம்!2013 ஜன‌ முத‌ல் அம‌ல்!

 
கீழ‌க்க‌ரை சாலைக‌ள்,ம‌ற்றும் பேருந்து நிலைய‌த்தில் ஏராள‌மான‌ மாடுக‌ள் திரிவ‌தால் போக்குவ‌ர‌த்திற்கும்,பொது ம‌க்க‌ளுக்கும் பெரும் இடையூராக‌ இருப்பாதால் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ ந‌க‌ராட்சிக்கு கோரிக்கை விடுக்க‌ப்ப‌ட்ட‌து.இத‌னைய‌டுத்து மாடுக‌ளை வீதிக‌ளில் சுற்றி திரிய‌ விட்டால் மாட்டின் உரிமையாள‌ருக்கு அபராத‌ம் விதிக்க‌ப்ப‌டும் என‌ ந‌க‌ராட்சி கூட்ட‌த்தில் தீர்மான‌ம் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌து.

இது தொட‌ர்பாக‌ க‌மிஷ‌ன‌ர் முக‌ம்ம‌து முகைதீன் கூறிய‌தாவ‌து, 


ந‌க‌ரில் சுற்றிதிரியும் மாடுக‌ளால் பொது ம‌க்க‌ளுக்கு மிக‌வும் இடையூறு ஏற்ப‌டுகிற‌து.மேலும் வாக‌ன‌ போக்குவ‌ர‌த்திற்கும் இடையூறு ஏற்ப‌டுகிற‌து.
என‌வே ந‌க‌ராட்சி கூட்ட‌த்தில் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌ தீர்மான‌த்தின் பேரில் வ‌ரும் ஜ‌ன‌வ‌ரி 2013 முத‌ல் மாடுக‌ளை வீதிக‌ளில் சுற்றி திரிய‌விட்டால் மாடுக‌ளை பிடித்து ப‌வுண்டில் க‌ட்டிவிடுவார்க‌ள் முத‌ல் நாள் ரூ 1000ம் அப‌ராத‌மும்,2ம் நாள் ரூ 1500ம்,மூன்றாவ‌து நாள் ரூ2000ம் வ‌ரை மாட்டின் உரிமையாள‌ருக்கு அப‌ராத‌ம் விதிக்க‌ப்படும் தொட‌ர்ந்து யாரும் மாடுக‌ளை மீட்க‌ வ‌ர‌வில்லையென்றால் பிராணிக‌ள் ந‌ல‌ச்ச‌ங்க‌ம் அல்லது த‌மிழ‌க‌ அரசால் அங்கீக‌ரிக்கப்ப‌ட்ட‌ நிறுவ‌ன‌ங்க‌ளிட‌ம் ஒப்ப‌டைக்க‌ப்ப‌டும் என்றார்.