இது தொடர்பாக கமிஷனர் முகம்மது முகைதீன் கூறியதாவது,
நகரில் சுற்றிதிரியும் மாடுகளால் பொது மக்களுக்கு மிகவும் இடையூறு ஏற்படுகிறது.மேலும் வாகன போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுகிறது.
எனவே நகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பேரில் வரும் ஜனவரி 2013 முதல் மாடுகளை வீதிகளில் சுற்றி திரியவிட்டால் மாடுகளை பிடித்து பவுண்டில் கட்டிவிடுவார்கள் முதல் நாள் ரூ 1000ம் அபராதமும்,2ம் நாள் ரூ 1500ம்,மூன்றாவது நாள் ரூ2000ம் வரை மாட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் தொடர்ந்து யாரும் மாடுகளை மீட்க வரவில்லையென்றால் பிராணிகள் நலச்சங்கம் அல்லது தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.