கீழக்கரை கிழக்குத்தெரு தொழுகை பள்ளி அருகில் கழிவு நீர் கால்வாய் உடைந்து கழிவுநீர் தேங்கி வழிந்தோடுகிறது.நீண்ட காலமாக நீடிக்கும் இப்பிரச்சனையால் நோய் பரவும் வாய்ப்பு உள்ளது எனவே உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து நாச்சியா நவாஸ் என்பவர் கூறுகையில்,
புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கழிவுநீர் பம்பிங் ஸ்டேசனிலிருந்து பம்ப் செய்யப்படும் கழிவு நீரூம் இங்குதான் வந்து சேருகிறது.மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒருங்கினைந்த நகர்புற வளர்ச்சி திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து முகம்மது காசிம் அப்பா தர்கா அருகில் மக்களுக்கு பயன்படாத இடத்தில் கழிவுநீர் கால்வாய் கட்ட முயற்சித்த போது பொதுமக்களின் எதிர்ப்பால் நிறுத்தினார்கள்.ஆனால் அவசியம் சரி செய்ய வேண்டிய கால்வாயை சீர் செய்யாமல் உள்ளார்கள்.
இதன் அருகிலேயே உணவுவிடுதி உள்ளது.மக்கள் அதிகம் நடமாடும் பகுதி இதுவாகும்.இந்த கழிவு நீரால் தொற்று நோய் பரவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அப்பகுதியை சேர்ந்த ஹசீனா என்பவர் கூறுகையில்,
கழிவு நீர் கால்வாய் உடைந்து நீண்ட காலமாக கழிவு நீர் தேங்கி நிற்கிறது. அருகிலேயே நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா மற்றும் துணை தலைவர் ஹாஜா முகைதீன் ஆகியோரின் வீடுகள் உள்ளன.இவ்வழியாகத்தான் அவர்கள் செல்கிறார்கள்.மேலும் பல முறை நகராட்சியில் புகார் தெரிவித்துள்ளோம் ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றார்.
இது குறித்து நகராட்சி தலைவரிடம் கேட்ட போது,
நடந்து முடிந்த கவுன்சில் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ள கால்வாயை உயர்த்தி கட்டி மூடி போடுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.விரைவில் இப்பிரச்சனை தீர்க்கப்படும் என்றார்.
சாமி வரம் கொடுத்து விட்டது.. பூசாரிகள் செயல் படுவது எப்போது?
ReplyDelete