Monday, December 17, 2012

புதிய‌ ஹைமாஸ் த‌ர‌மில்லை!க‌வுன்சில‌ர் புகார்!விள‌ம்பர‌த்திற்காக‌ குற்ற‌ச்சாட்டு!சேர்ம‌ன் ப‌தில்

18வ‌து வார்டு க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிம் வெளியிட்டுள்ள‌ செய்தியில்,
கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி சார்பாக‌ 2011 2012 ந‌க‌ர்புற‌ வ‌ள‌ர்ச்சி திட்ட‌த்தின் கீழ் 36 ல‌ட்ச‌ம் ம‌திப்பில் தெரு விள‌க்குக‌ள் ஒப்ப‌ந்த‌ரார‌ர்க‌ளால் க‌ட‌ந்த‌ முறை த‌ர‌ம் இல்லாம‌ல் அனுப்ப‌ப்ப‌ட்டு க‌டும் எதிர்ப்புக்கு பின் வாப‌ஸ் பெற‌ப்ப‌ட்ட‌து.

ஆனால் மீண்டும் பிர‌ப‌ல‌ நிறுவ‌ன‌த்தின் பெய‌ரில் போலி லேபிள்க‌ளை ஒட்டி  தெரு விள‌க்குக‌ள் அவ‌ச‌ர‌ க‌தியில் மின்க‌ம்ப‌ங்க‌ளில் பொருத்த‌ப்ப‌ட்டு வ‌ருகிறது. குறிப்பாக‌ ம‌ன்ற‌ ஒப்புத‌லுக்கு விரோத‌மாக‌ 4(நான்கு) இட‌ங்க‌ளில் ஹைமாஸ் விள‌க்குக‌ள் அமைக்க‌ப்ப‌ட்டு இருக்கிற‌து.
(ஒப்ப‌ந்த‌ப்ப‌டி த‌ர‌மான‌ ஒரிஜின‌ல் விள‌க்குக‌ளை பொருத்த‌ நீதிம‌ன்ற‌த்தை நாடி உள்ளோம்)

இது ஒருபுற‌மிருக்க‌ ஏற‌கென‌வே அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ கீழ‌க்க‌ரை ந‌க‌ர் நுழைவு வாயிலான‌ முக்கு ரோட்டில் இருக்கும் உய‌ர் மின் விள‌க்குக‌ள்(ஹைமாஸ்) விள‌க்கு எரிவ‌தே இல்லை.அதுப்போல் ம‌ணீஸ் பேக்க‌ரி அருகே ஹைமாஸ் விள‌க்குக‌ளில் ல் ஒன்று ம‌ட்டும்தான் எரிகிற‌து.க‌ட‌ந்த‌ மூன்று மாத‌ங்க‌ளாக‌ இதே நிலைதான். 
 என‌வெ த‌ர‌மில்லா புதிய‌ ஹைமாஸ் விள‌க்குக‌ளை அமைப்ப‌தில் காட்டும் ஆர்வ‌த்தை ஏற்கென‌வே பழுத‌டைந்து  எரியாம‌ல் இருக்கும் மின் விள‌க்குக‌ளை ச‌ரி செய்வ‌தில் அக்க‌றை செலுத்த‌ வேண்டும்.




இவ்வாறு அவ‌ர் கூறியுள்ளார்


இது குறித்து ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவியத்துல் காத‌ரியாவிடம் கேட்ட‌ போது ,

க‌வுன்சில‌ர் குறிப்பிட்டுள்ள‌ புதிய‌ ஹைமாஸ் விள‌க்குக‌ள் ச‌ப்ளை செய்த‌ நிறுவ‌ன‌ம் , க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராஹிம் உள்ளிட்ட‌ க‌வுன்சில‌ர்க‌ள் அனைவ‌ராலும் ந‌க‌ராட்சி கூட்ட‌த்தில் ஏற்று கொண்ட‌ நிறுவ‌ன‌ம் தான்.

மேலும் இவ‌ர்க‌ள்தான் இந்த‌ நிறுவ‌ன‌த்திற்கு தெரு விள‌க்குடெண்ட‌ர் வ‌ழ‌ங்க‌ வேண்டும் என‌ ந‌க‌ராட்சி கூட்ட‌த்தில் வ‌லிறுத்தினார்க‌ள்.அத‌ன் ப‌டி ந‌கராட்சி கூட்ட‌த்தில் தீர்மான‌ம் நிறைவேற்ற‌ப்ப‌ட்டு முறைப்ப‌டி இந்நிறுவ‌ன‌த்திற்கு தெரு விள‌க்கு டெண்ட‌ர் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.த‌ற்போது இவ‌ரே குறை கூறுகிறார்.

ஏற்‌கென‌வே த‌ர‌ப்ப‌ட்ட‌ விளக்குக‌ள் த‌ர‌மில்லாத‌வை என‌ திருப்பிய‌னுப்ப‌ப‌ட்டு த‌ற்போது அர‌சு வ‌ழிகாட்டுத‌ல்ப‌டி கூற‌ப்ப‌ட்டுள்ள‌ விதிமுறைக‌ள் முறையாக‌ க‌டைபிடிக்க‌ப்ப‌ட்டு த‌ரமான‌ விள‌க்குக‌ள்தான் பொருத்த‌ப்ப‌டுகிற‌து.
இவ‌ர் கூறியுள்ள‌ப‌டி கோட்டுக்கு செல்ல‌ட்டும் ச‌ட்ட‌ப்ப‌டி ச‌ந்திப்போம்.

மேலும் இவ‌ர் விள‌ம்ப‌ர‌த்திற்காக‌ குறை கூறுவ‌து வாடிக்கையாகி விட்ட‌து.எந்த‌ நல‌ திட்ட‌ங்க‌ள் செய‌ல்ப‌டுத்தினாலும் முட்டுக‌ட்டை போடுவ‌து இவ‌ர‌து ந‌ட‌வ‌டிக்கைக‌ளில் ஒன்றாகி விட்ட‌து.இவ‌ரால் கீழ‌க்க‌ரை ந‌க‌ரின் முன்னேற்ற‌த்தை தாங்கி கொள்ள‌ முடிய‌வில்லை.என்ன‌ கார‌ண‌மென்று தெரிய‌வில்லை.என்றுமில்லாத‌ அள‌விற்கு ந‌ம‌து முத‌ல்வ‌ர் ஜெய‌ல‌லிதா அவ‌ர்க‌ளின் அர‌சாங்க‌ம் ப‌ல்வேறு ந‌ல‌ திட்ட‌ங்க‌ளை கீழ‌க்க‌ரைக்கு த‌ந்து செய‌ல்ப‌டுத்தி கொண்டிருக்கிற‌து.

அவ‌ர் கூறியுள்ள‌ப‌டி ப‌ழுதடைந்துள்ள‌ மின் விள‌க்குக‌ளை சீர் செய்ய‌ ஏற்கென‌வே ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.விரைவில் ச‌ரி செய்ய‌ப்ப‌டும்.
ம‌க்க‌ள் அனைத்தையும் க‌வ‌னித்து கொண்டிருக்கிறார்க‌ள் என‌பதை க‌வுன்சில‌ர் முகைதீன் இப்ராகிம் நினைவில் வைத்து த‌ன‌து 18வ‌து வார்டுக்கான‌ ந‌ல‌ப்ப‌ணிக‌ளில் க‌வ‌ன‌ம் செலுத்த‌ வேண்டும் இவ்வாறு அவ‌ர் கூறினார்.

14 comments:

  1. இவர் குறை கூறுவதில் என்ன தவறு உள்ளது ஊரின் நிலை மட்டும் நகராட்சியின் நிலை அப்படி தானே உள்ளது.ஊரில் உள்ளவரிடம் நமது சேர்மன் விசாரித்தால் என்ன நிலை என்று அவருக்கே புரியும் யாரும் சும்மா குறை கூற மாட்டார்கள் தவறு இருபதினால் தானே கூறுகின்றனர்..

    ReplyDelete
  2. இவர் குறை கூறுவதில் என்ன தவறு உள்ளது ஊரின் நிலை மட்டும் நகராட்சியின் நிலை அப்படி தானே உள்ளது.ஊரில் உள்ளவரிடம் நமது சேர்மன் விசாரித்தால் என்ன நிலை என்று அவருக்கே புரியும் யாரும் சும்மா குறை கூற மாட்டார்கள் தவறு இருபதினால் தானே கூறுகின்றனர்..

    ReplyDelete
  3. மங்காத்தாவின் தங்கச்சி மகன்December 17, 2012 at 1:32 PM

    கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பழைய மீன் கடைக்கு (ஒ.ஜே.எம்.தெரு)அருகில் உள்ள ஹைமாஸ் கம்பத்தில் ஒரு விளக்கு கூட எரியவில்லை.இது சமபந்தமாக பகுதி மக்கள் பிரதிநிதி எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. காரணம் அவர் வாய்ச் சொல் வீரர்.ஐந்து முறை களம் கண்டவர்.

    ReplyDelete
    Replies
    1. பிரதிநிதி மட்டுமா நம்ம சேர்மனும் அதே ஏரியாவைச் சேர்ந்தவங்க தானே இரவு நேரங்களில் அந்த இடத்தைக் கடக்கவில்லையா? இல்லே அவங்க கடக்கும் போது கரண்ட் இல்லையா? புகழ்ச்சியை மட்டுமே விரும்பும் அம்மையார்கள்.

      பிறரது கருத்துக்களை குற்றச்சாட்டாகக் காணாமல் FEEDBACK-ஆ எடுத்துக்கிட்டு நிறை செய்தால் மக்கள் நலம் பெறுவார்கள்.
      அமானிதத்தை உண்ண நினைக்காதே! மறுமைக்கு பயந்து நடப்போமாக......

      Delete
  4. மங்காத்தாவின் தங்கச்சி மகன்December 17, 2012 at 1:49 PM

    டெண்டர் கொடுத்ததில் தவறில்லை.. டெண்டர் படி பொருட்கள் சப்ளை செய்யப்பட்டதா என்பதை கண்கானிப்பது நிர்வாகத்தின் கடமை இல்லையா? தலைவர் உட்பட அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் இதில் கூட்டு பொறுப்பு இல்லையா? குறை சொல்லுவதை ஏன் குறையாக காணுகிறீர்கள்? எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு சீரிய நிர்வாகத்தை தாருங்களேன்..இதில் உங்களுக்கு என்ன சங்கடம்? குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும் எனபது முதியோர் வாககு. சற்றே நிதானியுங்கள். உண்மை வெட்ட வெளிச்சமாகும்

    ReplyDelete
  5. Looks like there is something really fishy. They are busy focusing at fixing of new lights but failed to look at the already fused ones..My question is "what is the use of fixing new lights while there are so many lights are out of order"? Does it really server the purpose of lighting our town? or just trying to complete the job.. No clay man will file a case unless there is something really fishy. If councilor is looking for some propaganda then why the lights are fused?? Our chairman should address this issue immediately rather than accusing counselor.

    ReplyDelete
  6. Looks like there is something really fishy. They are busy focusing at fixing of new lights but failed to look at the already fused ones..My question is "what is the use of fixing new lights while there are so many lights are out of order"? Does it really server the purpose of lighting our town? or just trying to complete the job.. No clay man will file a case unless there is something really fishy. If councilor is looking for some propaganda then why the lights are fused?? Our chairman should address this issue immediately rather than accusing counselor.

    ReplyDelete
  7. Looks like there is something really fishy. They are busy focusing at fixing of new lights but failed to look at the already fused ones..My question is "what is the use of fixing new lights while there are so many lights are out of order"? Does it really server the purpose of lighting our town? or just trying to complete the job.. No clay man will file a case unless there is something really fishy. If councilor is looking for some propaganda then why the lights are fused?? Our chairman should address this issue immediately rather than accusing counselor.

    ReplyDelete
  8. இவர் கூறும் குற்றசாட்டு அனைத்தும் உண்மையே கீழக்கரை முக்குரோட்டில் கடந்த எட்டு மாதங்களாக விளக்கு எரியாமல் இருலடைந்தே கிடக்கிறது. தரம் சரியில்லை என்று திருப்பி அனுப்பப்பட்ட விளக்குகளை மீண்டும் வரவழைத்து நகருக்குள் பொருத்தி இருக்கிறார்கள். நகராட்சி தலைவர் சொல்வது போல் கீழக்கரையில் இது வரை எந்த ஒரு அரசு திட்டமும் முறையாக செயல்படுத்தபடவே இல்லை திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து நிதிகளும் வீணடிக்கப்படுகிரது என்பதுதான் உண்மை இனியாவது சப்பைக்கட்டு கட்டாமல் கீழக்கரை நலனுக்கு செயல்படுங்கள்.

    ReplyDelete
  9. இவர் கூறும் குற்றசாட்டு அனைத்தும் உண்மையே கீழக்கரை முக்குரோட்டில் கடந்த எட்டு மாதங்களாக விளக்கு எரியாமல் இருலடைந்தே கிடக்கிறது. தரம் சரியில்லை என்று திருப்பி அனுப்பப்பட்ட விளக்குகளை மீண்டும் வரவழைத்து நகருக்குள் பொருத்தி இருக்கிறார்கள். நகராட்சி தலைவர் சொல்வது போல் கீழக்கரையில் இது வரை எந்த ஒரு அரசு திட்டமும் முறையாக செயல்படுத்தபடவே இல்லை திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து நிதிகளும் வீணடிக்கப்படுகிரது என்பதுதான் உண்மை இனியாவது சப்பைக்கட்டு கட்டாமல் கீழக்கரை நலனுக்கு செயல்படுங்கள்.

    ReplyDelete
  10. இவர் கூறும் குற்றசாட்டு அனைத்தும் உண்மையே கீழக்கரை முக்குரோட்டில் கடந்த எட்டு மாதங்களாக விளக்கு எரியாமல் இருலடைந்தே கிடக்கிறது. தரம் சரியில்லை என்று திருப்பி அனுப்பப்பட்ட விளக்குகளை மீண்டும் வரவழைத்து நகருக்குள் பொருத்தி இருக்கிறார்கள். நகராட்சி தலைவர் சொல்வது போல் கீழக்கரையில் இது வரை எந்த ஒரு அரசு திட்டமும் முறையாக செயல்படுத்தபடவே இல்லை திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து நிதிகளும் வீணடிக்கப்படுகிரது என்பதுதான் உண்மை இனியாவது சப்பைக்கட்டு கட்டாமல் கீழக்கரை நலனுக்கு செயல்படுங்கள்.

    ReplyDelete
  11. இவர் கூறும் குற்றசாட்டு அனைத்தும் உண்மையே கீழக்கரை முக்குரோட்டில் கடந்த எட்டு மாதங்களாக விளக்கு எரியாமல் இருலடைந்தே கிடக்கிறது. தரம் சரியில்லை என்று திருப்பி அனுப்பப்பட்ட விளக்குகளை மீண்டும் வரவழைத்து நகருக்குள் பொருத்தி இருக்கிறார்கள். நகராட்சி தலைவர் சொல்வது போல் கீழக்கரையில் இது வரை எந்த ஒரு அரசு திட்டமும் முறையாக செயல்படுத்தபடவே இல்லை திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து நிதிகளும் வீணடிக்கப்படுகிரது என்பதுதான் உண்மை இனியாவது சப்பைக்கட்டு கட்டாமல் கீழக்கரை நலனுக்கு செயல்படுங்கள்.

    ReplyDelete
  12. கீழ‌க்க‌ரையில் ஏற்கென‌வே 3 இடிங்களில் உய‌ர் மின் விள‌க்குக‌ள்(ஹைமாஸ்) விள‌க்கு எரிவ‌தே இல்லை.

    இதே நிலை தெடர்ந்து நீடீத்து வருகிறது.

    இது போன்ற உண்மை நிலையை அறிய முடிகிறது.


    நமது கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சிக்கு இது வரை மத்திய ஆரசு நிதி (நகர் புற வளரச்சீ நிதி 2.5 கோடி மற்றும் பொது நிதி 1 கோடி) வழ‌ங்கி இருக்கிறது.
    நமது தமிழக ஆரசு நிதி 50 லட்சம் வழிங்கீ உள்ளது .

    ???......

    ReplyDelete
  13. கீழ‌க்க‌ரையில் ஏற்கென‌வே 3 இடிங்களில் உய‌ர் மின் விள‌க்குக‌ள்(ஹைமாஸ்) விள‌க்கு எரிவ‌தே இல்லை.

    இதே நிலை தெடர்ந்து நீடீத்து வருகிறது.

    இது போன்ற உண்மை நிலையை அறிய முடிகிறது.


    நமது கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சிக்கு இது வரை மத்திய ஆரசு நிதி (நகர் புற வளரச்சீ நிதி 2.5 கோடி மற்றும் பொது நிதி 1 கோடி) வழ‌ங்கி இருக்கிறது.
    நமது தமிழக ஆரசு நிதி 50 லட்சம் வழிங்கீ உள்ளது .

    ???......

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.