தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் பல இடங்களில், ரயில்வே இருப்புப்பாதைகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது. சாலை மேம்பாலங்கள் மற்றும் கீழ்பாலங்கள் இல்லாத இடங்களில், வாகனங்கள் ரயில்வே கேட்களில் அதிக நேரம் காத்திருந்து பயணங்களை தொடர வேண்டியுள்ளதால், பயண நேரம் அதிகமாதல், காலவிரயம் ஏற்படுதல், எரிபொருள் விரயம் மற்றும் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இருப்புப்பாதை குறுக்கிடும் சாலைகளில் 322.37 கோடி ரூபாய் செலவில், புதிய ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் கீழ்பாலங்கள் பணிகள் 8 மாவட்டங்களில் மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளார்
இத்திட்டத்தில் ஒன்றாக ராமநாதபுரம்-உச்சுப்புளி ரயில் நிலையங்களுக்கிடையே ராமநாதபுரம்-கீழக்கரை ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
நீண்ட காலமாக இப்பகுதி மக்கள் ராமநாதபுரம் கீழக்கரை ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.மேம்பாலத்திற்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.எனவே நீண்ட நாள் பிரச்சனை முடிவுக்கு வருகிறது.
இது குறித்து நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா கூறியதாவது,
இராமநாதபுரம் – கீழக்கரை சாலையில், இராமநாதபுரம் நுழைவாயிலில் இருக்கும் ரயில்வே க்ராஸிங் பகுதியில் வாகனங்கள் ரயில்வே கேட்களில் அதிக நேரம் காத்திருந்து பயணங்களை தொடர வேண்டியுள்ளது.
கீழக்கரை பகுதியில் இருந்து இராமனாதபுரத்துக்கு சென்றடைய முடியாமலும், அவசர காரியங்களுக்கு தக்க நேரத்தில் செல்ல முடியாமலும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டும் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். மேலும் ஈ.சி.ஆர் சாலையின் வழியே திருச்செந்தூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி செல்லும் பயனிகளும் நெடு நேரம் ரயில்வே கேட்டில் காத்திருக்கும் சூழ் நிலையும் ஏற்பட்டு வந்தது.
எனவே இப்பிரச்சனையை தீர்க்க இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என தமிழக முதல்வர் அவர்களிடம் கோரிக்கை வைத்திருந்தோம் தற்போது அந்த கோரிக்கையை நிறைவேற்றி உத்தரவு பிறபித்த முதல்வர் அவர்களுக்கு இப்பகுதி மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

வாழ்த்துகள்
ReplyDeleteஇந்த மேம் பாலத்தை கட்டி முடிக்க எந்தனை ஆண்டுகள் ஆகுமோ? இறைவனுக்கே வெளிச்சம். அது வரை கீழக்கரை - ராமாநாதபுரம் நெடுஞ்சாலையில் ஆர்.எஸ்.மடையிலிருந்து பட்டணம் காத்தான் வழியாக ராமநாதபுரம் - மண்டபம் நெடுஞ்சாலையை அடையும் பை பாஸ் (குறுக்கு) சாலை பணி முடிந்து நீண்ட நெடுங்காலமாகி விட்டது. அதை பயன் பாட்டிற்கு கொண்டு வந்தால் நகராட்சி தலைவி கூறிய சாலை சங்கடங்களெல்லாம் தீருமே. அதற்கு தலைவி தன் தலைமையிடத்தில் முயற்சிப்பாரா
ReplyDelete