Tuesday, September 11, 2012
கீழக்கரையில் போக்குவரத்து இடையூறு!சரக்கு லாரிகளுக்கு நேரம் நிர்ணயம் செய்ய கோரிக்கை!
பட விளக்கம் :கீழக்கரையில் நகராட்சி அலுவலகம் எதிரே நிறுத்தப்பட்டுள்ள சரக்கு லாரி!
கீழக்கரையில் பிரதான் சாலையான வள்ளல் சீதக்காதி சாலையில் இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்துவதாலும்,காலை நேரங்களில் குறிப்பாக பள்ளி கூடத்திற்கு வாகனங்களில் குழந்தைகளை அழைத்து செல்லும் நேரங்களில் ஊருக்குள் சரக்கு லாரிகளை சாலையோரங்களில் நிறுத்தி சரக்குகளை இறக்குவதாலும் கடும் போக்குவரத்து ஏற்பட்டு பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகிறார்கள்.
எனவே காவல்துறை அதிகாரிகள் தலையிட்டு சரக்கு லாரிகளை ஊருக்குள் அனுமதிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து மக்கள் நடமாட்டம் குறைவான சமயங்களில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சரக்கு லாரிகளை நிறுத்தி சரக்கு இறக்க அனுமதிக்க வேண்டும் சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நகர் காங்கிரஸ் தலைவர் ஹமீது கான் கூறுகையில், கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் நடுத்தெரு ஜும்மா பள்ளி அருகே இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூராக உள்ளது.அதே போல் நகராட்சி அலுவலகம் எதிரிலேயே சரக்கு லாரிகளை நிறுத்தி சரக்குகளை இறக்குகின்றனர்.இதனால் பஸ் உள்பட வாகனங்கள் வருவதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.எனவே காவல்துறையினர் இது குறித்து நடவடிக்க மேற்கொள்ள வேண்டும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
பல முறை குரல் கொடுத்து விட்டோம். வள்ளல் சீதக்காதி சாலை, அஞ்சலக வீதி, ஜும்மா பள்ளி முன்புறம்,செக்கடி மேற்புற பிரதான வாயில் போன்ற முக்கிய இடங்களில், மற்றும் பிரச்சனை உள்ள இடங்களிலும் போக்குவரத்து இடையூர்களை களைய வேண்டுமானால் போக்குவரத்து காவலர்களை நகரில் நியமித்தால் ஒழிய இந்த பிரச்சனை தீர வழியே இல்லை.. மக்கள் பிரதிநிதிகளும், பொது சமூக நல அமைப்புகளும் ஒருங்கிணைந்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட உயர் காவல்துறை அதிகாரி,தொகுதி சட்ட மன்ற மக்கள் பிரதிநிதி ஆகியோரை சந்தித்து பரிகாரம் காண முற்பட வேண்டும்.
ReplyDeleteநாளை முதல் காலாண்டு தேர்வுகள் தொடங்க இருக்கிறது.. குறித்த நேரத்தில் தேர்வுக்கு செல்வதற்கு உள்ள சிரமத்தால் மாணவச் செல்வங்கள் மன தளர்ச்சி அடைந்து தேர்வை சந்திப்பதில் தளர்ச்சி அடைகிறார்கள்..பள்ளி வாகனங்களில் வயது வந்த மாணவியர்களும் பயனிப்பதால் இக்கட்டான நேரத்தில் இறஙகி சம்பந்தப்பட்ட பள்ளி வளாகத்திற்கு குறித்த நேரத்த்ற்குள் நடந்து செல்ல முடியாத தர்ம சங்கடமான நிலையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்..
ஆகவே உடனடியாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காணுவதில் நம் அனைவருக்கும் கூட்டு போறுப்பு உண்டு..
இந்த பதிவின் புகைப்பட காட்சியை பாருங்கள். போக்குவரத்திற்கு இருக்கின்ற இடையூர்கள் காணாது என்று நகராட்சி அலுவலகத்திற்கு முன்பே கட்டட குப்பைகளை கொட்டி உள்ளார்கள்.. இதைக்கூட அகற்ற முனையாத நகராட்சி நிர்வாகம் நகர் நலனில் எவ்வளவு தூரம் அக்கரை காட்டுவார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
ReplyDelete