Friday, December 21, 2012

ஏர்வாடியில் ம‌ன‌ ந‌ல‌ ம‌ருத்துவ‌ம‌னை!முத‌ல்வ‌ர் ஜெய‌ல‌லிதா அறிவிப்பு!

ப‌ட‌ விள‌க்க‌ம் (ப‌ழைய‌(பைல்)ப‌ட‌ம் :இப்ப‌குதிக‌ளில் சில‌ர் ம‌ன‌ நோயாளிக‌ளை வாக‌ன‌ங்க‌ளில் இருந்து இற‌க்கி விட்டு சென்று விடுகின்ற‌ன‌ர். ராம‌நாத‌புர‌ம்- கீழக்க‌ரை சாலையில் கிட‌க்கும் பெண் ம‌ன‌ நோயாளி
த‌மிழ‌க‌த்தின் ப‌ல்வேறு மாவ‌ட்ட‌ங்க‌ளுக்கு ந‌ல திட்ட‌ங்க‌ளை முத‌ல்வ‌ர் ஜெய‌ல‌லிதா வெளியிட்டார்.அதில் ஏர்வாடியில் ம‌ன‌ ந‌ல‌ ம‌ருத்துவ‌மனை அமைக்கப்ப‌டும் என‌ அறிவித்துள்ளார்.

ஏர்வாடி தர்ஹாவில் கடந்த 2002 ஆக.,6ல் மன நலகாப்பகத்தில் தீவிபத்து நடந்தது. இதில் 28 மனநோயாளிகள் தீயில் கருகி உயிரழந்தனர். மனநோயாளிகள் சங்கிலியால் கட்டப்ப‌ட்டு இருந்ததால் தப்பிக்க முடியாமல் உயிரழப்பு அதிகமாக இருந்தது பின்னர் வ‌ழ‌க்க‌ம் போல் அசம்பாவிதம் ந‌டைபெற்ற‌ பிற‌கு தான் அர‌சாங்க‌ அனும‌தியில்லாம‌ல் ஏர்வாடி தர்ஹாவில் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ அனைத்து ம‌ன‌ந‌ல காப்ப‌க‌ங்க‌ளும் அர‌சின் ந‌ட‌வ‌டிக்கையால் மூட‌ப்ப‌ட்ட‌து.

இச்சம்பவத்திற்கு பிறகும் ம‌ன‌ நோயால் பாதிப்ப‌டைந்த‌வ‌ர்க‌ளை ஏர்வாடி த‌ர்ஹாவிற்கு அழைத்து வ‌ந்தால் குண‌மாகும் என்று ப‌ல‌ர் அவ‌ர்களின் ந‌ம்பிக்கையின் அடிப்ப‌டையில் இப்ப‌குதிக்கு அழைத்து வருகிறார்க‌ள்.

மேலும் வெளியூரை சேர்ந்த‌ க‌ல் நெஞ்ச‌க்காரார்க‌ள் சில‌ர் மன நோயாளிகளை வாகனங்களில் அழைத்து வந்து ஏர்வாடி தர்ஹா - கீழக்கரை சாலைகளில் இறக்கி விட்டு செல்லும் அவலம் நீண்ட காலமாக இப்பகுதியில் நிகழ்ந்து வருகிறது. இவ்வாறு இறக்கி விடப்பட்ட மனநோயாளிகள் அருகிலுள்ள ஏர்வாடி தர்காவிற்கும்,எஞ்சியவர்கள் கீழக்கரை மற்றும் அருகிலுள்ள ஊர்களில் பரிதாபமாக சுற்றி திரிகிறார்கள்.

 இது போன்று சுற்றி திரிபவ‌ர்க‌ளை அர‌சு துறையின‌ர் வேனில் ஏற்றி சென்னை ம‌ன‌ ந‌ல‌ ம‌ருத்துவ‌ம‌னைக்கு அனுப்பி வ‌ந்த‌ன‌ர்.இந்த‌ ந‌டைமுறை அவ்வ‌ப்போது ந‌டைபெற்று வ‌ந்த‌து.

இந்நிலையில் ஏர்வாடி ப‌குதியில் ம‌ன‌ ந‌ல‌ ம‌ருத்துவ‌மனை அமைக்க‌ வேண்டும் என‌ இப்ப‌குதி ம‌க்க‌ள் கோரிக்கை எழுப்பி வ‌ந்த‌ன‌ர் இக்கோரிக்கையை வ‌லியுறுத்தி செய்திக‌ளும் வெளியாகி வ‌ந்த‌ன‌.

நீண்ட‌ கால‌ கோரிக்கையின் ப‌ல‌னாக‌ த‌ற்போது த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர் ஜெய‌ல‌லிதா ஏர்வாடியில் ம‌ன‌ ந‌ல‌ ம‌ருத்துவ‌ம‌னை அமைக்க‌ப்ப‌டும் என‌ அறிவித்துள்ளார்.இந்த‌ அறிவிப்பை விரைந்து செய‌ல்ப‌டுத்தி ம‌ன‌ ந‌ல‌ ம‌ருத்துவ‌ம‌னை விரைவாக‌ அமைய‌ வேண்டும் என‌ப‌து கோரிக்கை விடுத்த‌ ம‌க்க‌ளின் எதிர்பார்ப்பாக‌ உள்ள‌து.

இது தொட‌ர்பான‌ முந்தைய‌ செய்தி..
http://keelakaraitimes.blogspot.com/2012/10/blog-post_14.html


 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.