Saturday, December 15, 2012

கீழ‌க்க‌ரை அருகே வீட்டில் திருடிவிட்டு தூங்கிய திருடர்கள் கைது!

ஆளில்லாத வீட்டில் திருடிவிட்டு அசந்து தூங்கிய திருடர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.91 ஆயிரம் மற்றும் டூவீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கீழக்கரை அடுத்த திருப்புல்லாணி பெரியபட்டிணம் தங்கையாநகரைச் சேர்ந்தவர் பதவியா. இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார். நேற்று முன்தினம் இரவு இரண்டு பேர் பதவியா வீட்டிற்குள் புகுந்து திருடினர். அந்த நேரத்தில் வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததை அறிந்த திருடர்கள் சாவகாசமாக திருடிவிட்டு, விடிவதற்குள் எழுந்து சென்றுவிடலாம் என நினைத்து வீட்டிலேயே தூங்கினர்.

தூங்கியவர்கள் அசதியில் விடியும் வரை தூங்கிவிட்டனர்.
வெளியூர் சென்றிருந்த வீட்டுக்காரர்கள் காலையில் வீடு திரும்பியபோது யாரோ தங்கள் வீட்டில் தூங்குவதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். அப்போது விழித்த திருடர்கள் தப்பி ஓட முயற்சிக்கும்போது குடும்பத்தினர் ம‌ற்றும் அப்ப‌குதி இளைஞ‌ர்க‌ள் இருவரையும் மடக்கி பிடித்து திருப்புல்லாணி போலீசில் ஒப்படைத்தனர்.

இவர்களிடம் கீழக்கரை இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் திருப்புல்லாணி எஸ்.ஐ.கோட் டைசாமி விசாரணை நடத்தியதில், கீழக்கரை சிவகாமிபுரத்தைச் சேர்ந்த ராமு(26), தங்கச்சிமடத்தைச் சேர்ந்த தங்கம்(23) என தெரிந்தது. இருவரும் சேர்ந்து பல இடங்களில் திருடியதை ஒப்புக்கொண்டனர்.

கீழக்கரையில் சில தினங்களுக்கு முன்பு ஒரு கடையின் ஓட்டைபிரித்து உள்ளே இறங்கி ரூ.1 லட்சம் திருடியதும் இவர்கள்தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

ஏற்கனவே திருடிய ரூ.1 லட்சத்தில் 90 ஆயிரத்தையும், தற்போது பதவியா வீட்டில் திருடிய ரூ. ஆயிரம் சேர்த்து 91 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் திருடர்கள் பயன்படுத்திய டூவீலர் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


கீழக்கரை மற்றும் பெரியபட்டிணம் உள்பட பல இடங்க ளில் திருடிய வாலிபர்கள் ராமு, தங்கம். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரூ.91 ஆயிரம்.
 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.