Saturday, December 22, 2012

கீழ‌க்க‌ரையில லாரி உள்ளிட்ட‌ க‌ன‌ர‌க‌ வாக‌ன‌ங்க‌ள் நுழைவ‌த‌ற்கு நேர‌ம் நிர்ண‌ய‌ம்!

 பைல்(ப‌ழைய‌) ப‌ட‌ம்
http://keelakaraitimes.blogspot.com/2012/09/blog-post_11.html

கீழ‌க்க‌ரைக்கு ச‌ர‌க்கு ஏற்றி வ‌ரும் க‌ன‌ர‌க‌ வாக‌ன‌ங்க‌ளுக்கு ந‌க‌ருக்கு நுழைய‌ நேர‌ம் நிர்ண‌யிப்ப‌தின் மூல‌ம் ந‌க‌ரின் போக்குவ‌ர‌த்து நெரிச‌லை ஓர‌ள‌வுக்கு க‌ட்டுபாட்டுக்கு கொண்டு வ‌ர‌ முடியும் என‌ பல் வேறு த‌ர‌ப்பின‌ரும் கோரிக்கை விடுத்து வ‌ந்த‌ன‌ர்.

இந்நிலையில் கீழ‌க்க‌ரை ந‌க‌ரில் போக்குவரத்து சீரமைப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம், போலீசார் மற்றும் வர்த்தக சங்கம் சார்பில், கீழக்கரை டி.எஸ்.பி., சோமசேகர் தலைமையில் நடந்தது.

வர்த்தக சங்க தலைவர் சகாபுதீன் முன்னிலை வகித்தார். செயலாளர் சுப்பிரமணி வரவேற்றார்.

ஜன.1ம் தேதி முதல், காலை 8 முதல் 11 மணி வரை, மாலை 4 முதல் இரவு 7 மணி வரை, லாரி மற்றும் கனரக வாகனங்கள் நகருக்குள் வரக்கூடாது. வி.ஏ.ஓ., அலுவலகம் எதிரில், தனியார் பங்களிப்புடன் நிழற்குடையுடன் கூடிய சிக்னல் அமைத்தல், போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் கட்டட தொழிலாளர்களின் கூட்டத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுதல், நான்கு சக்கர வாகனங்கள் மாற்று வழியில் நகருக்குள் நுழைய ஒரு வழிப்பாதை ஏற்படுத்துவது குறித்து ஆய்வு செய்வது உள்ளிட்ட‌ ப‌ல்வேறு முடிவுக‌ள் மேற்கொள்ள‌ப்ப‌ட்டது.இன்ஸ்பெக்டர் கணேசன், வர்த்தக சங்க உதவி தலைவர்கள் தியாகராஜன், ஜகுபர் பொருளாளர் சந்தானம் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.
க‌ன‌ர‌க‌ வாக‌ன‌ங்க‌ளுக்கு நேர‌ம் நிர்ண‌யித்த‌தின் மூல‌ம் குறிப்பாக‌ காலை ம‌ற்றும் மாலையில் ப‌ள்ளி,கல்லூரி வாகன‌ங்க‌ள் அதிக‌ம் வ‌ரும் வேளையில் சாலையில்  லாரிக‌ளை நிறுத்தி ச‌ர‌க்கு ஏற்றி ,இற‌க்குவ‌தினால்  ஏற்ப‌டும் போக்குவ‌ர‌த்து நெரிச‌ல்க‌ள் ஓர‌ள‌வுக்கு குறையும் என‌ ச‌மூக‌ ந‌ல‌ ஆர்வ‌ல‌ர்க‌ள் தெரிவித்த‌ன‌ர்.
 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.