கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழக செயலாளர் முகைதீன் இப்ராஹிம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கீழக்கரை ஓடக்கரை பள்ளி வளாகத்தில் தபால் நிலையமாக செயல்பட்டு வந்த இடத்தில் தற்போது மகளிர் காவல் நிலையம் செயல்பட இருப்பதாக அறிந்தோம். அப்படி ஒரு திட்டம் இருந்தால் உரியவர்கள் மறுபரீசிலனை செய்ய வேண்டும்.இந்த இடத்தை மகளிர் காவல் நிலையம் செயல்படுவதற்கு கொடுக்க கூடாது.
அரசுதுறை அலுவலகங்கள் கீழக்கரை நகருக்குள் அமைந்து பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும் பட்சத்தில் மகிழ்ச்சிதான் அதே நேரத்தில் குடியிருப்புகள் அதிகம் இருக்கும் இடங்களில் மகளிர் காவல் நிலையம் அமைப்பது பிரச்சனைகளை அதிகரிக்கும்.அப்பகுதியில் ஏற்படும் சின்ன ,சின்ன பிரச்சனைகள் பூதகரமாக்கப்பட்டு பெண்கள் காவல் நிலையம் செல்லும் சூழ்நிலை ஏற்படும்.நமது ஜமாத்கள் மற்றும் தெருவாசிகளால் தீர்க்கப்படும் பிரச்சனைகள் கூட்ட மகளிர் காவல் நிலையத்துக்கு எடுத்து செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.இதனால் பல்லாண்டு காலமாக இருந்து வரும் ஜமாத் கட்டுப்பாடு,இறையான்மை பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படலாம்.
இதற்கு முன்பாக இந்த இடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மின் கட்டண அலுவலகம் அமைக்க அரசு தரப்பு கேட்டதாக அறிந்தோம் இது போன்ற அலுவலகங்கள் அமைக்க இந்த இடத்தை கொடுக்கலாம் என்பது எங்களது தாழ்மையான கருத்து.
எனவே சம்பந்தப்பட்டவர்கள் மக்கள் நலனை கருதி இப்பகுதியில் மகளிர் காவல் நிலையம் அமைக்க இடம் கொடுக்க கூடாது என மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பில் கேட்டு கொள்கிறோம் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழக செயலாளர் முகைதீன் இப்ராஹிம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ReplyDeleteகீழக்கரை நகருக்குள் அமைந்து பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும் பட்சத்தில் மகிழ்ச்சிதான் அதே நேரத்தில் குடியிருப்புகள் அதிகம் இருக்கும் இடங்களில் மகளிர் காவல் நிலையம் அமைப்பது பிரச்சனைகளை அதிகரிக்கும்.அப்பகுதியில் ஏற்படும் சின்ன ,சின்ன பிரச்சனைகள் பூதகரமாக்கப்பட்டு பெண்கள் காவல் நிலையம் செல்லும் சூழ்நிலை ஏற்படும்.நமது ஜமாத்கள் மற்றும் தெருவாசிகளால் தீர்க்கப்படும் பிரச்சனைகள் கூட்ட மகளிர் காவல் நிலையத்துக்கு எடுத்து செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.இதனால் பல்லாண்டு காலமாக இருந்து வரும் ஜமாத் கட்டுப்பாடு,இறையான்மை பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படலாம்.
இவர் கூறும் குற்றசாட்டு அனைத்தும் இவர் விளம்பரத்திற்கு...
1)ஜமாத்?கட்டுப்பாடு?தீர்க்கப்படும் பிரச்சனை?
2)இறையான்மை?தீர்க்கப்படும் பிரச்சனை?
கீழக்கரை நகராட்சி ஊரில் வெளியில்
பெண்கள் காவல் நிலையம் செல்லும் சூழ்நிலை கடந்த 2009 இதே நிலை தெடர்ந்து நீடீத்து வருகிறது என்பதுதான் உண்மை.