இருப்புப்பாதை குறுக்கிடும் சாலைகளில் 322.37 கோடி ரூபாய் செலவில், புதிய ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் கீழ்பாலங்கள் பணிகள் 8 மாவட்டங்களில் மேற்கொள்ள முதல்வர் ஜெயலலிதா அனுமதி அளித்துள்ளார்.
இந்த அறிவிப்பில் ஒன்றாக ராமநாதபுரம்-உச்சுப்புளி ரயில் நிலையங்களுக்கிடையே ராமநாதபுரம்-கீழக்கரை ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
நீண்ட காலமாக இப்பகுதி மக்கள் ராமநாதபுரம் கீழக்கரை ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்க கீழக்கரை சேர்மன் உள்ளிட்ட பல் வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ்வும் மேம்பாலம் கட்ட கோரிக்கை விடுத்திருந்தார்.
இது குறித்து ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் வெளிட்டுள்ள செய்தி குறிப்பில்,
கோரிக்கையை ஏற்று தற்போது மேம்பாலம் கட்ட அனுமதியும் நிதியும் வழங்கி உத்தரவிட்ட மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தகவல் : கீழை இர்பான்,கத்தார்.

அன்பு சகோதரர் சட்ட மன்ற பிரதிநிதி ஜவாஹிருல்லா அவர்கள் கீழ் கண்ட் கோரிக்கையில் சற்று கவனம் செலுத்தி வெற்றி கண்டு அவரை நம்பி ஓட்டளித்த மக்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கலாமே
ReplyDeleteமங்காத்தாவின் தங்கச்சி மகன்18 December 2012 6:28 PM keelakaraitimes
இந்த மேம் பாலத்தை கட்டி முடிக்க எந்தனை ஆண்டுகள் ஆகுமோ? இறைவனுக்கே வெளிச்சம். அது வரை கீழக்கரை - ராமாநாதபுரம் நெடுஞ்சாலையில் ஆர்.எஸ்.மடையிலிருந்து பட்டணம் காத்தான் வழியாக ராமநாதபுரம் - மண்டபம் நெடுஞ்சாலையை அடையும் பை பாஸ் (குறுக்கு) சாலை பணி முடிந்து நீண்ட நெடுங்காலமாகி விட்டது. அதை பயன் பாட்டிற்கு கொண்டு வந்தால் நகராட்சி தலைவி கூறிய சாலை சங்கடங்களெல்லாம் தீருமே. அதற்கு தலைவி தன் தலைமையிடத்தில் முயற்சிப்பாரா