Monday, June 20, 2011

100வது நாளை நோக்கி சாலையில் விழுந்த மரம் !


கீழக்கரை, ஜூன் 20 :
கீழக்கரையில் போக்குவரத்து மிகுந்த சாலையில் வேருடன் சாய்ந்தது ராட்சத மரம். இன்னும் 2 நாட்களுடன் மரம் சாயந்து 100வது நாள் நிறைவு பெறுகிறது! 3 மாதங்களாகியும் அப்புறப்படுத்தாததால் விபத்து அபாயம் நிலவுகிறது.
கீழக்கரையின் முக்கிய பகுதியான வள்ளல் சீதக்காதி சாலையில், 124 ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்த மரம், கடந்த மார்ச் மாதம் வேருடன் சாய்ந்து விழுந்தது. நகராட்சி ஊழியர்கள் மரத்தை சாலையில் இருந்து ஓரமாக ஒதுக்கி போட்டுவிட்டு சென்றனர். அங்கிருந்து அப்புறப்படுத்தவில்லை.
நடைபாதை பகுதியில் மரம் விழுந்து கிடப்பதால், மின்சாரம் இல்லாத இரவு நேரங்களில் சைக்கிளில் செல்வோரும் நடந்து செல்லும் வயதானவர்களும் மரத்தில் மோதி காயமடைகின்றனர்.

நகராட்சி நிர்வாக ஊழியர்கள் 124 வருட பழமையான மரம் என்ற "பாசத்தினால்" இன்னும் 124வருடம் சாலையில் இருந்து விட்டு போகட்டும் என்று அகற்றாமல் வைத்துள்ளார்கள் போலும் இது நம் வேலை இல்லை பொதுமக்களே அகற்றட்டும் என்ற கடமை உணர்ச்சியுடன் பணியாற்றுகிறார்களோ என்று எண்ண தோன்றுகிறது. இதுவரை 2க்கும் மேற்பட்ட வாகனங்கள் இம்மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. உயிரழப்பு ஏற்படுவதற்கு முன் இம்மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்!

சமூக ஆர்வலர் நடுத்தெரு செய்யது இப்ராகிம் கூறுகையில், �சாய்ந்து விழுந்த மரத்தின் ஒரு பகுதி, பக்கவாட்டில் நீட்டிக் கொண்டிருப்பதால், இரண்டு ஆட்டோக்கள் இதில் மோதி விபத்திற்குள்ளாகின.மேலும் அவ்வழியாக செல்வோர் தலையையும் பதம் பார்த்து விடுகிறது.
அருகிலுள்ள தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளும் மரத்தால் காயமடைய நேரிடுகிறது. இந்த மரத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்� என்றார்.

2 comments:

  1. சகோதரர் கார்த்திக், தங்களின் தகவலுக்கு நன்றி ! தொடர்ந்து உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.