Tuesday, May 29, 2012

ராம‌நாத‌புர‌ம் ப‌குதிக‌ளில் 15நாளில் லாட்ஜ்க‌ளில் க‌ண்காணிப்பு கேம‌ரா! காவ‌ல்துறை உத்த‌ர‌வு !


டி.ஐ.ஜி.சுப்பிர‌ம‌ணிய‌ன் மற்றும் எஸ்பி காளிராஜ் மகேஷ்குமார்(பைல் படம்)


வங்கிகளில் திருட்டு, கொள்ளைகளை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி கே மரா), அலாரம் பொருத்துவது, பாதுகாவலர்கள் நியமிப்பது தொடர்பாக ராமநாதபுரத்தில் எஸ்பி காளிராஜ் மகேஷ்குமார் த¬மையில் கூட்டம் நடந்தது. ராமநாதபுரம் டிஎஸ்பி முரளிதரன் வரவேற்றார். தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ் ணன், மாவட்ட குற்றப்பதிவேடு இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன் உட்பட இன்ஸ்பெக்டர்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, கூட்டுறவு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எஸ்பி பேசியதாவது: வங்கிகளில் திருட்டு, கொள்ளைகளை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள், அலாரம், செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வரும் வகையிலான அலாரம் போன்றவற்றை உடனடியாக பொருத்த வேண் டும். பாதுகாவலர்கள் நியமிக்க வேண்டும்.

இதுபோன்ற பாதுகா ப்பு வசதிகள் ஏற்படுத்தாத வங்கிகள் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏடிஎம்மில் முதியவர்களிடம் பணம் எடுத்துக் கொடுப்பது போல் ஏமாற்றுவது, வங்கிகளில் நகை அடகு வைத்து தருகிறேன் என இடைத்தரகர்கள் ஏமாற்றுவது போன்ற தகவல் களை போலீசுக்கு தெரி விக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து லாட்ஜ் உரிமையாளர்களுடன் நடந்த கூட்டத்தில், லாட்ஜ்களில் திருடர்கள், குற்றவாளிகள், தீவிரவாதிகள் தங்குவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் லாட் ஜ்களில் கண்காணிப்பு கேமராக்கள் 15 நாட்களுக் குள் பொறுத்த வேண்டும். சந்தேகப்படும்படி யாரும் தங்கினால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரி விக்க வேண்டும். தங்குபவர்களின் முழு விலாசத் தை பதிவு செய்ய வேண் டும். அதற்கான விண்ணப்பத்தை போலீசுக்கு கொடுக்க வேண்டும். லாட்ஜ்களில் பணியாற்றுபவர்கள், ஏற்கனவே பணியாற்றியவர்கள் குறித்து போட்டோவுடன் முழு விபரங்களையும் சேகரித்து வைத்திருக்க வேண்டும். இவ்வாறு எஸ்பி அறிவுறுத்தியுள்ளா.


ஏற்கென‌வே ஏர்வாடி த‌ர்ஹா ப‌குதி லாட்ஜ்க‌ளில் கண்காணிப்பு கேம‌ரா பொருத்த‌ டி.ஐ.ஜி.சுப்பிர‌ம‌ணிய‌ன் உத்த‌ர‌விட்டுள்ள‌து குறிப்பிட‌த‌க்க‌து.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.