Thursday, May 24, 2012
கீழக்கரை அருகே டெங்கு காய்ச்சல் !ஏராளமானோர் பாதிப்பு !நடவடிக்கை மந்தம் என குற்றச்சாட்டு!
பொதுமக்களை பரிசோதனை செய்யும் அர்சு மருத்துவர்.
வீட்டில் தேக்கி வைக்கப்பட்டிருந்த குடிநீரை பாட்டிலில் நிரப்பிய போதுஅதில் உள்ள கொசுக்களை படத்தில் காணலாம்
கீழக்கரை அருகே உள்ள நத்தம் குளபதம் கிராமத்தில் டெங்கு காய்ச்சல் பரவி 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும் சுகாதரத்துறை அலட்சிய போக்குடன் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.
இதுகுறித்து குளபதம் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரம் கூறியதாவது,
கடந்த ஒரு மாத காலமாக எங்கள் கிராமத்தில் ஏராளமானோர் காய்ச்சலால் பாதிப்படைந்தனர்.வேளானூர் அருகில் உள்ள சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர் ஆனாலும் குணமடையாததால் ராமநாதபுரம் தனியார் மருத்துவ்மனையில் சோதனை செய்த போது டெங்கு காய்ச்சல் என்று கூறியுள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறைக்கு தெரிவித்தேன் மேலும் கொசு ஒழிப்புக்காக புகை மருந்து மூன்று முறை அடித்தோம் தொடர்ந்து காய்ச்சல் பரவுவது நின்றபாடில்லை. இன்றுதான் உத்தரகோசமங்கை வட்டார அலுவலர் பொது மக்களை பரிசோதனை செய்தார் இவ்வாறு அவர் கூறினார்.
நத்தம் ஜமாத் தலைவர் கூறியதாவது, தொடர்ந்து காய்ச்சல் பரவி கொண்டுதான் இருக்கிறது கிராமத்தில் காய்ச்சலால பாதிக்கப்படாதவர்களே இல்லை என்ற அளவில் உள்ளது.இது குறித்து சுகாதாரத்துறையின் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று தான் அரசு மருத்துவர் பரிசோதனை செய்கிறார்.இதுவும் கண்துடைப்புதான். அரசு மருத்துவர் இந்நோய்க்கு தடுப்பு மருந்து இல்லை என்கிறார் இதனால் பெரும்பாலானோர் தனியார் மருத்துவமனையை நாட வேண்டியுள்ளது.எனவே உடனடியாக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இது குறிட்து உத்தரகோசமங்கை வட்டார மருத்துவ அலுவலர் மதார்ஷா கூறியதாவது, குடிதண்ணீரை தேக்கி குடங்களில் வைப்பால் அதில் ஏடிஸ் என்ற கொசுக்கள் உருவாகி இந்த காய்ச்சலை பரவுகிறது எனவே வீட்டில் தன்ணீரை தேக்கி வைக்காதீர்கள்.இந்த காய்ச்சலுக்கு தடுப்ப்பு ஊசியோ மருந்தோ கிடையாது.இப்பகுதியில் 3 பேருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .அதே போல் பாளையரேந்தல் கிராமத்தில் சேகர் மகள் கர்ணியா(4) என்ற குழந்தைக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.மற்ற அனைவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளாது என்றார்.
இது குறித்து மாவட்ட சுகாதார துணை இயக்குநர் உமா மகேஸ்வரியிடம் இப்பிரச்சனை சம்பந்தமாக (9444918687) என்ற எண்ணில் தொடர்பு கொண்ட கேட்க முயன்ற போது மணி ஒலித்து கொண்டே இருந்தது பல முறை முயற்சித்தும் எவ்வித பதிலும் இல்லை.
டெங்கு காய்ச்சல் போன்றவற்றை எதிர் கொள்ள அரசின் சுகாதாரத்துறை துரிதமாக செயல்படவேண்டும்.இது போன்று அலட்சிய போக்குடன் செயல்பட்டால் டெங்கு காய்ச்சல் அருகருகே உள்ள ஊர்களுக்கு வேகமாக பரவி பொதுமக்களை பாதிப்புக்குள்ளாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்ப்குதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.