Thursday, May 17, 2012

நாளை(18-மே)ராமநாதபுரம் வரும் விழிப்புணர்வு ரயில்! கீழக்கரையிலிருந்து செல்ல இலவச பஸ் ஏற்பாடு!


நாடு முழுவதும் எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ் ரயில் கண்காட்சி நடத்தப்படுகிறது. கடந்த 9ம் தேதி கன்னியாகுமரியில் இந்த கண்காட்சி ரயில் நிறுத்தப்பட்டது.


இந்நிலையில் நாளை ராமநாதபுரத்திற்கு ரயில் வருகை தர உள்ளது .

ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் பார்வைக்காக நாளை காலை 9மணியளவில் இந்த கண்காட்சி ரயில் நிறுத்தப்படும். இதை பார்வையிட வரும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் யாரும் பிளாட்பார டிக்கெட் எடுக்க வேண்டியதில்லை.


கீழக்கரையிலிருந்து பொதுமக்கள் பார்வையிட செல்லும் வகையில் இலவசமாக ராமநாதபுரத்திற்கு சென்று வர 2 பஸ்கள் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ,துணை த‌லைவ‌ர் ,க‌வுன்சில‌ர்க‌ள் உள்ளிட்ட‌ ப‌ல‌ரும் இதில் க‌ல‌ந்து கொள்ள‌ உள்ள‌ன‌ர்.

விழிப்புணர்வு ரயிலில் ஆறு பெட்டிகள் உள்ளது.

1.முதல் பெட்டியில் ஹெச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் குறித்த தொடுதிரை, 3டீ மாதிரி வகைகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.


2.இரண்டாவது பெட்டியில் ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் தொற்றுள்ளவர்களுக்கான மருத்துவ சேவைகளும்,


3.மூன்றாவது பெட்டியில் ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் தொற்றுள்ளவர்களை சமுதாயத்தில் அங்கீகரிப்பது தொடர்பான விளக்க படங்கள், கூட்டு மருத்துவ முறைகள் .


4. நான்காவது பெட்டியில் தாய்சேய் நலம், பொது சுகாதாரம் மற்றும் காசநோய், பறவை காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் குறித்த விழிப்புணர்வு படங்கள் உள்ளது.


5.ஐந்தாவது பெட்டியில் ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்த கருத்தரங்குகள், வகுப்புகள் நடக்கிறது.


6. ஆறாவது பெட்டியில் பால்வினை மற்றும் எய்ட்ஸ் தொற்றுகள் குறித்து டாக்டர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.



காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை பொதுமக்கள் பார்வையிடலாம்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.