Friday, May 18, 2012
நலிவை நோக்கி...கீழக்கரை அருகே தினமும் திணறும் தேங்காய் நார் நிறுவனங்கள்!!
குவிக்கப்பட்டுள்ள தேங்காய் நார்
விற்பனைக்கு தயாராக கயிறு
கீழக்கரை தேங்காய் நார் கயிறு தயாரிக்கும் நிறுவனங்கள் நலிவடைந்து மூடும் நிலைக்கு தள்ளப்படுவதாக உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கீழக்கரை அருகே அதன் சுற்றுவட்டாரத்தில் தேங்காய் நாரில் கயிறு தயாரிக்கும் நிறுவனங்கள் சுமார்12க்கும் மேல் உள்ளன இவை தொழிலாளர் பற்றாக்குறை ,மின் தட்டுப்பாடு காரணமாக ஏற்கெனவே நலிவடைந்திருக்கும் நிலையில் தற்போது அரசு மின் கட்டணத்தை மேலும் உயர்த்தியுள்ளாதால் தொடந்து இந்த தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எனவே அரசாங்கம் உடனடியாக தலையிட்டு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும் என இத்தொழிலில் ஈடுபடுவோர் கேட்டு கொண்டுள்ளனர்.
இதுகுறித்து காஞ்சிரங்குடியில் கயிறு தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வரும் கீழக்கரை கிழக்குத்தெருவை சேர்ந்த சுலைமான் கூறியதாவது,
காஞ்சிரங்குடி,அலவாக்கரைவாடி,வண்ணாங்குண்டு,ரெகுநாதபுரம்,செம்படையார்குளம்,தாமரைகுளம்,பெருங்குளம் போன்ற கிராமங்களில் தேங்காய் நாரில் கயிறு தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. ஏற்கெனவே பல்வேறு பிரச்சனைகளை இத்தொழிலில் சந்தித்து வரும் நிலையில்,(கிலோ வாட்) மின்சரத்திற்கு ரூ 30 செலுத்தி வந்தோம் தற்போது திடீரென ரூ120 ரூபாயாக உயர்த்தியுள்ளார்கள்.ஒவொரு நாளும் இந்நிறுவனத்தை நடத்தி செல்வது மிகுந்த சிரமமாக உள்ளது.இந்த விலை உயர்வு தாங்க முடியாத சுமையாகும் எனவே உடனடியாக அரசாங்கம் மானிய விலையில் மின்சாரத்தை குறைந்த விலைக்கு தர வேண்டும் இல்லையென்றால் இத்தொழில் மிகபெரிய நலிவை சந்திக்கும் என்றார்
இந்தியாவில் தயார் செய்யப்படும் தேங்காய் நார் கயிறுகளுக்கு வெளிநாடுகளில் ஏக டிமாண்ட். நம் நாட்டில் தென்னை மரங்கள் அதிக அளவில் இருப்பதால் இந்த தொழிலுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஏற்கெனவே உலகள வில் இத்தொழிலில் இருக்கும் பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா நாடுகள் உள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
நம் சொந்த நாட்டில் தொழில் தொடங்க முனைவோருக்கு நமது மத்திய அரசும் மாநில அரசும் ஆக்கமும்
ReplyDeleteஊக்குமும் மானியமும் தர முன் வர வேண்டும்.
சேது சமுத்திரம் திட்டம் வரைவில் செயல் படுத்த வேண்டும்.