குப்பைகளோடு கோழி கழிவுகள் மூட்டைகளாக கட்டி வீசப்படும் இடங்களில் ஒரு சில பகுதிகள்
வீட்டு வாசல்களையும் விட்டு வைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுகினறனர் அப்பகுதியை சேர்ந்தோர்...
கடற்கரை ,குடியிருப்பு பகுதி என்று ஒரு இடம் மிச்சமில்லாமல் கொட்டப்பட்டுள்ள கோழி கழிவுகள் அழுகி புழுக்கள் மற்றும் கிருமிகள் உற்பத்தியாவதால் கீழக்கரை பகுதியை சேர்ந்த 45 சதவீத குழந்தைகள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஆய்வில் வெளியாகியுள்ளது.
கீழக்கரையில் சேரும் குப்பைகளில் ஒரு பகுதி கோழி கழிவுகள் என்று கூறப்படுகிறது.
கீழக்கரை நகரில் மட்டும் 83 கோழிகறி கடைகள் உள்ளன.இவைகளில் நாளொன்றுக்கு ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட கோழிகள் வியாபாரத்திற்காக அறுக்கப்படுகின்றன.இவற்றில் சுமார் 675 கிலோ கோழி கழிவுகள் பிரித்தெடுக்கப்படுகின்றன.
இந்த கழிவுகள் அனைத்தும் நகரில் சேரும் குப்பைகளோடு கலந்து விடுகிறது.ஒரு சில கடைகளில் மட்டும் கழிவுகளை குப்பையில் வீசி எறியாமல் கோழி கழிவுகளை கால்நடைகளுக்கு தீவனமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து கால்நடை விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி தருகிறார்கள்.சமீபத்தில் கீழக்கரை நகர் முழுவதும் எக்ஸ்னோரா தொண்டு நிறுவனம் சார்பாக ஆய்வு நடத்தியதில் சுமார் 45% குழந்தைகளும்,30%சதவீத முதியவர்கள் மலேரிய,டைபாய்ட்,மஞ்சள் காமாலை உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு முக்கிய காரணம் தெருவோரம் குவிந்து கிடக்கும் கோழிக்கழிவுகள் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கீழக்கரையை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஹசனுதீன் கூறுகையில்,
கோழிக்கடை நடத்துபவர்கள் கழிவுகளை முறையாக அகற்றாமல் மக்கள் நடமாட்டமுள்ள கடற்கரை பகுதி,வடக்குத்தெரு மணல்மேடு பகுதி,இஸ்லாமியா பள்ளி மைதானம் அருகில்,கோகா அகமது தெரு ஹமீதியா விளையாட்டு மைதானம் அருகில் என்று பல்வேறு இடங்களில் வீசி செல்கின்றனர்.ஒரு படி மேலாக ஒரு சிலர் தெருக்களில் வீடுகளின் அருகிலும் எறிந்து விட்டு செல்கின்றனர்.நோய் பரப்பும் கிருமிகளின் தீவிரத்தை உணர்ந்து நகராட்சி நிர்வாகம் இதற்கு நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும்.
இது குறித்து யூத் எக்ஸ்னோரா தொண்டு நிறுவனத்தின் தொழில் நுட்ப மேலாளர் தணிகாச்சலம் விவரித்து கூறுகையில்,
கோழி கழிவுகளை குப்பைகளில் போட்ட 24 மணி நேரத்தில் புழுக்கள் உருவாகின்றன.
இது சூரிய ஒளி பட்டவுடன் நோய் கிருமிகள் உற்பத்தியாகி அருகில் உள்ள பகுதிகளுக்கு பரவுகின்றன.இவை கிடக்கும் தூரத்தில் நடந்து செல்பவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களாக இருப்பார்களேயானால் அவர்களை நோய் கண்டிப்பாக தாக்க கூடிய வாய்ப்புள்ளது.கோழி கழிவுகள் குவிந்துள்ள இடத்தில் சாதரணமாக 20 நிமிடம் நின்றாலே தொண்டை வலி ஏற்படுவதை உணரலாம் அந்த அளவுக்கு இக்கிருமிகளின் தாக்குதல் இருக்க கூடிய வாய்ப்புகள் அதிகமுள்ளது.இக்கோழி கழிவுகளை தண்ணீரில் உப்பிட்டு வேக வைத்து இன்னும் சில முறைகளை நடைமுறைபடுத்தி கால்நடைகளுக்கு தீவனமாக பயன் படுத்தலாம்.
it is shoking news .
ReplyDeletereally we appricate
your effort for creating awarness. goverment should take necessary action against this. we will try to save our younger generation.
it is shoking news . really we appricate your effort for creating awarness. goverment should take necessary action against this. we will try to save our younger generation.
ReplyDeletewhy my comments are not published
ReplyDelete