Friday, May 18, 2012

கீழக்கரையில் எஸ்.டி.பி.ஐயினர் 6பேர் மீது வழக்கு பதிவு !முன்விரோதத்தில் பதிந்துள்ளதாக குற்றச்சாட்டு !



கீழக்கரை நகர் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் தெருமுனை பிரசாரம் செய்வதாக கூறி காவல்துறையிடம் அனுமதி பெற்று அந்த கட்சியின் தலைவரை ஏர்வாடி முக்கு ரோட்டிலிருந்து ஊர்வலமாக அழைத்து வந்து விதிகளை மீறியதாக கூறி காவல் துறையினர்,நகர் தலைவர் அப்தாஹிர் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் பைரோஸ்கான்,துணை தலைவர் அப்பாஸ் ஆலிம்,நகர் செயலாளர் அப்துல் ஹாதி,மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீது மற்றும் ஹாஜி உள்ளிட்ட‌ 6பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்,


இது குறித்து கட்சியின் நகர் செயலாளர் அப்துல் ஹாதி கூறியதாவது,

இத்தனை காலமாக அனைத்து கட்சி தலைவர்,செயலாளர்கள் கீழக்கரை வருகை தந்தால் அவர்களை கீழக்கரை முக்கு ரோட்டிலிருந்து மரியாதை நிமித்தமாக ஊருக்குள் அழைத்து வருவது வழக்கம் அந்த வகையில் எங்கள் கட்சியில் மாநில தலைவர் வருகை தந்த‌ போது அவரை எங்கள் கட்சியினர் ஏர்வாடி முக்கு ரோட்டிலிருந்து அழைத்து வந்தோம். இதில் என்ன விதிமீறல் நடைபெற்று உள்ளது.அப்படி வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்றால் அனைத்து கட்சியினர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.இது கீழக்கரை காவல்துறை எஸ்.ஐ முன் விரோதத்தை மனதில் வைத்து வழக்கு பதிவு செய்துள்ளார் என்று நினைக்க தோன்றுகிறது.

1 comment:

  1. ஊரின் அமைதியை காவல்துறையே கெடுப்பது போல் உள்ளது .வேண்டாம் இந்த விபரீத போக்கு ..மக்களை அமைதியாக வாழ விடுங்கள்.

    எஸ்டிபிஐயினர் காவல்துறை மீது பப்ளிக் கேஸ் பைல் பண்ண வேண்டும்.


    கீழக்கரையான்..

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.